அருஞ்சொற்பொருள் - 2
இதுவரை... எந்தச் சூழலுக்காக, என்ன அர்த்தத்தில் பாடலாசிரியரால் எழுதப்பட்டதோ, அச்சூழல், அவ்வர்த்தமன்றி - அந்தக் குறிப்பிட்ட பாடலாசிரியரே கூட யோசித்திருக்க வாய்ப்பில்லாத - வேறொரு அர்த்தமுடைய மற்றும் வேறொரு கற்பனையான சூழலுக்கும் பொருந்திப் போகக் கூடிய திரைப்படப் பாடல் வரிகளைப் பற்றி பேசி வருகிறோம். இனி... இந்தப் பாட்டின் வரிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு இரண்டு நபர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இருவர். #### இவர்கள் பேசுவது பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போகலாம். ஏனென்றால், 'சரி' 'தவறு' என்ற பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் இயல்பு எனும் பேருண்மையை உணர்ந்தவர்கள் இவர்கள். பெண்ணுடலின் வனப்பை இரசிக்காமல் இருப்பதாய் நடிக்கும் ஆண்கள் இல்லை இவர்கள். எதிர்பாலினம் மீதோ, நேர் பாலினம் மீதோ ஓர் ஆணோ பெண்ணோ ஈர்க்கப் படுவதும், அவர்களது மனம் விரும்பாவிட்டாலுமே கூட அவர்களது கண்கள் அனிச்சையாகவே ஈர்த்தவர்களை நோட்டமிடுவதும் தவறும் அல்ல, சரியும் அல்ல. அதுதான் உயிர் கொண்டு நடமாடும் எந்தவொரு உடலின் இயல்பு என்று இவர்களுக்குத் தெரியும். ம...