Posts

Showing posts from January, 2025

ஒரு காலை

அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். முக்கால்வாசி டவுனாக மாறி விட்டிருந்த அது ஒரு கிராமம். பால தண்டாயுதபாணி திருக்கோயில் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உள்ளூர் மக்களால் சுப்ரமணியர் கோயில் என்று செல்லம் கொஞ்சப்பட்ட அந்தக் கோயிலிலிருந்து காலையிசை கேட்டது; வாயில் கோபுரத்தில் புறாக்கள் வினோத சத்தங்கள் எழுப்பின; கோயிலின் உள்ளேயிருந்து மாலைப் பூக்கள், சந்தனக் குச்சி* மற்றும் கற்பூரப் புகை, இன்னும் பலவித பூஜைப் பொருட்களின் கலவையான வாசனை காலைப் பொழுதின் இளவெயிலுக்கு உகந்ததாக இருந்தது;  (*கொங்கு வட்டார வழக்கில் ஊதுபத்தியைத்தான் சந்தனக் குச்சி என்பர்) வீடுகளின் வாசல்களில் கோலங்கள் கிடந்தன; மிகுந்த சொகுசுடன் நான்கு நாய்கள் படுத்திருந்தன. அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு வயது முப்பதுகளில் இருக்கலாம். ஓர் இரண்டடுக்கு வீட்டின் வாசலை அடைந்தான். மெயின் கேட் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஹவுஸ் ஓனர் வீட்டில் இருக்கவேண்டும். அழைப்பு மணியடித்தான். ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் சாவியுடன் வந்தார். ஹவுஸ் ஓனர். அந்த ஹவுஸ் ஓனர் அவனிடம் அதுவரை பேசிய சில வாக்கியங்களாவன பின்வருமாறு. "கண்ணு, கதவ சாத...