தாங்கள் மட்டமானவர்கள்
என்று நிரூபிக்க 
பணம் செலவு செய்வோர்
இரண்டு பேர்.

பன்னிரண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு
ஃபோன் செய்து
தங்களிடம் அட்மிஷன் போடச்சொல்லி
நச்சரிக்கும்
கல்லூரிகள். 

ஓட்டுக்கு காசு தரும் கட்சிகள்.

Comments

  1. இதுவரைக்கும் நடந்த தேர்தல்கள்ல பணம் குடுக்கறவங்களையும் வாங்கறவங்களையும் நா அருவருப்போட பாத்துருக்கேன். அதை எதிர்த்துத்திருக்கேன்.
    ஆனா இந்த தேர்தல்ல
    "வாடி வா... எவ்ளோ வேணுமோ குடு, அள்ளி அள்ளி குடு, எல்லாரும் வாங்கிக்கட்டும்" ன்னு தோணுது.
    வெளியூர்காரங்களுக்கு பஸ் டிக்கெட் ரயில் டிக்கெட் எல்லாம் போட்டு குடுத்துருக்காங்க போல. பரவால்ல. நமக்கு அந்த செலவையும் மிச்சம் பண்ணி குடுத்துட்டாங்க.

    மக்கள் நம்பிக்கையை வாங்கி அதுக்கு உண்மையா ஆட்சி செய்யணும்ங்கிற ஒணத்தி அரசியல்வாதிகளுக்கு இல்லாதப்போ மக்கள் மட்டும் ஏன் பணம் குடுத்த கட்சிக்கு உண்மையா இருக்கணும்னு எதிர்பாக்கறாங்க? பணம் வாங்குன கட்சிக்கு ஓட்டு போட்டே ஆகணும்னு எந்த அவசியமும் இல்லையே.

    இனி என்னப்பா?
    குடுத்த வாக்க காப்பாத்தலேன்னா எப்படி இருக்கும்னு அரசியல்வாதிகளுக்கு காட்ட வேணாமா?? அவங்க குடுத்த மருந்தோட சுவையை அவங்களும் ருசிச்சு பாக்க வேணாமா? இத்தனை செலவு பண்ணியும் இப்படி ஆகிபோச்சே ன்னு உழலட்டும்.
    ஜனநாயகம் வெல்லட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊருப் பக்கம் எல்லாம், "என்ன நம்ம தெருவுக்கெல்லாம் இன்னும் வரல. அந்த so and so-வ கூப்புட்டு பாக்கணும்" னு குடிமக்கள் உரிமையை நிலைநாட்டிட்டு இருக்காங்க.

      மண்டேலா பட க்ளைமேக்ஸ் எல்லாம் அடுத்த தலைமுறையிலயாச்சும் நடக்கணும்.

      அப்புடியே கொஞ்சம் விசிலுக்கு ஓட்டு போட்டு விட்ரு.

      Delete
    2. கண்டிப்பா! அதா சொன்னனே "ஜனநாயக(ன்)ம் வெல்லட்டும்!" ன்னு.

      இன்னொன்னும் டைப் பண்ணி டெலீட் பண்ணிட்டேன் "...அள்ளி அள்ளி கொடுக்கட்டும். அத வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்பலாம்."

      Delete
    3. Youtube மட்டும் பாத்துட்டு இருந்ததில விசில் ஜெயிக்கும்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா இப்போ எலெக்ஷன் கப்பறோம் கொஞ்ச பேர் கிட்ட பேசுனதுல பயமா இருக்கு . இருபெரும் கட்சிகளுக்கு வாக்கு விழுந்துருக்கு.. 50s 60s 70s Early 80s ல பொறந்தவங்கெல்லாம் பழைய கட்சிகளுக்கு தா most ஆ போட்ருக்காங்க. என்ன சொல்ராங்கன்னா விசில் க்கு நிறைய வாக்குகள் வரும் ஆனா சீட் கிடைக்கற அளவுக்கு வராது. இன்னும் ஒரு அஞ்சு வருஷம் ஒரு கட்சியா தாக்குப்பிடிச்சா 31 ல வரலாம்ன்னு. ஒரே கவலையா இருக்கு. எதை நம்பறதுனே தெரியல. இதுல பஸ் வேற விடல. அத்தனை பேரும் ஓட்டு போட்டாங்களான்னு தெரியல.
      இந்த முறை வரலேன்னா இன்னும் அஞ்சு வருஷம்.... கடவுளே.... அஞ்சு வருஷம் எவ்ளோ தூரம்னு மலைப்பா இருக்கு.
      விசில் வந்துரும்ல? மே 4 க்காக கவலையோட வெயிட்டிங்.

      Delete
    4. https://youtube.com/shorts/KJzno_KyAcY?si=3zTOLTdZe8eQ8kgz

      Delete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?