என்னாலிதெழுதப்படாவிடினுமெழுதப்படுமிதின்னொருவரால்

எழுத்தின் உச்சம் எழுதாமலிருப்பது.

எழுத ஏதேனும் நோக்கமுண்டு.

எழுதாமல் இருப்பதிலும் நோக்கமுண்டு.

நோக்கமற்றிருப்பதொரு நோக்கமில்லையா?

...

இன்றெழுதப்படுவதென்பது
என்றுமே எழுதப்படாததாகிப்போகும் காலம் வருமெனும்போது,
எழுதுவதன் நோக்கந்தானென்ன?

...

குழலெடுத்திசைத்திடுந்தேவையின்றி,
மூளைக்குள்ளேயே கேட்டிடுமிசையெனும்போதும்
குழலெடுத்திசைத்திடும் வீணரே கலைஞர்.

என்னிலே தோன்றியதோரெண்ணம் எல்லாரையுமடையட்டுமென்பதென்னெண்ணமா?

அல்லதவ்வெண்ணம் என் மூலமேயவரையடையட்டுமென்பதென்னெண்ணமா?

...

என்னில் தோன்றியவெண்ணம் என்னெண்ணமில்லை.

அதோரெண்ணம். 

என்னாலதெழுதப்படாவிடினுமெழுதப்படுமதின்னொருவரால்.

எழுத்தழியும். எண்ணமழியாது.

இப்போதிந்தவுலகில் எழுதப்பட்டுக்கிடக்கும் அனைத்துமிந்தக்காலமெனும் பெருவெள்ளத்தில் நிர்த்தாட்சண்யமாய் துடைத்தழிக்கப்பட்டபிறகும்,

லட்சங்கோடியுகங்கழித்து
இன்னொரு மூளையிலுந்தோன்றலாமிப்படி

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே!

...

மீண்டுமொரு காலத்தில்
அதுவே மீண்டும் தடயமின்றியழிந்தோடும்.

...

பிரபஞ்சத்திலுலவித்திரியுமனைத்தெண்ணங்களையுமேந்திக்கொள்ளுமளவு பரந்த மடி மானிடர்க்கில்லை.

...

இருந்துமெழுதுகிறோம் --
அலைவந்தழித்துப் போகுமெனத்தெரிந்தும் மணல் வீடு கட்டிப் பார்க்குங்குழந்தைகளாய்.

மணல் வீடு மற்றோர்க்கில்லை.

அதுவந்தக்குழந்தைக்கு மட்டுமேயானது.

therefore,

ஐயகோ! என்னெழுத்திந்தவுலகத்தாருக்குப் புரியாமலே போய்விடுமோவென்ற பயமெனக்குத் தோன்றுமளவு பொதுநலவெண்ணமெனக்கில்லை.

ஆகா, இதன் நடைதான் சரியா?
அணிகளெலாமழகா?

இலக்கணப்பிழைகளற்றுளதா?

அதற்குப்பின்னிதுவாயில்லையிதற்குப்பின்னதுவா? 

சான்றோர் சபையில் இது தேறுமா?

மயிரைப் பிடுங்கிக் காற்றில் விடு.

...

Comments

  1. இப்படியொருமொழிநடையை கண்டதில்லையிதுவரை. முதலாமுறையெழுத்துகூட்டிப் படித்திரண்டாமுறை'கடகட'விலொரு கடவெனவாசிக்கமுடிந்துமூன்றாமுறையிரண்டாம்கடமுமிணைந்துகொண்டது.
    வாதலைவாவாதலைவா!!
    இன்னுமிதுபோல பற்பலயெண்ணங்களுமெழுத்துக்களுமுதிக்கட்டுமுன்னிடம்.

    ReplyDelete
  2. இரண்டாம் கடமும் இணைந்து கொண்டது. 👏👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?