அத்தியாயம் நான்கு - தகவல் பரிமாற்றம்
சிவகார்த்திகேயனும் வெற்றியும் பெரும்பள்ளம் நோக்கிய, சர்வ நிச்சயமாக (கணிதவியல் தேற்றங்களின்படி ஒரு நேர்கோட்டில் இல்லாமல் போவதுகூடப் பரவாயில்லை) தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறை நம்பும் நேர்ழியில் கூட இல்லாத ஒரு பைக் ரைடில் இருந்தார்கள். ரோட் சென்ஸ் மிக்க வெற்றி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். சிவகார்த்திகேயன் பில்லியனில் அமர்ந்திருந்தான், கையில் ஏந்தியதொரு போட்ஸ்டோன் 2000 ப்ளூடூத் ஸ்பீக்கருடன் என்று ஒரு prepositional phrase- ஐப் போடவில்லையென்றால், இந்தச் சொற்றொடரே வீணாகிடும். வெற்றி ஓட்டினால், சிவகார்த்திகேயன் பில்லியன் தானே. ஸ்பீக்கரில் ஒலித்த பாடல் வெற்றிக்கும் கேட்கும்படி, அவனது பின்னங்கழுத்தின் மீது ஸ்பீக்கரை வைத்தான். பாட்டில் கனிந்த வயலின் மீட்டலுக்கேற்ப தலையை ஸ்லோ-மோவில் எல்லாத் திக்கிலும் சுழற்றிக் கொண்டே ரோட்டையும் கவனித்துக்கொண்டிருந்த வெற்றி சுழற்றலை நிறுத்தியவுடன் சிவகார்த்திகேயன் உரக்கக் கேட்டான். "டேய் ஏப்பா! நடுநடுவுல எதாச்சும் பேசுனா கீது டிஸ்டர்பிங்கா இருக்குமா உனக்கு?" "டேய், பேசுடா *#$%" இனி அவன் எப்படி உடனடியாகப் பேசுவான்! கதைசொல்லி நான் பேசுகிறே...