Posts

Showing posts from June, 2023

ஓ! உலகோரே!

கவிஞர்களின் மனங்கள் தான்  எத்துணை அழகானவை! பறவைகளை  இரசிக்காதவர்களை, சடங்குகளை சடங்குகளாக மட்டுமே சமைத்து விட்டவர்களை, இசை கேட்டும் இசையாதர்களை, உண்மையை முகங்கொள்ளத் துணியாதவர்களை, பொய்களைக் கொண்டே ஆசுவாசப் படுபவர்களை, இயல்பினை மறைக்கும் எந்திரங்களை, பிரபஞ்சத்தையே  வெல்லும் பராக்கிரமர்களை, எல்லாம் அறிந்த அதிமேதாவிகளை,  காதலால் கசிந்துருகாதவர்களை, தூங்கும் குழந்தைகளை எழுப்புபவர்களை, அளவிட்டு சிறுநீர் கழிக்கவல்ல பரிபூரணவாதிகளை, உன்மத்தம் உணராதவர்களை, கவிதையையோ கவிஞரையோ கிஞ்சித்தும் உணர முடியாத் துர்பாக்கியசாலிகளை, இத்தகையோரின் பல்லாயிரம் கோடிப் பிரதிகளை, அனுசரித்துப் போகும் கவிஞர்களின் மனங்கள்தான் எத்துணை அழகானவை! கவிஞர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! அவர்களின்  மொழியை எவரும் பேசுவதில்லை, அவர்களின் பேச்சில் தர்க்கம் வாய்ப்பதில்லை, முழுப் பைத்தியம் அவர்களுக்கு எட்டுவதில்லை, தமதறிவை தாமே  நொந்து கொள்பவர்களே அவர்கள், சொல்ல வருவதை அவர்களால் சொல்லவே முடிவதில்லை, நகையாடுவோருக்கு கேளிக்கையும் நேசிப்போருக்கு வலியையும் அளிக்க வேண்டுமெனச் சபிக்கப் பட்டவர்கள் அவர்கள். ஆனால...