இதுவரைக்கும் நடந்த தேர்தல்கள்ல பணம் குடுக்கறவங்களையும் வாங்கறவங்களையும் நா அருவருப்போட பாத்துருக்கேன். அதை எதிர்த்துத்திருக்கேன். ஆனா இந்த தேர்தல்ல "வாடி வா... எவ்ளோ வேணுமோ குடு, அள்ளி அள்ளி குடு, எல்லாரும் வாங்கிக்கட்டும்" ன்னு தோணுது. வெளியூர்காரங்களுக்கு பஸ் டிக்கெட் ரயில் டிக்கெட் எல்லாம் போட்டு குடுத்துருக்காங்க போல. பரவால்ல. நமக்கு அந்த செலவையும் மிச்சம் பண்ணி குடுத்துட்டாங்க.
மக்கள் நம்பிக்கையை வாங்கி அதுக்கு உண்மையா ஆட்சி செய்யணும்ங்கிற ஒணத்தி அரசியல்வாதிகளுக்கு இல்லாதப்போ மக்கள் மட்டும் ஏன் பணம் குடுத்த கட்சிக்கு உண்மையா இருக்கணும்னு எதிர்பாக்கறாங்க? பணம் வாங்குன கட்சிக்கு ஓட்டு போட்டே ஆகணும்னு எந்த அவசியமும் இல்லையே.
இனி என்னப்பா? குடுத்த வாக்க காப்பாத்தலேன்னா எப்படி இருக்கும்னு அரசியல்வாதிகளுக்கு காட்ட வேணாமா?? அவங்க குடுத்த மருந்தோட சுவையை அவங்களும் ருசிச்சு பாக்க வேணாமா? இத்தனை செலவு பண்ணியும் இப்படி ஆகிபோச்சே ன்னு உழலட்டும். ஜனநாயகம் வெல்லட்டும்!!
எங்க ஊருப் பக்கம் எல்லாம், "என்ன நம்ம தெருவுக்கெல்லாம் இன்னும் வரல. அந்த so and so-வ கூப்புட்டு பாக்கணும்" னு குடிமக்கள் உரிமையை நிலைநாட்டிட்டு இருக்காங்க.
மண்டேலா பட க்ளைமேக்ஸ் எல்லாம் அடுத்த தலைமுறையிலயாச்சும் நடக்கணும்.
Youtube மட்டும் பாத்துட்டு இருந்ததில விசில் ஜெயிக்கும்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா இப்போ எலெக்ஷன் கப்பறோம் கொஞ்ச பேர் கிட்ட பேசுனதுல பயமா இருக்கு . இருபெரும் கட்சிகளுக்கு வாக்கு விழுந்துருக்கு.. 50s 60s 70s Early 80s ல பொறந்தவங்கெல்லாம் பழைய கட்சிகளுக்கு தா most ஆ போட்ருக்காங்க. என்ன சொல்ராங்கன்னா விசில் க்கு நிறைய வாக்குகள் வரும் ஆனா சீட் கிடைக்கற அளவுக்கு வராது. இன்னும் ஒரு அஞ்சு வருஷம் ஒரு கட்சியா தாக்குப்பிடிச்சா 31 ல வரலாம்ன்னு. ஒரே கவலையா இருக்கு. எதை நம்பறதுனே தெரியல. இதுல பஸ் வேற விடல. அத்தனை பேரும் ஓட்டு போட்டாங்களான்னு தெரியல. இந்த முறை வரலேன்னா இன்னும் அஞ்சு வருஷம்.... கடவுளே.... அஞ்சு வருஷம் எவ்ளோ தூரம்னு மலைப்பா இருக்கு. விசில் வந்துரும்ல? மே 4 க்காக கவலையோட வெயிட்டிங்.
"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை." "நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்." மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts). அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார். (தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.) இன்னும் இரண்டு கூற்றுகள். "சென்னை ஓர் அழகான ஊர்." "நண்டு படம் நன்றாக இருக்காது." இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions). தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம். அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும். ... பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு. 1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது. 2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கரு...
ராமசாமி வாத்தியார் அயலூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, நாமக்கல் பாளையம் - என்ற சொற்றொடரைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே முழுப் பள்ளிக்கூடத்தையும் சுற்றி வந்து விடலாம். அவ்வளவு சிறியதுதான் நான் படித்த பள்ளி. அங்கே எங்களுக்குப் பாடம் சொன்ன ஆசிரியர்களில் மூவர் மட்டுமே என் நினைவில் நிற்கிறார்கள். அதில் முதலாமவர் ராமசாமி வாத்தியார். அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். பத்து வயதுக்கும் கீழிருந்த குழந்தைகளுக்கு அறுபது வயது ஆசிரியர் என்பதே எவ்வளவு அழகான சூழ்நிலை! அவருக்கும் எங்களுக்குமான உறவு, ஒரு தாத்தாவுக்கும் பேரப் பிள்ளைகளுக்குமான உறவாகவே இருந்தது. வெள்ளை வேட்டி சட்டையில்தான் வருவார்; எங்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடுவார்; 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற விளையாட்டை எங்களுக்கு சொல்லித் தந்தவரும் அவரே. எவ்வளவு சிரத்தையெடுத்து யோசித்தாலும், அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதான நினைவு ஒன்று கூட வரவில்லை. பிறகு என்னதான் செய்வார்? கதைதான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அனைவரையும் சேர்த்து மொத்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையே முப்பதோ நாற்பதோதான் இ...
இப்போது தீர்ப்பு வந்துள்ள ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை எடுத்துக்கொள்வோம். அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை வாட்ஸேப் ஸ்டேட்டஸில் பதிவிடும் பலரும் "நீதி வென்றது" என்று பதிவிட்டு வருகிறார்கள். முதலில் எதிலெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் போது அது பாராட்டப்பட வேண்டும். அதிலே இரண்டாம் கருத்தே இல்லை. இப்போது தண்டனை என்பதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம். பள்ளிக்குள்ளே குப்பை போட்டால் பத்து ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்வோம். அதன் நோக்கம் பத்து ரூபாயை இழப்பதற்கு அஞ்சி யாரும் குப்பை போடக்கூடாது என்பதேயொழிய, அந்தப் பணத்தை கூலியாட்களுக்குக் கொடுத்து குப்பையை அள்ளிப் போடலாம் என்பதல்ல. இந்த உதாரணத்தில் பிரச்சினை குப்பை இல்லை. குப்பை போட வேண்டும் என்று ஒருவர் மனதில் தோன்றும் எண்ணமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. தொடர்ந்து நூறு வருடங்களுக்கு அந்தப் பள்ளியில் தினந்தோறும் பத்து பத்த...
இதுவரைக்கும் நடந்த தேர்தல்கள்ல பணம் குடுக்கறவங்களையும் வாங்கறவங்களையும் நா அருவருப்போட பாத்துருக்கேன். அதை எதிர்த்துத்திருக்கேன்.
ReplyDeleteஆனா இந்த தேர்தல்ல
"வாடி வா... எவ்ளோ வேணுமோ குடு, அள்ளி அள்ளி குடு, எல்லாரும் வாங்கிக்கட்டும்" ன்னு தோணுது.
வெளியூர்காரங்களுக்கு பஸ் டிக்கெட் ரயில் டிக்கெட் எல்லாம் போட்டு குடுத்துருக்காங்க போல. பரவால்ல. நமக்கு அந்த செலவையும் மிச்சம் பண்ணி குடுத்துட்டாங்க.
மக்கள் நம்பிக்கையை வாங்கி அதுக்கு உண்மையா ஆட்சி செய்யணும்ங்கிற ஒணத்தி அரசியல்வாதிகளுக்கு இல்லாதப்போ மக்கள் மட்டும் ஏன் பணம் குடுத்த கட்சிக்கு உண்மையா இருக்கணும்னு எதிர்பாக்கறாங்க? பணம் வாங்குன கட்சிக்கு ஓட்டு போட்டே ஆகணும்னு எந்த அவசியமும் இல்லையே.
இனி என்னப்பா?
குடுத்த வாக்க காப்பாத்தலேன்னா எப்படி இருக்கும்னு அரசியல்வாதிகளுக்கு காட்ட வேணாமா?? அவங்க குடுத்த மருந்தோட சுவையை அவங்களும் ருசிச்சு பாக்க வேணாமா? இத்தனை செலவு பண்ணியும் இப்படி ஆகிபோச்சே ன்னு உழலட்டும்.
ஜனநாயகம் வெல்லட்டும்!!
எங்க ஊருப் பக்கம் எல்லாம், "என்ன நம்ம தெருவுக்கெல்லாம் இன்னும் வரல. அந்த so and so-வ கூப்புட்டு பாக்கணும்" னு குடிமக்கள் உரிமையை நிலைநாட்டிட்டு இருக்காங்க.
Deleteமண்டேலா பட க்ளைமேக்ஸ் எல்லாம் அடுத்த தலைமுறையிலயாச்சும் நடக்கணும்.
அப்புடியே கொஞ்சம் விசிலுக்கு ஓட்டு போட்டு விட்ரு.
கண்டிப்பா! அதா சொன்னனே "ஜனநாயக(ன்)ம் வெல்லட்டும்!" ன்னு.
Deleteஇன்னொன்னும் டைப் பண்ணி டெலீட் பண்ணிட்டேன் "...அள்ளி அள்ளி கொடுக்கட்டும். அத வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்பலாம்."
Youtube மட்டும் பாத்துட்டு இருந்ததில விசில் ஜெயிக்கும்ங்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா இப்போ எலெக்ஷன் கப்பறோம் கொஞ்ச பேர் கிட்ட பேசுனதுல பயமா இருக்கு . இருபெரும் கட்சிகளுக்கு வாக்கு விழுந்துருக்கு.. 50s 60s 70s Early 80s ல பொறந்தவங்கெல்லாம் பழைய கட்சிகளுக்கு தா most ஆ போட்ருக்காங்க. என்ன சொல்ராங்கன்னா விசில் க்கு நிறைய வாக்குகள் வரும் ஆனா சீட் கிடைக்கற அளவுக்கு வராது. இன்னும் ஒரு அஞ்சு வருஷம் ஒரு கட்சியா தாக்குப்பிடிச்சா 31 ல வரலாம்ன்னு. ஒரே கவலையா இருக்கு. எதை நம்பறதுனே தெரியல. இதுல பஸ் வேற விடல. அத்தனை பேரும் ஓட்டு போட்டாங்களான்னு தெரியல.
Deleteஇந்த முறை வரலேன்னா இன்னும் அஞ்சு வருஷம்.... கடவுளே.... அஞ்சு வருஷம் எவ்ளோ தூரம்னு மலைப்பா இருக்கு.
விசில் வந்துரும்ல? மே 4 க்காக கவலையோட வெயிட்டிங்.
https://youtube.com/shorts/KJzno_KyAcY?si=3zTOLTdZe8eQ8kgz
Delete