வெறுப்பு பிரச்சாரம்

திமுக-வில் உறுப்பினராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒரு மீம் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.


அதில் இருந்ததை அப்படியே தருகிறேன். 


"இப்ப என்ன..‌. ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு 7 அமைச்சர் பதவி குடுத்ததுக்காக ஃபயர் விடனும்.. அதானே..?! சிறப்பா விட்டு விடுவோம்... உனக்கு இல்லாததா...?!


ஒன்னு மட்டும் பண்ணு... விசிக வன்னியரசுக்கு கொடுத்த ஆதி திராவிடர் நலத்துறையை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கிட்ட குடுத்துட்டு, அவருகிட்ட இருக்குற அறநிலையத்துறையை வன்னியரசுகிட்ட கொடு...


நானே முன் வரிசையில நின்று, மூணு ஃபயர் விடறேன்...!" 


முதலில் இந்தப் பதிவில் இருக்கும் தர்க்கத்தைப் பார்ப்போம்.


பிறகு இதில் இருக்கும் மொழி அரசியலைப் பேசுவோம்.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவர் வரவேண்டும் என்ற அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். அது ஒரு புரட்சிகரமான கருத்து. மாற்றுக் கருத்தே இல்லை எனக்கு. 


என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன்.


பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் Women Empowerment Cell என்ற ஒன்று இருக்கும். அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஏன் எப்போதும் பெண்களையே நியமிக்கிறார்கள் என்று யோசித்தால், திரு. வன்னி அரசு அவர்கள் ஏன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரியும்‌.


பெண்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது பெண்களுக்குத்தான் அனுபவப்பூர்வமாகத் தெரியும்.


அந்த அடிப்படையில்தான், ஆதி திராவிடர் நலத்துறையை ஆதி திராவிடர் வசம் தருவதும்.


அது ஒன்றும் அநியாயம் கிடையாது‌. 


கடந்த திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்களாக இருந்த திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் டாக்டர். மதிவேந்தன் அவர்கள் ஆகியோரும் பட்டியலின சமூகத்தின் பிரதிநிதிகளே.


திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு‌. சேகர் பாபு அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் கிடையாது. 


பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களைப் பாராட்டலாம். குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்கள் கூடப் பரவாயில்லை. 


குற்றம் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி எனும் பெயரில் இது போன்ற  அபத்தமான வாதங்களை முன் வைப்பவர்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான். 


தான் உறுப்பினராக இருக்கும் கட்சியினை "வெறுப்பு பிரச்சாரக் கட்சியாக"  neutral voters மனதில் பதிய வைப்பதே அவர்கள் செய்யும் தலையாயப் பணி.


 மொழி அரசியல்


இப்போது அந்தப் பதிவில் இருக்கும் மொழிப் பிரயோகத்தைப் பார்ப்போம்.


ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் பெயரை எழுதும் போது, "திரு" என்று மரியாதையுடன் எழுதாமல், ஏதோ ஒரு குழந்தையின் பெயரைச் சுட்டுவது போல எழுதியிருக்கிறார்.


ஸ்ரீரங்கம் எம்எல்ஏ-வின் பெயர் தெரியாதா எழுதியவருக்கு? 


அவரது பெயரை ஏன் குறிப்பிடவில்லை? திரு. வன்னி அரசு அவர்களைக் குறிப்பிடும் போது ஏன் திண்டிவனம் எம்எல்ஏ என்று சொல்லாமல், இரண்டு முறையும் மரியாதை இல்லாமல் பெயரை மட்டும் குறிப்பிடுகிறாரே! 


இவர்தான் திரு. வன்னி அரசு அவர்களுக்கு இந்து அறநிலையத்துறை கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாரா?

Comments

  1. மொழி அரசியல் spot on 👏🏻👏🏻👏🏻

    தான் உறுப்பினராக இருக்கும் கட்சியினை "வெறுப்பு பிரச்சாரக் கட்சியாக" neutral voters மனதில் பதிய வைப்பதே அவர்கள் செய்யும் தலையாயப் பணி. - இது வேறொரு கட்சியின் தேர்தல் உத்தியாகவும் இருந்ததை நினைவூட்டுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?