Posts

Showing posts from 2024

பக்கெட் தூக்கிய பெண்

தூக்கமுடியாமல் தூக்கியபடி, ஒரு நீர்க்கோலத்தை  இறைத்துச் சென்றாள் சாலை நெடுக. பக்கெட் தூக்கிய பெண்.

முடிவிலா ஓவியம்

சின்ன வயதில் "நிவாரண் 90" பாக்கெட்டைப் பார்க்கும் போது, அது ஒரு முடிவிலி என்று தோன்றியது.  அந்தப் பாக்கெட்டில் இருக்கும் படத்தை ஓவியமாக ஒருவர் வரையத் தொடங்கினால் அவர் நித்தியத்திற்கும் வரைந்து கொண்டேதான் இருக்க வேண்டும். அதை வரையத் தேவையான மை முடிவில்லாமல் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியென்ன பிரமாதமான படம் அது? முதலில் நிவாரண் 90 என்பது ஓர் இருமல் மருந்து. ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ இருக்கும். ஒரு ஷாம்பூ சாஷே போலத்தான் இருக்கும். அதனை வாங்கி அதன் வாயைக் கிழித்தெறிந்து விட்டு வாய்க்குள்ளே கொட்டிக்கொள்ளலாம். கடைக்காரர் மீதிச்சில்லறை தருவதற்குள் மருத்துவத்தை முடித்துவிடலாம்.  அந்த நிவாரண் 90யின் பாக்கெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் படத்திலும் ஒருவர் அதையேதான் செய்துகொண்டிருப்பார். அவர் கையிலும் ஒரு நிவாரண் 90 இருக்கும் அதை அவர் வாய்க்குள் கொட்டிக் கொண்டிருப்பார். அதாவது, நிவாரண் 90 பாக்கெட்டில் இருக்கும் படம்‌ என்னவென்றால் ஒருவர் நிவாரண் 90யை வாய்க்குள் கொட்டுவது. அந்தப் படத்தில் இருப்பவர் வேறு எதையாவது குடித்திருந்தாலாவது பரவாயில்லை. அவரும் அதையேவா குடித்துத் தொலைய வேண்டு...

Meta Story

Me: I will tell you an idea for a story. Could you write it? Meta: I'd love to write a story based on your idea. Please go ahead and share it with me. I'll do my best to bring your concept to life with my words. Don't worry if your idea is rough or unfinished – I'll help develop it into a compelling narrative. What's your idea? Is it a sci-fi adventure, a romantic tale, a mystery, or something else? Share it, and let's create a story together! Me: Okay. The story is about a father and his daughter. One day the daughter goes to cinema after lying to her father that she is going to school. However, the father finds out the truth.  Now, you should write a sentence that's like an infinite loop. Here is the idea.  1) The father knows that the daughter went to cinema. 2) The daughter knows that his father knows the truth. However, she thinks that the father doesn't know the fact that she knows that the father knows about her cinema going. 3) But, the father kn...

எகனைக்கு மொகனை

சம்பவம் 1 சிறு வயதில் என்னுடைய அக்காவின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தில் அவரது தோழிகள் எழுதியிருந்த க்ளீஷே வாசகங்களுக்குக் கீழே 'கமெண்ட்' எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் குறைந்தபட்சம் எனக்கு மட்டுமாவது சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். நிற்க.  சம்பவம் 2 பல வருடங்கள் கழித்து வெங்கடேஸ்வரா கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, டிபாட்மெண்ட் கம்ப்யூட்டரில் நண்பர் தனசேகர் சேமித்து வைத்திருந்த புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. அப்போது அந்த அறையில் நான் மட்டுந்தான் இருந்தேன். பேயோன் எழுதிய "பேயோன் 1000" புத்தகத்தைப் படித்தபோது தன்னந்தனியனாக வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன்.  சிரிப்பு ஓய்ந்து யோசித்துப் பார்த்தபோது, 'இப்படிக் கூட ஒரு புத்தகம் போடலாமா' என்ற வியப்புத் தோன்றியது. "பேயோன் 1000" என்பது வேறொன்றுமில்லை. பேயோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் (இப்போது X) பதிவிட்ட 1000 ட்வீட்களின் தொகுப்புதான் அது. (ஆமா, ட்விட்டருக்கு X என்று பெயர் மாற்றினார்கள். ட்வீட்டுக்கு இப்போது என்ன பெயர்?) மேலே சொன்ன 2 சம்பவங்களும் என்...

மாயச்சுவர்

பால்யத்தில் என்னுடைய ஹீரோக்கள் சற்றே வித்தியாசமானவர்கள். துப்பாக்கியெடுத்துச் சுடும் போலீஸ்காரர்களோ, மல்யுத்த வீரர்களோ என்னுடைய ஆதர்ச நாயகர்களாக இருக்கவில்லை.  ஒருமுறை "பெரியவனாகி என்னவாகப் போகிறாய்?" என்று கேட்கப்பட்டதற்கு, "பஸ் கண்டக்டர்" என்று சொல்லியிருக்கிறேன். பயணிகளிடம் பணம் வாங்கிவிட்டு, மீதிச் சில்லறை தருவதற்காக, அவருடைய தோளிலே தொங்கும் பையினை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டும்போது, உள்ளே கிடக்கும் சில்லறைக் காசுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு சத்தம் உண்டாக்குமே! அதுவே எனக்கு கண்டக்டர் தொழிலின் பேரில் காதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நிற்க. என்னுடைய நாயகர்களில் சர்வ வல்லமை பொருந்தியவராக நான் பார்த்தது எங்கள் ஊருக்கு வந்து சினிமா போஸ்டர் ஒட்டுபவரைத்தான். எங்களுடைய ஊர் நாமக்கல் பாளையம். எங்களுக்கு மிக அருகாமையிலிருந்த டவுன் என்றால் அது கொளப்பலூர்தான். ஒரு tongue twister போல இருக்கும்  இந்தப் பெயரை, எங்கள் ஊர் மக்கள் கொளப்பூர் என்று எளிமைப்படுத்தியே உச்சரிப்பார்கள். கொளப்பூரில் இருந்த ஒரு பழைய தியேட்டர் கருணாம்பிகா. அங்கே புதிதாக வெளியாகும் படங்கள் எல்லாம் போட மாட்டார்கள்...

மறக்குமா நெஞ்சம்?

அந்தப் பசுமையான மரத்திலிருந்து காகிதப் பூக்கள் ஒரு தாளகதியுடன் விழுந்து கொண்டிருந்தன. உண்மையில் 'விழுந்து' கொண்டிருந்தன என்று சொல்வது சற்றே வன்முறையான வார்த்தை. புவியீர்ப்பு விசை மற்ற பொருட்களின் மீது செயல்படுவது போல் அல்லாமல் அந்தப் பூக்களின் மீது மட்டும் சற்றே நிதானத்துடன் விசையைச் செலுத்தியதோ என்று ஒரு குழப்பம் தோன்றும் வகையில் அவை ஒரு நளின நடனத்துடன் மிதந்து வந்து தரையில் படர்ந்து கொண்டன. நான் ஹெட்போனில் கேட்டுக் கொண்டிருந்த 'வெண்மதி வெண்மதியே நில்லு' பாட்டுக்குத் தோதாக அந்தப் பூக்கள் அசைந்தாடின. மேலும், அம்மரமே அந்தப் பூக்களைப் பார்த்துப் பாடுவதைப் போல, அவ்வளவு பாங்குடன் அப்பாடலின் வரிகள் அந்தச் சூழலுக்குப் பொருத்திப் போயின. எனக்கு அது ஆச்சர்யமாகவே இல்லை. இந்த மாதிரி தற்செயலான நிகழ்வுகள் எனக்கு அடிக்கடி நிகழும். மற்றவரிடம் சொன்னால் நம்பவே முடியாததாய் இருக்கக் கூடிய தற்செயல்கள். நான் மகிழ்ச்சியாய் இருக்கும் போது மட்டுமே நிகழ்பவை அவை.  என்னுடைய செல்போனில் இருந்த அத்தனை பாடல்களையும் டெலீட் செய்துவிட்டு, கௌதம் மேனனின் படத்தின் எல்லாப் பாடல்களையும் பதிவிறக்கி, அந்தப் பா...

சிறுகதை அறிமுகம் - The Funeral

ரஸ்கின் பான்ட் எழுதிய இளம் வாசகர்களுக்கான முக்கியமான தொகுப்பு (The Essential Collection for the Young Readers) படித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அதிலே The Funeral என்றொரு சிறுகதை‌. மூன்றே பக்கங்கள்தான். ஆனால், அது நம்முள் ஏற்படுத்தவல்ல தாக்கம் மிகப் பெரியது. அந்தக் கதையின் நிகழ்வுகளை இங்கே தருகிறேன். இது ஒரு மொழிபெயர்ப்பு கிடையாது. எனவே, இதைப் படித்த பிறகும் நீங்கள் அந்தக் கதையைப் படிக்கலாம். இதிலே சொல்லாத பல விசயங்கள் அந்தக் கதையில் இருக்கின்றன. ஒன்பது வயது மகனை தனியாக விட்டுவிட்டு ஒரு தந்தை இறந்து கிடக்கிறார். அவர் யாருடனும் அதிகம் பேசாதவர். அந்த இறுதிச் சடங்குக்கு வந்திருந்த பலரும் அப்போதுதான் முதல்முறையாக அங்கே வந்திருக்கிறார்கள். மகனோடு இருந்த நேரம் தவிர்த்து அவர் அதிக நேரம் செலவிட்டதெல்லாம் புத்தகங்கள், இசை, தாவரங்கள் ஆகியவற்றுடன் தான்.  அவருடைய உடல் ஓர் அறையில் கிடத்தப்பட்டிருக்க, மற்றோர் அறையில் அமைதியாக அமர்ந்திருக்கிறான் சிறுவன். அவன் தந்தையின் உடலைப் பார்த்தால் குமுறி அழுதிடுவான் என்பதால், அவனைத் தனியறையில் வைத்திருக்கிறார்கள். பலர் வந்து இவனிடம் தா...

My Bicycle

I felt extremely tired as I walked to the parking lot. The first and only thought in my mind was to reach home as quickly as possible and go to sleep.  I usually went by bus. But on that day, I had chosen to cycle to college. Since I had cycled after a long time, my thighs started to pain by evening.  We had a function in our department. As we were the senior most boys, we had to make all the arrangements and we kept doing physical work all day long.  I ambled to my cycle with the green coloured seat cover and kept my bag on its carrier. I took my water bottle out of the bag and emptied it into my thirsty throat. I stood for a minute or so regaining my energy which would be needed to propel the age old vehicle. Then I took the key and inserted it in the keyhole. The lock didn't open. It was actually my grandpa's cycle and he was long gone. My father used it once in a blue moon. So, it was understandable why the lock wouldn't open.  I took out the key and inserted it ...

கதையல்ல விளம்பரம்

ராமனுக்கு திடீரென ஓர் ஆசை வந்தது.  ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை.  அதுவும் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் மதன கோபால் பாத்திரம் பேசுவது போலப் பேச வேண்டும் என்ற ஆசை.  மணிப்பரஸ் என்றே சொல்லிப் பழக்கப் பட்ட ஒரு வஸ்துவை கமல்ஹாசன் மிக அழகாக 'பேள்ஸ்' என்று உச்சரித்தது கூடக் காரணமாக இருக்கலாம்.  அந்த ஒரு காட்சியில் அவன் அவர் மீது மையலே கொண்டுவிட்டான்.  அவனுக்கு ஆங்கிலம் பேச வேண்டும். ஆனால், அவனால் ஒரு வகுப்பில் எல்லாம் சென்று உட்கார முடியாது. பாடம் நடத்துவது மற்றும் அதைக் கவனிப்பது என்ற சமாச்சாரங்களை எல்லாம் நினைத்தாலே அவனுக்கு மன உளைச்சல் ஆகிவிடும்.  ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் 'எல்லாரு வீட்டுப் பாடத்த எடுத்து வையிங்க' என்று ஆசிரியர் சொன்னாலே அவன் நெஞ்சுக்குள் கருக்கென்று ஆகும்.  தனக்குப் பிடிக்கவே பிடிக்காத அந்த வேலையை அவன் எப்போதுமே செய்யத் தலைப்பட்டதில்லை. அதுமட்டுமில்லை. சொல்லி வைத்தாற் போல, ஆசிரியர்கள் எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ அது எதுவும் அவனுக்குப் பிடித்ததில்லை. எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னார்களோ (ஊர் சுற்றுதல், ஊ...

பரிதவிப்பு

அது ஒரு மாலை நேரம். மாலை நேரம் என்றால், வடநாட்டவர் வந்து தங்கி வேலை செய்யும் ஃபேக்டரிகளும், களை-வெட்டுவது-கல் உடைப்பது-விறகு-வெட்டுவது-தோட்டத்திற்கு-தண்ணீர்-கட்டுவது-போன்ற-உடல்-உழைப்பு-கோரும்-வேலைகளைச்-செய்யும் மக்களும், தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடை ஒன்றும், அதனை நம்பி பிழைப்பு நடத்தும் சிறு கடைகளும் அமைந்த ஓர் இந்திய கிராமத்தில் ஒரு மாலை நேரம். ('தண்ணீர் கட்டுவது' என்றால் கிணற்று நீரை பம்ப் செட் மூலமாக உறிஞ்சி எடுத்து தோட்டத்துக்கு பாய்ச்சுவது. அப்படி பாய்ச்சும் போது, மண்வெட்டியைக் கொண்டு மடை மாற்ற வேண்டும். தண்ணீர் ஒரு 'பாத்தியில்' பாயும்போது, இன்னொரு 'பாத்திக்குப்' போகாமல் தண்ணீரைக் கட்டுவது. அதற்குப் பெயர்தான் தண்ணீர் கட்டுவது.) வெள்ளப் பாறை என்பது அந்த இடத்தின் பெயர். ஒரு முதியவர் தனது சைக்கிளை தள்ளியபடி நடந்து வருகிறார். நாம் அவருக்கு இடப்புறமாக நின்று பார்த்தபடி அவருடனே நகர்கிறோம் (நமக்கு இடப்புற திசையில்). அந்தக் காட்சியை நாம் பார்த்துக் கொண்டே நகரும் போது, நமக்கு ஒவ்வொரு தகவலாக தெரிய வருகிறது. அவருக்கு 70 வயது இருக்கலாம். சற்றே நைந்து போன ஒரு ...