தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை - 1
படம் : பாமா விஜயம் (1967) உரையாடல் : கே. பாலச்சந்தர் இயக்கம் : கே. பாலச்சந்தர் தயாரிப்பு : மனோகர் பிக்சர்ஸ் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைப் பற்றிய பேட்டியொன்றில் அப்படத்தின் திரைக்கதையாசிரியர் கமல்ஹாசன் நகைச்சுவையைப் பற்றிய மிக முக்கியமானதொரு விஷயத்தைப் பதிவு செய்திருந்தார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்லுமளவுக்கு அது எனக்கு ஞாபகமில்லை என்றாலும், அதன் சாரம் இதுதான். "வழக்கமாக காமெடிப் படங்களில் கதை மாந்தர்கள் பலரும் (if not அனைவரும்) ஒரு யதார்த்தமில்லாத, மிகைப்படுத்தப்பட்ட கோமாளித்தனத்துடனே இருப்பர். அந்தக் கோமாளித்தனம் அவர்களின் பேச்சு மற்றும் உடல்மொழியில் மட்டுமல்லாது, மொத்தமாகவே அவர்கள் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவே காட்டப்படுவார்கள். ஆனால், மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் கதாபாத்திரங்கள் சற்றே நம்பகத் தன்மையுடனும் யதார்த்தத்தை மீறாமலும் இருக்கும்" என்றார். அவர் சொன்ன மாதிரி கோமாளித்தனமான பாத்திரங்களும் மட்டமானவை என்று நாம் சொல்லிவிட முடியாது. Slapstick comedy என்ற அந்த மிகப் பிரபலமடைந்த, அதைவிட முக்கியமாக, மிகவும் சிரிப்பூட்டக் கூடிய நகைச்சுவையை கமல்ஹாசனே கூட ஆராதிக்கும் சார...