Posts

Showing posts from November, 2025

பணிவான வேண்டுகோள்

ஓ உலகோரே! முழுக்க நீங்களாகவே சிந்தித்து, முழுக்க நீங்களே உருவாக்கிய ஒரு சொந்தச் சரக்கு உங்கள் வாட்ஸேப் ஸ்டேட்டஸில் இதுவரைக்கும் ஒருமுறையேனும் இருந்திருக்கிறதா? ஒருவேளை "இல்லை" என்பது உங்களது பதில் என்றால் --- உங்கள் வீட்டில் ஒரு குழந்தை பாடப்புத்தக காந்தியடிகளுக்கு தாடி வரைந்தாலோ; சாப்பாட்டு மேசையில் தாளம் போட்டாலோ; வீட்டுக்குள்ளே விசிலடித்தாலோ; பாடப் புத்தகத்துக்குள்ளே மறைத்து வைத்து மதிப்பெண் வாங்கித் தர யோக்கியதையில்லாத ஒரு கதைப்புத்தகம் படித்தாலோ; கணக்கு நோட்டின் கடைசிப் பக்கத்தில் பென் 10 வரைந்து வைத்தாலோ அவர்களைத் திட்டாதீர்கள். நாசரேத் இயேசுவை சிலுவையில் அறைந்த மாந்தரைப் போலவே அப்பாவிகள்தான் நீங்களும். பாவம்! அறியாது செய்கிறீர்கள். படைப்பதில் உள்ள போதையை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.