Posts

Showing posts from 2022

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை - 1

படம் : பாமா விஜயம் (1967) உரையாடல் : கே. பாலச்சந்தர் இயக்கம் : கே. பாலச்சந்தர் தயாரிப்பு : மனோகர் பிக்சர்ஸ் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைப் பற்றிய பேட்டியொன்றில் அப்படத்தின் திரைக்கதையாசிரியர் கமல்ஹாசன் நகைச்சுவையைப் பற்றிய மிக முக்கியமானதொரு விஷயத்தைப் பதிவு செய்திருந்தார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்லுமளவுக்கு அது எனக்கு ஞாபகமில்லை என்றாலும், அதன் சாரம் இதுதான்.  "வழக்கமாக காமெடிப் படங்களில் கதை மாந்தர்கள் பலரும் (if not அனைவரும்) ஒரு யதார்த்தமில்லாத, மிகைப்படுத்தப்பட்ட கோமாளித்தனத்துடனே இருப்பர். அந்தக் கோமாளித்தனம் அவர்களின் பேச்சு மற்றும் உடல்மொழியில் மட்டுமல்லாது, மொத்தமாகவே அவர்கள் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவே காட்டப்படுவார்கள். ஆனால், மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் கதாபாத்திரங்கள் சற்றே நம்பகத் தன்மையுடனும் யதார்த்தத்தை மீறாமலும் இருக்கும்" என்றார். அவர் சொன்ன மாதிரி கோமாளித்தனமான பாத்திரங்களும் மட்டமானவை என்று நாம் சொல்லிவிட முடியாது. Slapstick comedy என்ற அந்த மிகப் பிரபலமடைந்த, அதைவிட முக்கியமாக, மிகவும் சிரிப்பூட்டக் கூடிய நகைச்சுவையை கமல்ஹாசனே கூட ஆராதிக்கும் சார...

சிறுகதை அறிமுகம் - எறாக்கறி புறாக்கறி - பாக்கியம் சங்கர்

09.03.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருக்கும் பாக்கியம் சங்கரின் 'எறாக்கறி புறாக்கறி' என்னும் இந்தக் கதை அனைவராலுமே படிக்கப்பட வேண்டிய கதை என்பேன். அந்தக் கதையின் ஒரு சிறு பகுதியைக் கூட நான் இங்கே சொல்லப் போவதில்லை. மாறாக, அந்தக் கதையை ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான 6 காரணங்களைப் பட்டியலிட விழைகிறேன். 1. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது இது. "இந்த உலகம் மிகவும் அபாயகரமானது. அதற்கு காரணம் யார் தெரியுமா? தீமை செய்பவர்கள் அல்லர். தீமை நடப்பதைப் பார்த்தும் அதைத் தட்டிக் கேட்காதவர்கள்தான்". 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்கிப் போகாமல், தீமைக்கு எதிராகத் தன் உரத்த குரலைப் பதிவு செய்யும் ஒரு ஹீரோவைப் பற்றிய கதை இது. 2. இந்தக் கதையில் ஹீரோ அனுபவிக்கும் வலியை, நீர் குடித்து உயிர் வாழும் நம் எல்லோராலுமே மிகச் சுலபமாக உணர முடியும். 3. 'இதையெல்லாமா வெட்டவெளியில் பேசுவது' என்று பெரும்பான்மையோரால் கருதப்படக் கூடிய கதைக்கரு இந்தக் கதையை உலக இலக்கியமாக்குகிறது. 4. முக்கால்வாசி கதையைப் படிக்கும் வரையிலும், ஹீரோவின் துயரங்களைக் கண்டு சோகம் வடிக்கு...