Posts

Showing posts from January, 2026

வெள்ளிக்கிழமை. ஒரு கதவு. தட்டப்படுகிறது. ஏற்கனவே பளபளப்பாயிருக்கும் அந்தத் தேக்குக் கதவு, மாலையின் செம்மஞ்சள் கிரணங்களினால் மேலும் பளபளப்பு. மீண்டும் தட்டப்படுகிறது. தாழ் விடுவிக்கப்படும் ஒலித்துணுக்கு கேட்கிறது. கதவு மெதுவாக உள்வாங்குகிறது. அதன் முழு வீச்சில் சரி பாதியளவு திறக்கிறது. அப்படியே நிற்கிறது. ### செவ்வாய்க்கிழமை. கதவு அதே மாதிரி உள்வாங்கியது. அதே சரி பாதியளவு திறந்து அப்படியே நின்றது. மெதுவாக ஒரு கண் மட்டும் எட்டிப்பார்த்தது. ஓர் அழகான பெண்ணின் கண். அழகான பெண்ணின் ஒரு கண். "யாருங்க வேணும்?" கொஞ்சும் குயில் போன்றதொரு குரல். கரைந்து கரைந்தே கரைந்து போனதொரு காக்கைக்குரலும் தொடர்ந்து கேட்டது. "நீதான்டி வேணும். ஆஆஆஅ..." அந்த ஆண் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டான். அவளை அள்ளியெடுத்து, அவனுடைய முகம் புகுந்து போக சௌகர்யம் அமைந்த இடங்களிலெல்லாம், முத்தமிட்டான். அவள் சிரிப்பையும் அடக்க மாட்டாமல், அவனையும் சமாளிக்க முடியாமல் திண்டாடினாள்.  முகத்தை நிமிர்ந்து பார்த்து அவன் சொன்னான். "ம்ம்ம்... நீ கதவத் தொறப்பனு நெனைக்கவே இல்ல. ஆஹா, கேஸ் சிலிண்டர் போட வந்...

கெட்ட வார்த்தை

பாகம் ஒன்று - பொறுமை தேவைப்படும்‌ முன்னுரை நான் ஓர் ஆசிரியன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் இருந்த ஆசிரியன்.  அந்தக் கல்லூரியில் ஆண்டுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரம் அது.‌ மே 9 ஆம் தேதி ஆண்டு விழா. ஏப்ரல் 11 ஆம் தேதி குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.‌ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணி (MoC) எனக்கு கொடுக்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் ஸ்க்ரிப்ட் எழுதி... மணிகண்டன் என்றொரு மாணவனை வைத்து அதற்கான பின்னணி இசையை எடிட் செய்து... தமிழுக்கு இரண்டு மாணவர்களையும், ஆங்கிலத்துக்கு நான்கு மாணவர்களையும் பயிற்றுவித்து அவ்வப்போது பயிற்சியளித்து வந்தேன். மணிகண்டனைத் தவிர மற்ற அனைவருமே கலை நிகழ்ச்சிகளிலும் இருந்ததால், அதற்கு அவர்கள் ஒத்திகை பார்க்கப் போன நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுவிழாவில் ஒரு மிக முக்கியமான பகுதி இருந்தது. முதல்வர் வழங்க வேண்டிய ஆண்டறிக்கை. அதாவது, கடந்த ஓர் ஆண்டில் செய்யப்பட்ட கல்லூரியின் சாதனைகள், மாணவர்களின் சாதனைகள் மற்றும்‌ ஆசிரியர்கள...