விசேஷம்

அமைதியான குளம்.

கல்லை எறிகிறீர்கள்.

சஞ்சலப்படுகிறது.

"சஞ்சலப்படாதே குளமே!" என்று அக்கறை பொழிகிறீர்கள்.

_______________________________________

தெளிவான மனம்.

"வீட்ல விசேஷமா?" என்கிறீர்கள்.

இல்லையென்று சொன்னால், ஆறுதல் வாசிக்கிறீர்கள். 

_______________________________________

My mind be like,
"நாம் பாட்டுக்கு செவனேன்னு தான்டா இருந்தேன்?"

_______________________________________

இனிமேல் சொல்லலாமென இருக்கிறேன்.

"வீட்ல விசேஷமா?"

"ஆமா. நாளைக்கு எனக்கு சுன்னத் கல்யாணம். நிச்சயம் வரணும்."

_______________________________________





Comments

  1. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சரியான பதிலடி

    குளம், கல் - சிறப்பான உவமை

    இவிங்களுக்கு வேற வேலையே இல்ல.

    கொழந்த பொறந்தா
    "ஒல்லியா இருக்கு"
    "கலர் கம்மியா இருக்கு "
    "மூக்கு சப்பையா இருக்கு"

    கொஞ்சம் வளந்தா
    "எந்த ஸ்கூல்?"
    "இந்த ஸ்கூல் தானா? அவங்கவங்க கடன் வாங்கி பெரிய ஸ்கூல் ல படிக்க வெக்கறாங்க"

    படிச்சு முடுச்சா
    "எந்த காலேஜ்?"
    "இந்த கோர்ஸ் கெல்லாம் வேல கெடைக்குமா?"

    அதையும் முடுச்சுட்டா
    "எங்க வேல?"
    "என்ன வேல?"
    "சம்பளம் எவ்வளவு?"
    "இன்னுமா வேல கெடைக்கல?"

    ஒரு வழியா கெடச்சுட்டா
    "எப்போ கல்யாணம்?"
    "வயசாய்ட்டே போகுதில்ல?"
    "காலகாலத்துல இதெல்லாம் பண்ணிடனும்"

    கல்யாணம் முடுஞ்சுட்டா
    "வீட்ல விசேஷமா?"
    .....

    இவிங்களுக்கு இதேதா வேலை. கேள்வி கேக்கற யாருமே கூட இருந்து பாத்துக்க மாட்டாங்க. சும்மா timepass காக கேக்கற கேள்விகள் இதெல்லாம். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாட்டியும் அவங்க வாழ்க்கை ஓடத்தான் போகுது. அப்பறோம் என்ன இதுக்கு இந்த கேள்வியெல்லாம் கேக்கறாங்க?

    இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் அதுவும் அந்த கடைசி கேள்விக்கெல்லாம் frozen lake மாதிரி இருந்துக்கணும். எவன் கல் கொண்டு எறிஞ்சாலும் அசராம இருக்கும் மனசு.

    என்னமோ இவிங்க வந்து தினமும் குளிப்பாட்டி, சீராட்டி பாலூட்டி தூக்கம் கெட்டு பிள்ளையை வளத்து எடுக்கற மாதிரி தா விசாரிப்பாய்ங்க. ஒரு கூந்தலும் பிடுங்க மாட்டாங்க.

    ஒரு பிள்ளை எப்போ விருப்பப்படுதோ, அப்போதான் அது வரும். ஆனா வரும்போது வேணாம்னு மட்டும் சொல்லிடவே கூடாது.

    இன்னுமே யோசிச்சு பாத்தா இனி வரப்போற உலகம் அவ்ளோ சிறப்பா ஒன்னும் இருக்க போறதில்ல. எதிர்கால குழந்தைகளக்கு நம்ம விட்டுட்டு போற பூமி நல்லாவா இருக்கு? இப்பவே பாதி இயற்கை வளங்களை காணோம்.

    ஒவ்வொரு மனுஷனும் பொறக்கறது இந்த பூமில எதையோ ஒண்ண experience பண்ண தா.
    The soul/consciousness undergoing human experience. அவ்ளோதா மொத்த வாழ்க்கையுமே. அத புருஞ்சுக்காதவங்கதா குண்டு சட்டில வெறும் வண்டிய ஓட்டிக்கிட்டு கெடப்பாங்க. இந்த பறந்து விரிஞ்ச பிரபஞ்சத்தில ரொம்ப ரொம்ப ரொம்ப சின்ன வட்டத்தை பத்தி யோசிக்கிறவங்க மட்டும்தா இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்டுகிட்டு இருப்பாங்க. இவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல.

    So போறவங்க வரவங்க கேள்விகள யெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடனும். ரொம்ப நோண்டுனா மேல சொன்ன பதிலயே சொல்லிடலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?