FELLOW INTELLECTS
ஒரு பறவைகள் சரணாலயத்தில், அவைகளுக்குத் தீனி வைக்கும் வேலைக்கோ; 10:30 மணி 'இன்றே கடைசி' ஷோவில் black ticket விற்கும் ஆபத்பாந்தவனாகவோ; கவிஞர் விக்கிரமாதித்தனுடனே சுற்றிக்கொண்டு, தக்க சமயங்களில் அவர் மனதறிந்து அவருடைய சாராயக்கோப்பைகளுக்கு மிக்ஸிங் போட்டுத்தருபவனாகவோ; அசோகமித்திரன் வீட்டில் நளபாகக்காரனாகவோ; சுப்பிரமணிய பாரதிக்கு முகக்கேசம் மழிப்பவனாகவோ; சார்லஸ் புக்கோவ்ஸ்கி-க்கு சில்லம் வைத்துத் தருபவனாகவோ; செல்வராகவனுக்கு உதவியாளனகவோ; இளையராஜாவிடம் தபேலா வாசிப்பவனாகவோ; சாம் ஆண்டர்சனின் PRO-வாகவோ; தியேட்டரில் டார்ச்பாய் வேலைக்கோ; ஓர் 'ஆல் இண்டியா பெர்மிட்' லாரியில் க்ளீனராகவோ; ஒரு கேரளத்துக் கள்ளுக்கடையில், வருபவர்களுக்கு வெந்நீரில் வேகவைத்த குச்சிக்கிழங்கும், கருவாட்டுப் பொரியலும் கொணர்ந்து தந்துகொண்டே, அந்தக்கடையில் ஓர் அறிவிக்கப்படாத Your friendly neighborhood RJ-வாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கன்னியாகுமரி அகதிச் சிறுவனாகவோ; கண்பார்வை இல்லாத ஒரு ஜெயகாந்தன் இரசிகருக்கு புத்தக வாசிப்பாளனாகவோ பிழைப்பு நடத்தச் சொல்லியிருந்தால், குதூகலத்துடன் சோத்துப் போசியைத் தூக்கியிருப்பேன். வேலைக்குச் சேர்ந்த முதல் முற்பகலே எனக்குத் தெரிந்துவிட்டது. ...that teaching at a CBSE school in an urbanizing rural town can never be my cup of tea.
அணுவின் உட்கரு அளவுக்குக்கூட விருப்பமில்லையென்றபோதிலும் கூட, அதிகபட்சமாக ஓர் அழுகையை மட்டுமே வாழ்க்கையின் the most dramatic moment - ஆக அறிந்திருக்கக்கூடிய Pre-KG குழந்தைகள், ஓர் ஒழுங்கான வரிசையில் என்னைக் கடந்துசென்றார்கள். அவர்கள் நடையில் புகுத்தப்பட்டிருந்த நிதானம் எழிலாயிருந்தபோதும் கூட என்னைக் கலவரப்படுத்தியது. அவர்களை வழிநடத்திச்சென்ற, வாழ்க்கையில் தானேகூட அதுவரை சுயமாய் நடைபோட்டிருக்க வாய்ப்பில்லாத இளவயது ஆசிரியையின் கையிலிருந்த 'அடிக்க உபயோகப்படுத்தக்கூடாது' என்ற நிபந்தனையுடன் கொடுக்கப்பட்டிருந்த பிரம்பில் இருந்தது, அந்தப் பிஞ்சுப் பாதங்களின் ஒத்திசைவுக்கான கணிதவியல் சூத்திரம். அன்றுதான் நான் அந்தப்பள்ளியில் சேர்ந்திருந்தேன் - எனது விருப்பத்துக்கு மாறாக. கிம் கி டுக் போன்ற மனிதர்களை பரவசப்படுத்தும் சினிமாக்களை எடுக்கவேண்டும் என்ற பேராசைக்கு சற்றே இளைப்பாறல் தரவேண்டிய கட்டாயமான சூழல். அந்த இளைப்பாறல் மூன்று நாள் மட்டும் நீடித்தால் போதுமென்று தீர்மானித்துவிட்டேன் - அக்குழந்தைகளின் அடக்க ஒடுக்கத்தைப் பார்த்துவிட்டு அடுத்தமுறை இமைப்பதற்கு முன்னமே!
மூன்று நாளில் சம்பளத்தேதி. முதல் மாதத்தில் ஒரே ஒரு நாள் வேலைக்கு வந்திருந்தாலும் கூட, அதற்கான சம்பளத்தைத் தந்துவிடுவார்கள் என அறிந்தேன். I was like... Okay, the school isn't that bad.
பதினோராம் வகுப்புக்குத்தான் முதன்முதலாக அனுப்பிவைக்கப்பட்டேன். அதுவரை கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியிருந்த எனக்கு, வகுப்பில் நான் நுழைவதற்கு முன்னமே நிலவிவந்த அமைதி பேராச்சர்யமளித்தது. ஆண்கள் - பெண்களுக்கும், சிறுவர் - சிறுமியருக்கும் இடையே இருந்த நபர்கள் துளிகூட விஷமத்தை வெளிக்காட்டாத முகங்களுடன், ரெகார்டு நோட் எழுதிக்கொண்டிருந்தார்கள். நான் முன்னே சென்று நின்றேன். அனைத்து முகங்களையும் பொறுமையாக ஒருமுறை பார்க்க எடுத்துக்கொண்ட நேர இடைவெளியில், 'இவர் எப்படிப்பட்டவர்' என்ற மர்மத்தை அவர்கள் கண்களில் நிலவச் செய்தேன். பின்னர் ஒரு பனிக்கட்டி உடைப்புப் புன்னகை மூலம் அனைவருடனும் கைகுலுக்கிக் கொண்டேன். ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினேன்.
"இரண்டு நீண்ட வயல்வெளிகளின் ஊடாக ஓடும் ஒரு தார்சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அதில் சாய்ந்து உட்கார்ந்து, காதுகளில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, வயல்களைப் பார்த்தபடியே புகைப்பிடிக்கும் ஓர் ஆளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?" என்றேன்.
அமைதி காத்தனர்.
"ஓகே! நைஸ் டூர் மீட் யூ ஆல். ஐம் வசந்தன்." என்றேன்.
ஒரு கல்லூரிக்கும் பள்ளிக்கும் உள்ள வேறுபாடுகளைக் கிரகித்துக்கொள்ள எனக்கு ஒருநாள் போதுமாயிருந்தது. நான் சென்ற மூன்று வகுப்பு மாணவருக்கும் என்னை ஓரளவு பிடித்துப்போனதாக உணர்ந்தேன். மூன்று நாள்கள் மட்டுமே நான் பள்ளிக்கு வருவேன் என்று அவர்களுக்குச் சொல்லத் தோன்றவில்லை. என்னைப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, அச்செய்தி அவர்களுக்கு நல்லதோர் அனுபவமாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டேன். எனக்குமே!
பதினோராம் வகுப்பு. B Section.
"வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நினைவுகள், உறவுகள், வீடு, அடையாளம், பணம் - அனைத்தையும். அதுவரை நீங்கள் சேர்த்துவைத்திருக்கும் அறிவு மட்டும் உங்களிடம் உள்ளது. அதனுடன், விளிம்புவரை பெட்ரோல் நிரப்பப்பட்ட, உங்கள் பெயரில் உள்ள ஓர் இருசக்கர வாகனமும், அதற்கான முறையான காகிதங்களும். என்ன செய்வீர்கள்?" என்றேன் ஆங்கிலத்தில். நேர்மையான யோசனையுடன் அமைதி காத்தனர். 'இதற்கு ஓரிரு சொற்றொடர்களில் பதிலளிக்க முடியாதே!' என்று அவர்கள் உணரும் வினாடியில்,
"பதிலைச் சொல்ல வேண்டாம். எழுதுங்கள். ஒரு தாளை எடுத்து." என்றேன்.
அனைவரும் ஆயத்தப் பணிகளில் இறங்கினார்கள். குழப்பமான, வெறுப்பான, குதூகலமான, கர்வமான கிசுகிசுப்புகள் கேட்டன.
முதல் பென்ச்சிலிருந்த இரண்டு பெண்கள் அவசர அவசரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எனது கண்பார்வை அவர்களின் பக்கம் சென்றபோது, 'உங்களுக்குத் தெரியாமல் பேசியிருக்கவேண்டும். இப்போது அகப்பட்டுக்கொண்டோமே!' என்று என்னால் மொழிபெயர்க்கப்பட்ட ஓர் உதட்டுச் சுழிப்பைச் செய்தாள் அவர்களில் ஒருத்தி.
"கலந்தாலோசித்து எழுத வேண்டுமானால் அதைச் செய்யுங்கள். ஒரு நல்ல ஆலோசனை உங்கள் பார்வையின் எல்லையை விரிவாக்கும். பேசத் தயங்காதீர்கள். பேசுதல் பாவமல்ல." என்றேன் அனைவரிடமும்.
உதட்டுச் சுழிப்புக் காரிக்கு அருகிலிருந்த குதிரைவால் சடை போட்ட பெண், 'நான்தான் உன்னிடம் அப்போதே இதைத்தானே சொன்னென்' என்ற பொருளில் பழிப்புக் காட்டினாள்.
நான் அப்படியே வகுப்பு முழுக்க உலா வந்தேன். பெண்கள் வரிசைக்கு அருகே இருந்த பக்கவாட்டுச் சுவரில் பல்வேறு வண்ண மெல்லட்டைகளில் (chart) பல்வேறு வண்ண எழுத்துகளில் பொன்மொழிகள் எழுதி ஒட்டப்பட்டிருந்தன. _The Fault in Our Stars_ படத்தின் _All of the Stars_ பாட்டின் ஆல்பம் விடியோவை நினைவுபடுத்தியது. *The difference between ordinary and extra-ordinary is that 'extra'* என்ற வாசகத்தைப் பார்த்து, ரொம்ப நாளாக கிடப்பில் போட்டிருந்த மனசாட்சியிலிருந்து துருப்பிடித்த எஞ்ஜினின் உறுமல் சத்தம் கேட்டது. ஓர் அக்கினிப் பிரவேசத்துக்குத் துணியாததால், நகர்ந்துவிட்டேன்.
ஆங்காங்கே சிலர் ஒரு leisure period கிடைத்த மகிழ்ச்சியை முகங்களில் போஸ்டர் அடித்து ஒட்டாமல், கள்ள மெளனம் சாதித்தனர். சிலர் நிஜமாகவே ஆலோசிப்பது தெரிந்தது. ஆண்களின் பக்கம் வந்தேன். யோசிக்கும் பாவனையில் கரும்பலகையையே வெறித்துப்பார்த்த மாணவன் ஒருவன், நான் அவனைப் பார்த்ததும் நாணப் புன்னகை பூத்தான். 'என்ன கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்' என நினைத்தானோ என்னவோ, கடைசி இருக்கைக்கு முன்னிருக்கை மாணவன் ஒருவன் ஜன்னல் வழியாக வெளியுலகுடன் உறவாடிக்கொண்டிருந்தான். பத்து வருடங்களுக்கு முன்னே நானும் அவனாகத்தான் இருந்தேன் என்பதால், அவனைக் கேள்வி கேட்டால் என்ன திட்டுவான் என்று எனக்குத் தெரிந்திருந்தது. எனவே, அவனது உறவாடலைத் தொந்தரவு செய்யவில்லை.
'சார், நீங்க எழுதச் சொன்னது, நாங்க அமைதியா இருக்கணும்-ங்கறதுக்காக. அது எங்களுக்குத் தெரியும். க்ளாஸ்-ல எல்லாருமே டால்ஸ்டாயா இருக்கணும்-னு அவசியம் இல்ல. அதனால, நாங்க எழுதவும் இல்ல, டிஸ்கஸனும் பண்ணல. அமைதியா உக்காந்துக்கறோம். உங்கள நாங்க டிஸ்டர்ப் பண்ணல, நீங்களும் எங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டீங்கனு நம்பறோம்' என்று சொல்வது போல, வெறுமனே அமர்ந்திருந்தனர் the prestigious last bench. அவ்வப்போது நான் அவர்களைப் பார்த்தபோதும்கூட அவர்களின் பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக்கொள்ளவில்லை, ஓர் அசட்டுச் சிரிப்பு கூட இல்லை. நேராக என்னைப் பார்த்து, 'இங்க வாங்க சார். எதாச்சும் பேசலாம்' என்பதுபோலப் புன்னகைத்தனர்.
"ஒருவனால், எட்டு மணிநேரம் ஒரே இடத்தில், எந்தச் செயலும் செய்யாமல் வெறுமனே இருக்கமுடியுமெனில், அவனால் நிச்சயம் ஒரு சினிமா இயக்குனன் ஆகமுடியும்" என்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் சொன்னதை, ஓர் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் நம்பத்தொடங்கியவன் நான். எனவே, 'சும்மா' இருப்பவர்களை எனக்கு எளிதில் பிடித்துப்போனது. அவர்கள் உண்மையில் 'சும்மா' இல்லை, தம்மைச் சுற்றி நிகழ்ந்த அனைத்தையும் தம் புலன்கள் மூலம் உட்கிரகித்துக்கொண்டிருந்தார்கள் என்று எனக்குத் தெரியுமென்பதால், அவர்களையும் தொந்தரவு செய்யவில்லை.
இரண்டாவது இருக்கைக்கு வந்தேன். ஒரு மாணவன் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான். நானும் அச்செயலை ஆதரிப்பவந்தான் என்றபோதிலும், அவனாகவே சுயமாக ஒரு நல்ல முடிவை எடுத்தது, நான் சொல்லியிருந்த யோசனையை உதாசீனப்படுத்தியதாக என்னை நம்பவைத்து - எனது ego குளத்தின்மீது ஒரு தட்டையான கல்லை வீசி, பலமுறை தாவிச்செல்லுமாறு செய்தது. 'என்னதான் ஒரு மாணவன் நல்வழியில் சென்றாலும், அது தன்னால் அடையாளம் காட்டப்பட்ட நல்வழியாக மட்டுமே இருக்கவேண்டும்' என்ற ஓர் ஆசிரியனுக்கே உரித்தான எதேச்சதிகாரம், எனது நாளமில்லாச் சுரப்பிகளில் அறச்சீற்றத்தைச் சுரந்தது. அந்தச் சிறுவயது புத்தன் - அந்தப் பள்ளி முதலாளியின் மகனாகவும் இருக்கப்பெற்றது, என்னை வீறுகொள்ளச் செய்தது.
ஆங்கிலத்தில் உரையாடினேன்.
"ஏன் எழுதவில்லை?" என்றேன்.
"பேனா இல்லை." என்றான்.
அதை நம்புமளவுக்கு நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறான் என்று ட்ரிம் செய்யப்பட்டிருந்த என் மீசை துடித்தது.
"ஏன் பேனா இல்லை?" என்றேன்.
அடுத்து அவன் சொன்ன வாக்கியம் என்னைத் திகைக்க வைத்ததோடல்லாமல், அவன் மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தியது. அதற்கான காரணங்களுள் ஒன்று, அவன் பேசிய தவறில்லா ஆங்கிலம். அதனால், அதனை அப்படியே இங்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
துளிகூட அலட்டிக்கொள்ளாத உடல்மொழியுடன், அநாயசமாகப் பேசினான், அவனுக்கு அருகிலிருந்த மாணவனின் பேனாவைச் சுட்டிக்காட்டிக்கொண்டே.
"Actually sir, he got my pen yesterday - rather snatched it from me assuring that he would give his in return today. He didn't save his words. So, technically that's my pen."
என்னையுமறியாமல் அவனை இரசிக்கத் தொடங்கியிருந்ததை நான் உணர்ந்தபோது, அவன் பதிலை பேசிமுடித்துவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது சொற்றொடரை சற்றே பிரேதப் பரிசோதனை செய்து பார்த்தேன்.
*வாக்கியத்தைப் பேச ஆரம்பித்துவிட்டு, பின்னர் rather என்றொரு கடப்பாறையைக் கொண்டு நான்காம் சுவரை உடைத்திருக்கிறான். (Breaking the fourth wall)
*Reported speech-ல், 'his pen' என்று கர்மசிரத்தையுடன் சொல்லாமல், 'his' என்று மட்டும் சொல்லியிருக்கிறான் வசீகரமாக.
*'He didn't bring his pen today to be given to me as he had promised' என்று 'சீன்' போடாமல், நான்கே வார்த்தைகளில் முடித்துவிட்டான் கதையை.
* Technically என்ற பிரம்மாஸ்திரத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.
* அவன் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் His Girl Friday படத்தில் Cary Grant பேசுவதுபோல சடுதியில் பேசி முடித்திருந்தான்.
அவனுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு, ஆசிரியர் அறைக்குச் சென்றேன். லெஸென் ப்ளான் எழுதும் நோட்டில், ஒரு பக்கம் இருந்தது. "என்னை ஊக்குவித்த மாணவர்கள்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதிலே எழுதினேன் அவனது பெயரை.
அடுத்த நாளே இன்னொரு பாடம் எனக்கு, அதே வகுப்பறையில்.
"காலப் பயணம் (Time Travel) சாத்தியமா?" எனக் கேட்டேன்.
பதில் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பாதுகாப்பான முறைதான். தெரியாத விஷயங்களை 'தெரியாது' என்று சொல்லும் ஓர் அடிப்படை உரிமை கூட இல்லாத ஜீவராசிகளே ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லும் சமுதாயம், ஸ்டீபன் ஹாக்கின்ஸின் ஆசிரியர்களுக்குக் கூட, தியரி ஆஃப் எவ்ரிதிங் எதுவென்று தெரியாமல் போன காரணம் என்னவென்று சொல்லுமா? 'ஆசிரியருக்கே தெரியவில்லையா?' என்ற ஏளனச் சிரிப்போசைகள் அடங்கும்வரை, omniscient - ஆக நாங்களும் நடிக்கத்தான் வேண்டும். சரி, வகுப்பிற்கு வருவோம்.
தெரியும், தெரியாது, நடக்கும், நடக்காது போன்ற பதில்கள் கலந்து வந்தன. 'சாத்தியமில்லை' எனச் சொன்னால், 'ஏன்' என்பேன். 'சாத்தியம்' எனச் சொன்னால் 'எப்படி' என்பேன். ஒரு கல்லூரிக்கு ஆள் பிடிக்... மாணவர் சேர்க்கைக்காக தொலைபேசியில் அழைத்துப் பேசும் அக்கல்லூரிப் பேராசிரியரின் குரலைக் கேட்டாலே எரிச்சலடையும் பள்ளி மாணவர்களைப் போல, 'பதில் தெரியவில்லை' என்று சொன்னபிறகும், குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் ஆசிரியர்களைக் கண்டாலும் 'புளகாங்கிதம்' அடைகிறார்கள். எனக்குத் தெரியும்தான். அதற்காக? அது எனது வகுப்பு. நானே ராஜா, நானே மந்திரி! நான் தொடர்ந்தேன் எனது வேட்டையை.
'காலப் பயணம் சாத்தியமில்லை' என்று சொன்ன ஒரு மாணவியிடம், 'அதற்கான நிரூபணம் என்ன?' என்று கொக்கரித்தேன். அவள் பாவம் என்ன செய்வாள்! ஐன்ஸ்டைன் போல உள்ளுணர்வுப்படி சிந்தித்த ஒரு பெண்ணை, தர்க்க ரீதியான காரணம் கேட்டு, ஓர் எதிர்கால ஐன்ஸ்டைனைத் தடுத்து நிறுத்தினேன்.
வேறொரு திசையிலிருந்து ஒரு டெஸ்லாவின் குரல் கேட்டது.
"சார், காலப் பயணம் சாத்தியம்தான்."
"எப்படி?" என்றேன், அதனைப் பொய்யாக்கும் ருசு என்னிடம் இருந்த தைரியத்தில்.
"கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே, ஒன்றாகவே இருப்பவைதான்." என்றான்.
இதற்கு மேல் இவனை விட்டுவைக்கக் கூடாது என நினைத்துக்கொண்டு,
"'காலப்பயணம் சாத்தியமென்றால், எதிர்காலத்திலிருந்து வரும் மனிதர்களை இந்நேரம் நாம் அறிந்திருப்போம். அப்படி எதுவும் நடக்காததால், காலப்பயணம் சாத்தியமில்லை' என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்லியிருக்கிறாரே!" என்றேன், கனிவுத்தோல் போர்த்திய திமிரோடு.
எனது அகந்தையை நொறுக்கினான் அவன்.
"சார், முதலில் எதிர்காலத்திலிருந்து யாரும் வரவில்லையென்று நம்மால் சர்வநிச்சயமாகச் சொல்லமுடியாது. நமக்குச் சொல்லப்பட்ட வரலாறு, இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறாகக் கூட இருக்கலாமே!" என்றான்.
Imagination is better than knowledge என்று என் மனதிற்குள் ஒரு குரல் கேட்டது, ஜெர்மானிய உச்சரிப்போடு. நான் திக்பிரமை பிடித்ததுபோல் நிற்க, அவன் ஏன் நிற்கப் போகிறான்? அவன் தொடர்ந்தான்.
"அதுவுமின்றி, இயற்பியலாளர்கள் சொல்லும் அனைத்து இயற்பியல் விதிகளும் நமது பிரபஞ்சத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஓர் இணைப் பிரபஞ்சத்திலிருந்து (parallel universe) காலப் பயணிகள் இங்கு வரலாம், அல்லது இங்கிருந்து காலப்பயணிகள் வேறொரு பிரபஞ்சத்துக்குச் சென்றிருக்கலாம் ஏற்கனவே" என்றான்.
அவனுடைய மெய்யறிவு என்னைப் பிரமிக்கச் செய்தது. இரண்டரை மணிநேரம் கள்ளச்சாராயம் காய்ச்சி, பெண்களைச் சீண்டி, கதாநாயகனின் நண்பனைக் கொன்று, தீமையின் மொத்த உருவமாய் இருக்கும் ஒரு தமிழ்ப்பட வில்லன், நாயகனின் க்ளைமேக்ஸ் பேச்சைக் கேட்ட உடனே, அரிவாளைக் கீழே போடுவது போல, மாணவரின் திறமை மீது அதுவரையிலும் குறைந்த மதிப்புக் கொண்டிருந்த எனக்கு, ஞான ஒளி கிடைத்தது. வகுப்பு முடிந்ததும் ஓடோடிச் சென்றேன் ஆசிரியர் அறைக்கு, மானசீகமாக 'எடுங்கடா, அந்த லெஸென் ப்ளேன் நோட்ட' என்று கத்திக்கொண்டே.

I'm in the process of reading your posts. But i should say this is the best by far. I mean i got impressed by this post than any other. Content oru puram, but it's the way in which you conveyed.
ReplyDeleteYennaa writing!!! Yennaa creativity!!!!! Adhuvum andha fellow intellect no. 1 oda answer a dissect panna vidham pramadham. Even i too felt the awe.
I'm really humbled by your compliment. Thank you so much.
ReplyDelete