Posts

Showing posts from 2025

பணிவான வேண்டுகோள்

ஓ உலகோரே! முழுக்க நீங்களாகவே சிந்தித்து, முழுக்க நீங்களே உருவாக்கிய ஒரு சொந்தச் சரக்கு உங்கள் வாட்ஸேப் ஸ்டேட்டஸில் இதுவரைக்கும் ஒருமுறையேனும் இருந்திருக்கிறதா? ஒருவேளை "இல்லை" என்பது உங்களது பதில் என்றால் --- உங்கள் வீட்டில் ஒரு குழந்தை பாடப்புத்தக காந்தியடிகளுக்கு தாடி வரைந்தாலோ; சாப்பாட்டு மேசையில் தாளம் போட்டாலோ; வீட்டுக்குள்ளே விசிலடித்தாலோ; பாடப் புத்தகத்துக்குள்ளே மறைத்து வைத்து மதிப்பெண் வாங்கித் தர யோக்கியதையில்லாத ஒரு கதைப்புத்தகம் படித்தாலோ; கணக்கு நோட்டின் கடைசிப் பக்கத்தில் பென் 10 வரைந்து வைத்தாலோ அவர்களைத் திட்டாதீர்கள். நாசரேத் இயேசுவை சிலுவையில் அறைந்த மாந்தரைப் போலவே அப்பாவிகள்தான் நீங்களும். பாவம்! அறியாது செய்கிறீர்கள். படைப்பதில் உள்ள போதையை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

நம்ப முடியவில்லை என்று சொல்வது, நம்ப முயற்சித்தும் முடியவில்லை என்பதன் சுருக்கமே.  

கல்லூரி கலைத் திருவிழா

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா சிறப்பு விருந்தினர்களாக கட்சிக் கரை வேட்டிகளுடன் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி வேறொரு கட்சிக்காரரின் திருக்குறள் குறித்த புரிதலை விமர்சித்த எம்.எல்.ஏ அரசின் கல்வி நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, "நல்லோருக்கு" வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்த எம்.பி கட்சிப் பணத்தைக் கொண்டு வீதிகளில் நடத்த வேண்டிய‌ தேர்தல் பிரச்சாரத்தை அரசுப் பணத்தைக் கொண்டு கல்லூரியில் மாணவர்களை உட்கார வைத்து நடத்தியபோதே முடிவு செய்தேன், எனது ஓட்டு ஆளுங்கட்சிக்கு இல்லையென்று.

ஙே

இப்படி இருவர் பேசிக்கொள்கிறார்கள். "இது என்னுடைய இரண்டாவது மனைவி." "ஓஹோ. முதல் மனைவி?" "எனக்கு ஒரே மனைவிதான்." "ஙே!" ------------------------------------------- முதலாவது இல்லாமல் இரண்டாவது இருக்க முடியாதுதானே? ஆனால் ஒன்று இருக்கிறது. ------------------------------------------- மீண்டும் இருவர். "எனக்கு பணம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்." "முதல் பட்சம்?" "அப்படினா?" ------------------------------------------- அது ஏன் எப்போதும் இரண்டாம் பட்சம் மட்டுமே உள்ளது? முதல் பட்சம் மூன்றாம் பட்சம் எல்லாம் எங்கே? -------------------------------------------

என் ஆசிரியர்கள்

ராமசாமி வாத்தியார் அயலூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, நாமக்கல் பாளையம் - என்ற சொற்றொடரைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே முழுப் பள்ளிக்கூடத்தையும் சுற்றி வந்து விடலாம்.‌ அவ்வளவு சிறியதுதான் நான் படித்த பள்ளி. அங்கே எங்களுக்குப் பாடம் சொன்ன ஆசிரியர்களில் மூவர் மட்டுமே என் நினைவில் நிற்கிறார்கள். அதில் முதலாமவர் ராமசாமி வாத்தியார்.  அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். பத்து வயதுக்கும் கீழிருந்த குழந்தைகளுக்கு அறுபது வயது ஆசிரியர் என்பதே எவ்வளவு அழகான சூழ்நிலை! அவருக்கும் எங்களுக்குமான உறவு, ஒரு தாத்தாவுக்கும் பேரப் பிள்ளைகளுக்குமான உறவாகவே இருந்தது.  வெள்ளை வேட்டி சட்டையில்தான் வருவார்; எங்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடுவார்; 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற விளையாட்டை எங்களுக்கு சொல்லித் தந்தவரும் அவரே.   எவ்வளவு சிரத்தையெடுத்து யோசித்தாலும், அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதான நினைவு ஒன்று கூட வரவில்லை. பிறகு என்னதான் செய்வார்? கதைதான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அனைவரையும் சேர்த்து மொத்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையே முப்பதோ நாற்பதோதான் இ...

விசேஷம்

அமைதியான குளம். கல்லை எறிகிறீர்கள். சஞ்சலப்படுகிறது. "சஞ்சலப்படாதே குளமே!" என்று அக்கறை பொழிகிறீர்கள். _______________________________________ தெளிவான மனம். "வீட்ல விசேஷமா?" என்கிறீர்கள். இல்லையென்று சொன்னால், ஆறுதல் வாசிக்கிறீர்கள்.  _______________________________________ My mind be like, "நாம் பாட்டுக்கு செவனேன்னு தான்டா இருந்தேன்?" _______________________________________ இனிமேல் சொல்லலாமென இருக்கிறேன். "வீட்ல விசேஷமா?" "ஆமா. நாளைக்கு எனக்கு சுன்னத் கல்யாணம். நிச்சயம் வரணும்." _______________________________________

நோட்டிஸ்

துணிக்கடையில் ஒரு நோட்டிஸ் பணியாளர்கள் யாரும் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது. மீறினால் அபராதம். சர்வ நிச்சயமாக, அந்த நோட்டிஸையும் பணியாளர்கள் தான்  ஒட்டியிருப்பார்கள். 

இன்புற்றிருத்தல்

Mihaly Csikszentmihalyi எழுதிய Flow என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாயிருக்க மனதைப் பழக்குதல் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம். ஆன்மிக ரீதியான தத்துவங்களாக இல்லாமல் -- உளவியல், மூளை நரம்பியல் போன்ற அறிவியல் துறைகளின் கோணத்தில் மகிழ்ச்சி குறித்து ஆராய்வதே இப்புத்தகத்தின் சிறப்பு.  அதிலே நான் ஒரு குறிப்பிட்ட செய்தியைப் படித்தபோது, "அட, இதைத்தான் நாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே!" என்று யாருக்கும் பாதகமில்லாத ஓர் அகந்தை தோன்றியது. அது குறித்துப் பகிர விரும்புகிறேன்.  (Pleasure எனும் இன்பம், enjoyment எனும் களிப்பு, happiness எனும் மகிழ்ச்சி ஆகிய‌ மூன்றையும்‌ தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது புத்தகம். அதுகுறித்து விரிவாக நான் சொல்லப் போவதில்லை.) சரி, புத்தகம் சொன்ன செய்தி என்ன? நாம் அன்றாடம் செய்யும் ஒரு சாதாரண செயல் கூட நமக்கு பெருங்களிப்பைத் தரக்கூடியதாக மாற்ற முடியும்.  அதற்கு நாம்‌ என்ன செய்ய வேண்டும்? அந்த அன்றாடச் செயலிலே இலக்குகளையும் விதிகளையும்‌ நாம் நிர்ணயிக்க வேண்டும். சரி. இப்போது என்னுடைய அனுபவத்தைப் பற்றிச் சொல்கிறேன்.  அன்றாடச் செயல்:...

Cricket and Life

I still remember the days when I used to go to play cricket without the knowledge of my father. Apart from the wild pleasure it gives, cricket has always taught me so many life lessons.  The most important of them all is that rashness brings failure. I'd like to expound it with an example. I'm a batter and I have been in numerous situations when the pressure is too high.  If our team needed to score 15 runs or more in the last over, I would feel my heart in my mouth.  I would press the panic button and as a result I would end up failing to chase the target. One day, I was in such a situation that our team wouldn't win even if I hit 6 sixes in the last over. I could realise that I was not nervous. I was able to stay calm and composed and played my natural game.  As a result, I hit 2 sixes in that over which would not be possible if I had actually intended to do so.  After that incident, I always remind myself that if I don't give much thought about the outcome, I...

பல கதைகள்

பார்வை இல்லாதவனின்  கிராப்பு எப்படி முடிவாகிறது?

எழுத

ஒரே ஒரு வாக்கியந்தான் என்றாலும் உடனே எழுதிவிடுவது.

ஒரு காலை

அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். முக்கால்வாசி டவுனாக மாறி விட்டிருந்த அது ஒரு கிராமம். பால தண்டாயுதபாணி திருக்கோயில் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உள்ளூர் மக்களால் சுப்ரமணியர் கோயில் என்று செல்லம் கொஞ்சப்பட்ட அந்தக் கோயிலிலிருந்து காலையிசை கேட்டது; வாயில் கோபுரத்தில் புறாக்கள் வினோத சத்தங்கள் எழுப்பின; கோயிலின் உள்ளேயிருந்து மாலைப் பூக்கள், சந்தனக் குச்சி* மற்றும் கற்பூரப் புகை, இன்னும் பலவித பூஜைப் பொருட்களின் கலவையான வாசனை காலைப் பொழுதின் இளவெயிலுக்கு உகந்ததாக இருந்தது;  (*கொங்கு வட்டார வழக்கில் ஊதுபத்தியைத்தான் சந்தனக் குச்சி என்பர்) வீடுகளின் வாசல்களில் கோலங்கள் கிடந்தன; மிகுந்த சொகுசுடன் நான்கு நாய்கள் படுத்திருந்தன. அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு வயது முப்பதுகளில் இருக்கலாம். ஓர் இரண்டடுக்கு வீட்டின் வாசலை அடைந்தான். மெயின் கேட் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஹவுஸ் ஓனர் வீட்டில் இருக்கவேண்டும். அழைப்பு மணியடித்தான். ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் சாவியுடன் வந்தார். ஹவுஸ் ஓனர். அந்த ஹவுஸ் ஓனர் அவனிடம் அதுவரை பேசிய சில வாக்கியங்களாவன பின்வருமாறு. "கண்ணு, கதவ சாத...