சா
Who could have thought such darkness lay concealed Within thy beams, O sun! or who could find, Whilst thy fly and leaf and insect stood revealed, That to such countless orbs thou mad'st us blind! Why do we then shun death with anxious strife? If light can thus deceive, wherefore not Life? From the poem Night and Death by Joseph Blanco White சா. இந்தத் தமிழ் வார்த்தையை நான் அறிந்து கொண்டபோது, அதன் அழகில் சொக்கிப்போனேன். அதன் பொருள்? படித்தான் என்ற வினைமுற்றுச் சொல்லின் வினை வடிவம் 'படி'. சொன்னாள் என்ற வார்த்தைக்கு 'சொல்'. நடுங்கினாள் என்பதற்கு 'நடுங்கு'. இசைந்தான் என்பதற்கு 'இசை'. நிறுத்தினான் என்பதற்கு 'நிறுத்து'. 'செத்தான்' என்ற சொல்லின் வினை வடிவம் என்ன? அந்த வினைச்சொல்தான் 'சா'. ஒருவரைப் பார்த்து நீங்கள் 'சா' என்று சொன்னால், அவர் பொருள் புரியாமல் விழிக்காமல், செத்துப்போக வேண்டும். சாவு. பகைவனைப் போலொரு நண்பன். ஏறத்தாழ அனைவராலும் அஞ்சப்படுகிற, விரும்பத்தகாத ஒன்றாகவே சாவு இருந்து வந்துள்ளது. எந்த வகையில் பார்த்...