"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை." "நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்." மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts). அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார். (தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.) இன்னும் இரண்டு கூற்றுகள். "சென்னை ஓர் அழகான ஊர்." "நண்டு படம் நன்றாக இருக்காது." இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions). தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம். அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும். ... பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு. 1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது. 2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கரு...
அவர்: *தலையை சொரிந்துகொண்டே சென்றுவிட்டார்*
ReplyDeleteஅவருக்கு புரியறக்கு வாய்ப்பு கம்மி. நல்ல வேள பா நீ written ல போட்டுட்டே. Election பத்தி ஏதாவது வந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன். நன்றி.