Posts

Showing posts from April, 2026

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை." "நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்." மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts).   அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார். (தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.)   இன்னும் இரண்டு கூற்றுகள். "சென்னை ஓர் அழகான ஊர்." "நண்டு  படம் நன்றாக இருக்காது." இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions). தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம்.  அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும்.  ... பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு. 1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது. 2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கரு...

ஒரு பணக்கார வீட்ல நாம இருக்கோம்னு வையிங்க. வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கறோம் ஒருநாள். அங்க ஒருத்தன்  நம்மகிட்டயே பத்து ரூவா குடுத்துட்டு கண்ணடிக்கிறான். கையில வாங்குன காச எச்சில் ஒழுகப் பாத்துட்டே வீட்டுச் சாவிய அவன்கிட்ட தர்றோம். அதே நாமதான் வாய்கிழிய பேசறோம் - அரசியல்வாதிக எல்லாம் அயோக்கியர்கள்னு. அடிமுட்டாள்கள் அயோக்கியர்களால்தான் ஆளப்படுவார்கள்.

தாங்கள் மட்டமானவர்கள் என்று நிரூபிக்க  பணம் செலவு செய்வோர் இரண்டு பேர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஃபோன் செய்து தங்களிடம் அட்மிஷன் போடச்சொல்லி நச்சரிக்கும் கல்லூரிகள்.  ஓட்டுக்கு காசு தரும் கட்சிகள்.

அவர்: தோற்கப்போகிற வேட்பாளருக்கு வாக்களித்து ஏன்  உங்கள் ஓட்டை 'வேஸ்ட்' செய்கிறீர்கள்? நான்: உங்கள் ஒருத்தரின் ஓட்டு இல்லையென்றாலும் உங்கள் வேட்பாளர்  ஜெயிப்பார்தானே? அவர்: சர்வ நிச்சயமாக. நான்: எனில், உங்கள்  ஓட்டும் வேஸ்ட்தான்.

இரசனை போதைக்கு அடிமையானவன்

திருஷ்டி பொம்மையும் அழகாயிருந்தால் என்ன செய்வது? அவன் இரசிகன். ... கவிதை ஏன் படிக்கட்டுகளாய்  எழுதப்படுகிறது என்பது புரியும் போது, கவிதையை நோக்கி ஓரடி எடுத்து வைக்கிறீர்கள். ஆம், அவன் இரசிகன். கவிதைக்கும். ... நிலவைப் படைத்து முடித்த கையில் அந்த ப்ரம்மன் உன்னைப் படைத்து விட்டான். ஆம்,  அவன் இரசனையின் இரசிகனுங்கூட. நன்றி வைரம். வைரம்  ஆல்ஸோ நோன் ஏஸ் வைரமுத்து. ... இதைக் கேளுங்களேன். இச்சையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட வரிகள். அவள்:  ... இச்சையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட வரிகள். அவள்: பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டுப்பாடி ஆவதென்ன?  அவன்: ஸாரி. அவர். ஏனென்றால், அது அவர்தான். அவர்: பல்லவி சரணம் முடிந்தவுடன் நாம் பங்குபெறும் காட்சி என்ன? அடடா. இரசிகன். இரசிகன். இந்த முறை இது ஒரு புது இரசிகன். இரசிகர். ... இச்சையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட வரிகள். அவள்:  என்று டைப் செய்துவிட்டு, அவ்வரிகளைக் கேட்க ஒலிக்க விட்டான். செவ்வானம் சின்னப்பெண் சூடும் பாட்டை. அந்த வரிகளை மட்டுமா கேட்பான்? இல்லை. முழுப்பாட்டையும்‌ கேட்பான். இதைக் கேளுங்கள். அப்படிக் கேட்...

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?

இப்போது தீர்ப்பு வந்துள்ள ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை எடுத்துக்கொள்வோம்.  அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  இதை வாட்ஸேப் ஸ்டேட்டஸில் பதிவிடும் பலரும் "நீதி வென்றது" என்று பதிவிட்டு வருகிறார்கள்.  முதலில் எதிலெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.‌ அவ்வாறு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும்‌ போது அது பாராட்டப்பட‌ வேண்டும்.  அதிலே இரண்டாம்‌ கருத்தே இல்லை.  இப்போது தண்டனை என்பதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.  பள்ளிக்குள்ளே குப்பை போட்டால் பத்து ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்வோம். அதன் நோக்கம் பத்து ரூபாயை இழப்பதற்கு அஞ்சி யாரும் குப்பை போடக்கூடாது என்பதேயொழிய, அந்தப் பணத்தை கூலியாட்களுக்குக் கொடுத்து குப்பையை அள்ளிப் போடலாம்‌ என்பதல்ல. இந்த உதாரணத்தில் பிரச்சினை குப்பை இல்லை. குப்பை போட வேண்டும்‌ என்று ஒருவர் மனதில் தோன்றும்‌ எண்ணமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. தொடர்ந்து நூறு வருடங்களுக்கு அந்தப் பள்ளியில் தினந்தோறும் பத்து பத்த...

போலாகுதல்

பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் ஆசிரியர் ஒருவர் கரும்பலகையில் இருப்பதை அழிக்கச் சொன்னால், நான் நீயென்று போட்டி போட்டுக் கொண்டு முன்வருவர். (குறைந்தபட்சம் நான் ஒரு பிள்ளையாக இருந்தபோதாவது) கரும்பலகையை அழிப்பதில் அப்படியென்ன குதூகலம்? ஏனென்றால் அது ஒரு புது அனுபவம். அவ்வளவு பெரிய பலகை தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வரும் பெருமிதம், ஆசிரியருக்கு உதவி செய்வதில் கிடைக்கும் கௌரவம் ஆகியவற்றையும் தாண்டி - வேறு ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யாமல் அந்தக் குறிப்பிட்ட செயலில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்காகவே செய்யும் ஒரு autotelic செயல் அது. வெறுமனே ஓர் இழுப்பு இழுத்தால் எழுத்துகள் அனைத்தும் மாயமாகிவிடும் பேராச்சர்யம், அழித்தபின் அந்த டஸ்ட்டரை தட்டி வருவதற்காக வகுப்பு நேரத்திலேயே வெளியே சென்று வருவதற்கான சிறப்பு அனுமதி, (அந்த அனுமதியை சில நேரங்களில் பெறக்கூடத் தேவையில்லை) டஸ்ட்டரை தட்டும்போது ஒரு மாயாஜாலம் போல அதிலிருந்து கிளம்பும் வெண்புகை என்று கரும்பலகை அழிப்பு என்பது குழந்தைகளுக்கு அலாதி இன்பம் தரக்கூடியது.  எல்லாச் செயல்களுமே அவர்களுக்கு அப்படித்தான். ஏனென்றால், பெரும்பான்மையானவை அவர்களுக்குப...