Posts

Showing posts from 2026

வெறுப்பு பிரச்சாரம்

திமுக-வில் உறுப்பினராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒரு மீம் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் இருந்ததை அப்படியே தருகிறேன்.  "இப்ப என்ன..‌. ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு 7 அமைச்சர் பதவி குடுத்ததுக்காக ஃபயர் விடனும்.. அதானே..?! சிறப்பா விட்டு விடுவோம்... உனக்கு இல்லாததா...?! ஒன்னு மட்டும் பண்ணு... விசிக வன்னியரசுக்கு கொடுத்த ஆதி திராவிடர் நலத்துறையை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கிட்ட குடுத்துட்டு, அவருகிட்ட இருக்குற அறநிலையத்துறையை வன்னியரசுகிட்ட கொடு... நானே முன் வரிசையில நின்று, மூணு ஃபயர் விடறேன்...!"  முதலில் இந்தப் பதிவில் இருக்கும் தர்க்கத்தைப் பார்ப்போம். பிறகு இதில் இருக்கும் மொழி அரசியலைப் பேசுவோம். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவர் வரவேண்டும் என்ற அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். அது ஒரு புரட்சிகரமான கருத்து. மாற்றுக் கருத்தே இல்லை எனக்கு.  என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் Women Empowerment Cell என்ற ஒன்று இருக்கும். அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஏன் எப்போதும் பெண்களையே நியமிக்கிறார்கள் என்று யோசித்தால், திரு. வன்ன...

"அம்மா இருந்திருந்தால் இவர் வந்திருக்க முடியுமா?" "கலைஞர் இருந்திருந்தால் இவர் வந்திருக்க முடியுமா?" "தலைவா படத்துக்காக கைகட்டி நின்றது ஞாபகமில்லையா?" இன்னொருவர் வந்துவிடவே கூடாது என்று அடக்குவதும், கருத்து சுதந்திரத்தை நசுக்குவதும் தான் பாசிசம் . மிரட்டியவரை கெத்தாகவும் மிரட்டப்பட்டவரை எள்ளலுடனும் பார்ப்பது அநீதி. அது சரி. ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் "அவள் ஏன் அங்கே போனாள்?" என்று கேட்பவர்கள்தானே நாம். 

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.  தேர்தல் நெருங்கும் சமயத்தில் அறிவுத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியைப் படித்துக் காட்டிய ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார். உலகத்தில் சன் நெட்வொர்க்கைத் தவிர வேறு மீடியாவே எதுவும் இல்லை என்று நம்புவதற்குப் பெயர்தான்... You know it if you know it. 

என்னுடைய அரசியல் புரிதல்

முன்னுரை ஆட்சியாளர்கள் நம்முடைய சேவகர்கள். எஜமானர்கள் இல்லை. அவர்கள் நமக்கு செய்வது அவர்களின்‌ கடமை . உதவி இல்லை. அதற்காக   ஆயுள் முழுக்க   அவர்களுக்கே ஓட்டு போட வேண்டும் என்பதும், அப்படி இல்லை என்றால் மக்கள் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதும் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான கருத்து. நான் ஓட்டுப் போட்ட த.வெ.க-வுக்கும் இது பொருந்தும்.  அவ்வளவு பெரிய கட்சிகளையே வீட்டுக்கு அனுப்பிய மக்கள், தன்னையும் அனுப்பத் தயங்க மாட்டார்கள் என்ற பயம் திரு. விஜய் அவர்களுக்கும் இருக்க வேண்டும்.

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை." "நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்." மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts).   அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார். (தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.)   இன்னும் இரண்டு கூற்றுகள். "சென்னை ஓர் அழகான ஊர்." "நண்டு  படம் நன்றாக இருக்காது." இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions). தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம்.  அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும்.  ... பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு. 1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது. 2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கரு...

ஒரு பணக்கார வீட்ல நாம இருக்கோம்னு வையிங்க. வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கறோம் ஒருநாள். அங்க ஒருத்தன்  நம்மகிட்டயே பத்து ரூவா குடுத்துட்டு கண்ணடிக்கிறான். கையில வாங்குன காச எச்சில் ஒழுகப் பாத்துட்டே வீட்டுச் சாவிய அவன்கிட்ட தர்றோம். அதே நாமதான் வாய்கிழிய பேசறோம் - அரசியல்வாதிக எல்லாம் அயோக்கியர்கள்னு. அடிமுட்டாள்கள் அயோக்கியர்களால்தான் ஆளப்படுவார்கள்.

தாங்கள் மட்டமானவர்கள் என்று நிரூபிக்க  பணம் செலவு செய்வோர் இரண்டு பேர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஃபோன் செய்து தங்களிடம் அட்மிஷன் போடச்சொல்லி நச்சரிக்கும் கல்லூரிகள்.  ஓட்டுக்கு காசு தரும் கட்சிகள்.

அவர்: தோற்கப்போகிற வேட்பாளருக்கு வாக்களித்து ஏன்  உங்கள் ஓட்டை 'வேஸ்ட்' செய்கிறீர்கள்? நான்: உங்கள் ஒருத்தரின் ஓட்டு இல்லையென்றாலும் உங்கள் வேட்பாளர்  ஜெயிப்பார்தானே? அவர்: சர்வ நிச்சயமாக. நான்: எனில், உங்கள்  ஓட்டும் வேஸ்ட்தான்.

இரசனை போதைக்கு அடிமையானவன்

திருஷ்டி பொம்மையும் அழகாயிருந்தால் என்ன செய்வது? அவன் இரசிகன். ... கவிதை ஏன் படிக்கட்டுகளாய்  எழுதப்படுகிறது என்பது புரியும் போது, கவிதையை நோக்கி ஓரடி எடுத்து வைக்கிறீர்கள். ஆம், அவன் இரசிகன். கவிதைக்கும். ... நிலவைப் படைத்து முடித்த கையில் அந்த ப்ரம்மன் உன்னைப் படைத்து விட்டான். ஆம்,  அவன் இரசனையின் இரசிகனுங்கூட. நன்றி வைரம். வைரம்  ஆல்ஸோ நோன் ஏஸ் வைரமுத்து. ... இதைக் கேளுங்களேன். இச்சையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட வரிகள். அவள்:  ... இச்சையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட வரிகள். அவள்: பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டுப்பாடி ஆவதென்ன?  அவன்: ஸாரி. அவர். ஏனென்றால், அது அவர்தான். அவர்: பல்லவி சரணம் முடிந்தவுடன் நாம் பங்குபெறும் காட்சி என்ன? அடடா. இரசிகன். இரசிகன். இந்த முறை இது ஒரு புது இரசிகன். இரசிகர். ... இச்சையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட வரிகள். அவள்:  என்று டைப் செய்துவிட்டு, அவ்வரிகளைக் கேட்க ஒலிக்க விட்டான். செவ்வானம் சின்னப்பெண் சூடும் பாட்டை. அந்த வரிகளை மட்டுமா கேட்பான்? இல்லை. முழுப்பாட்டையும்‌ கேட்பான். இதைக் கேளுங்கள். அப்படிக் கேட்...

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?

இப்போது தீர்ப்பு வந்துள்ள ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை எடுத்துக்கொள்வோம்.  அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  இதை வாட்ஸேப் ஸ்டேட்டஸில் பதிவிடும் பலரும் "நீதி வென்றது" என்று பதிவிட்டு வருகிறார்கள்.  முதலில் எதிலெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.‌ அவ்வாறு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும்‌ போது அது பாராட்டப்பட‌ வேண்டும்.  அதிலே இரண்டாம்‌ கருத்தே இல்லை.  இப்போது தண்டனை என்பதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.  பள்ளிக்குள்ளே குப்பை போட்டால் பத்து ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்வோம். அதன் நோக்கம் பத்து ரூபாயை இழப்பதற்கு அஞ்சி யாரும் குப்பை போடக்கூடாது என்பதேயொழிய, அந்தப் பணத்தை கூலியாட்களுக்குக் கொடுத்து குப்பையை அள்ளிப் போடலாம்‌ என்பதல்ல. இந்த உதாரணத்தில் பிரச்சினை குப்பை இல்லை. குப்பை போட வேண்டும்‌ என்று ஒருவர் மனதில் தோன்றும்‌ எண்ணமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. தொடர்ந்து நூறு வருடங்களுக்கு அந்தப் பள்ளியில் தினந்தோறும் பத்து பத்த...

போலாகுதல்

பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் ஆசிரியர் ஒருவர் கரும்பலகையில் இருப்பதை அழிக்கச் சொன்னால், நான் நீயென்று போட்டி போட்டுக் கொண்டு முன்வருவர். (குறைந்தபட்சம் நான் ஒரு பிள்ளையாக இருந்தபோதாவது) கரும்பலகையை அழிப்பதில் அப்படியென்ன குதூகலம்? ஏனென்றால் அது ஒரு புது அனுபவம். அவ்வளவு பெரிய பலகை தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வரும் பெருமிதம், ஆசிரியருக்கு உதவி செய்வதில் கிடைக்கும் கௌரவம் ஆகியவற்றையும் தாண்டி - வேறு ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யாமல் அந்தக் குறிப்பிட்ட செயலில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்காகவே செய்யும் ஒரு autotelic செயல் அது. வெறுமனே ஓர் இழுப்பு இழுத்தால் எழுத்துகள் அனைத்தும் மாயமாகிவிடும் பேராச்சர்யம், அழித்தபின் அந்த டஸ்ட்டரை தட்டி வருவதற்காக வகுப்பு நேரத்திலேயே வெளியே சென்று வருவதற்கான சிறப்பு அனுமதி, (அந்த அனுமதியை சில நேரங்களில் பெறக்கூடத் தேவையில்லை) டஸ்ட்டரை தட்டும்போது ஒரு மாயாஜாலம் போல அதிலிருந்து கிளம்பும் வெண்புகை என்று கரும்பலகை அழிப்பு என்பது குழந்தைகளுக்கு அலாதி இன்பம் தரக்கூடியது.  எல்லாச் செயல்களுமே அவர்களுக்கு அப்படித்தான். ஏனென்றால், பெரும்பான்மையானவை அவர்களுக்குப...

கவிதை

கவிதை கவலையற்றது ... கவிதை என்பது இயற்கை உபாதை அடக்கி வைத்தல் கடினம் வராதபோது வரவைப்பதோ அசாத்தியம் ... பொறிதட்டி பின் எழுத்தாகாமல்  போகும் கவிதைகளைப் போலவே காணாமல் போனது உருவகம் ... எழுதத் தெரியாதவருக்குத் தோன்றும் கவிதையானது அதிகப் பிரசங்கம் செய்வதில்லை ... எவருக்கும் தெரியாது எந்த வரியை அடித்துத் திருத்தி இந்த வரியை எழுதினேனென்று ... கவிதை என்பது புணர்ச்சியின்பம்  அதைப் படம் பிடித்து மாட்டி அவ்வின்பத்தைப் பகிரும் பிரயத்தனமே அக்கவிதையை எழுதுவதென்பது ... ஒரே ஆற்றில் இருவர் குளித்தாலும் ஒரே நீர் அவர்களை நனைக்குமா? கவிஞர் தம் கவிதை மூலம் உம்மை ஆற்றில் குளிக்க அழைக்கிறார் நீர் அவரது கவிதையைப் படிக்கையில் அது அங்கே இருப்பதில்லை ... ஒரு கவிதை தோன்றும்போது கவிஞர் பிறக்கிறார் அக்கவிஞரால் எழுதப்பட்டு அக்கவிதை மரிக்கிறது ... கவிதை என்பதொன்றும் சமையலல்ல அது கவிஞர் சப்பிப் போட்ட பனங்கொட்டை ... கவிதை ஓர் அனுபவம் அதைப் புரிந்துகொள்ளவே கற்பனை வேண்டும் எழுத வெறும் சரணாகதி போதும் ...

நீ உன் இயல்பிலில்லை என்றனர். என் இயல்பில்  இல்லாமல் இருப்பதும் என் இயல்பே.

நினைத்ததை முடிப்பதே வெற்றி என்றானால், தடுக்கி விழுந்து பல்லுடைக்காமல் கழிவறை சென்று, உரிய‌ தசையைத் தளர்த்தி சிறுநீர் கழிப்பதும் அதுவே.

வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்று சொல்பவர்களும் தலைவாரிக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

என்னாலிதெழுதப்படாவிடினுமெழுதப்படுமிதின்னொருவரால்

எழுத்தின் உச்சம் எழுதாமலிருப்பது. எழுத ஏதேனும் நோக்கமுண்டு. எழுதாமல் இருப்பதிலும் நோக்கமுண்டு. நோக்கமற்றிருப்பதொரு நோக்கமில்லையா? ... இன்றெழுதப்படுவதென்பது என்றுமே எழுதப்படாததாகிப்போகும் காலம் வருமெனும்போது, எழுதுவதன் நோக்கந்தானென்ன? ... குழலெடுத்திசைத்திடுந்தேவையின்றி, மூளைக்குள்ளேயே கேட்டிடுமிசையெனும்போதும் குழலெடுத்திசைத்திடும் வீணரே கலைஞர். என்னிலே தோன்றியதோரெண்ணம் எல்லாரையுமடையட்டுமென்பதென்னெண்ணமா? அல்லதவ்வெண்ணம் என் மூலமேயவரையடையட்டுமென்பதென்னெண்ணமா? ... என்னில் தோன்றியவெண்ணம் என்னெண்ணமில்லை. அதோரெண்ணம்.  என்னாலதெழுதப்படாவிடினுமெழுதப்படுமதின்னொருவரால். எழுத்தழியும். எண்ணமழியாது. இப்போதிந்தவுலகில் எழுதப்பட்டுக்கிடக்கும் அனைத்துமிந்தக்காலமெனும் பெருவெள்ளத்தில் நிர்த்தாட்சண்யமாய் துடைத்தழிக்கப்பட்டபிறகும், லட்சங்கோடியுகங்கழித்து இன்னொரு மூளையிலுந்தோன்றலாமிப்படி மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே! ... மீண்டுமொரு காலத்தில் அதுவே மீண்டும் தடயமின்றியழிந்தோடும். ... பிரபஞ்சத்திலுலவித்திரியுமனைத்தெண்ணங்களையுமேந்திக்கொள்ளுமளவு பரந்த மடி மானிடர்க்கில்லை. ... இருந்துமெழுத...

பொருளறியா பொம்மை

பஸ்ஸில் ஒரு பாட்டு. பனிக்காற்றே பனிக்காற்றே! பரவசமா பரவசமா? தொடர்ந்து பாட, பஸ் ஸ்டாண்ட் வந்தது. உயிரால் உயிரை... பாட்டை நிறுத்தினார் ட்ரைவர். டீ குடிக்கப் போனார். இருந்த மக்கள் இறங்கி, வேறு மக்கள் ஏறிக் காத்திருந்தனர். ட்ரைவர் வந்தார்.  பாட்டைப் போட்டார். ஐயோ. ச்சீ!!!

மீச்சிறு வாழ்வு

என்னிடம் ஒரு ஜோக் உள்ளது.  இதோ இந்த ஓட்டலில் எனக்கு முன்பாக உட்கார்ந்து, புரோட்டாவைத் தின்று முடித்த பின்னும் தேங்காய்ச் சட்னியையும் சாம்பாரையும் கலந்து உறிஞ்சிக் குடிக்கும் இந்தத் தாத்தனிடம் சொன்னாலும், புரையேறச் சிரிப்பார். ஏனோ சொல்லமாட்டேன். ட்ராஃபிக் சிக்னலில்  பச்சை வருவதற்குள்ளாக ஒரு பத்துப் பேரிடமாவது சொல்லிச் சிரிக்க வைத்திடலாம். சொல்லவில்லை நான். நீண்ட நாளாக நான் தேடும் ஒரு விடுகதைக்கான விடை, இதோ இந்த ஆஸ்பத்திரியில் வருவோரையெல்லாம் இன்முகத்தோடு விசாரிக்கிறாரே, இந்த வடிவான உதடுகளையுடைய செவிலிக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு மிகப் பிடித்த திரைப்படம் ஒன்று, சரியான சில்லறை தராததற்காக என்னிடம் சிடுசிடுக்கும் நடத்துனருக்கும்  மிகப் பிடித்ததாயிருக்கும். பந்தியின் கடைசி இட்லியை மட்டும் பிசைந்து சாப்பிடும் பழக்கம், இதோ சாலையில் என்னைக் கடந்து போகும் இந்த தேன்குரலாளுக்குமிருக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டால் படத் தலைப்பின் எழுத்துரு மீது எனக்கிருக்கும் காதல் என் பக்கத்து தெருக்காரருக்கும் இருக்கலாம். ஆனாலும் என்ன? நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டதையே பேசி, பேசாததைப் பேசாமல் தவிர்...

வெள்ளிக்கிழமை. ஒரு கதவு. தட்டப்படுகிறது. ஏற்கனவே பளபளப்பாயிருக்கும் அந்தத் தேக்குக் கதவு, மாலையின் செம்மஞ்சள் கிரணங்களினால் மேலும் பளபளப்பு. மீண்டும் தட்டப்படுகிறது. தாழ் விடுவிக்கப்படும் ஒலித்துணுக்கு கேட்கிறது. கதவு மெதுவாக உள்வாங்குகிறது. அதன் முழு வீச்சில் சரி பாதியளவு திறக்கிறது. அப்படியே நிற்கிறது. ### செவ்வாய்க்கிழமை. கதவு அதே மாதிரி உள்வாங்கியது. அதே சரி பாதியளவு திறந்து அப்படியே நின்றது. மெதுவாக ஒரு கண் மட்டும் எட்டிப்பார்த்தது. ஓர் அழகான பெண்ணின் கண். அழகான பெண்ணின் ஒரு கண். "யாருங்க வேணும்?" கொஞ்சும் குயில் போன்றதொரு குரல். கரைந்து கரைந்தே கரைந்து போனதொரு காக்கைக்குரலும் தொடர்ந்து கேட்டது. "நீதான்டி வேணும். ஆஆஆஅ..." அந்த ஆண் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டான். அவளை அள்ளியெடுத்து, அவனுடைய முகம் புகுந்து போக சௌகர்யம் அமைந்த இடங்களிலெல்லாம், முத்தமிட்டான். அவள் சிரிப்பையும் அடக்க மாட்டாமல், அவனையும் சமாளிக்க முடியாமல் திண்டாடினாள்.  முகத்தை நிமிர்ந்து பார்த்து அவன் சொன்னான். "ம்ம்ம்... நீ கதவத் தொறப்பனு நெனைக்கவே இல்ல. ஆஹா, கேஸ் சிலிண்டர் போட வந்...

கெட்ட வார்த்தை

பாகம் ஒன்று - பொறுமை தேவைப்படும்‌ முன்னுரை நான் ஓர் ஆசிரியன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் இருந்த ஆசிரியன்.  அந்தக் கல்லூரியில் ஆண்டுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரம் அது.‌ மே 9 ஆம் தேதி ஆண்டு விழா. ஏப்ரல் 11 ஆம் தேதி குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.‌ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணி (MoC) எனக்கு கொடுக்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் ஸ்க்ரிப்ட் எழுதி... மணிகண்டன் என்றொரு மாணவனை வைத்து அதற்கான பின்னணி இசையை எடிட் செய்து... தமிழுக்கு இரண்டு மாணவர்களையும், ஆங்கிலத்துக்கு நான்கு மாணவர்களையும் பயிற்றுவித்து அவ்வப்போது பயிற்சியளித்து வந்தேன். மணிகண்டனைத் தவிர மற்ற அனைவருமே கலை நிகழ்ச்சிகளிலும் இருந்ததால், அதற்கு அவர்கள் ஒத்திகை பார்க்கப் போன நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுவிழாவில் ஒரு மிக முக்கியமான பகுதி இருந்தது. முதல்வர் வழங்க வேண்டிய ஆண்டறிக்கை. அதாவது, கடந்த ஓர் ஆண்டில் செய்யப்பட்ட கல்லூரியின் சாதனைகள், மாணவர்களின் சாதனைகள் மற்றும்‌ ஆசிரியர்கள...