நால்வர்
இது ஓர் உண்மைக்கதை அல்ல.
இரண்டு பேரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான pre-production நடந்து கொண்டிருந்த சமயம்.
துல்லியமாகச் சொன்னால் திரைக்கதை அமைக்கும் பணி. இயக்குனரின் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர். பேப்பரையும் பேனாவையும் வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார் எழுத்தாளர். இயக்குனரின் மனைவியும் அவரே! ஒரு டீப்பாயின் இருபுறமும் போடப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள் இயக்கமும் இசையும். அவர்களுக்கு எதிரே சாக்லேட் வண்ணக் கோப்பைகளில் சுடச்சுடக் குளம்பி காத்திருக்கிறது. அச்சமயம் எழுத்து அழைக்கிறார்.
"Mr. Director! I have finished."
இசையைப் பார்த்து இயக்கம் சொல்லுகிறார்.
"Let the coffee cool down. I should taste the dialogues when they're hot!"
இசை அவ்வளவு எளிதில் பேசிவிடுபவரா என்ன! ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தருகிறார். இயக்கம் எழுந்துசென்று எழுத்து வைத்திருந்த பேப்பரை வாங்குகிறார்.
'அழகியல் உணர்வு கொண்டவர் என அனைவராலும் பாராட்டப்படும் என் இனிய இயக்குனரே! ஒரு கவிதாயினியைவிட உமக்கு அழகியல் இரசனை அதிகமா எனப் பார்த்துவிடுவோம்' என்று எண்ணியவாறே ஒரு செல்லக் கர்வம் கொப்பளிக்க அவரிடம் பேப்பரைத் தருகிறார்.
மூன்று பக்க வசனங்களை முப்பது நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் படித்துமுடித்துவிட்டு பேப்பரைத் திருப்பித் தருகிறார் இயக்கம்.
"ஓகே. எல்லாமே சரியா இருக்கு! Ending மட்டும் மாத்திக்கலாம்."
"'அனுமார் வேஷத்துக்கு ஆள் எடுக்கறோம் பா'. இத ஏன் மாத்தணும்?"
"அந்த டயலாக் இருக்கட்டும். ஆனா, அதோட கட் பண்ண வேணாம். இன்னொரு கேரக்டர பக்கத்துல கூட்டிட்டு வாங்க. அவர்கிட்ட நாடகம் சம்மந்தமா எதாச்சும் பேசட்டும். அதோட கட் பண்ணிக்கலாம்."
"But, why?"
"ஒரு realistic appeal கெடைக்கும். More importantly, அழகா இருக்கும். For example, ராமாயணத்துல வர்ற எதாச்சும் அழகான பேர mention பண்ணட்டும். 'அந்த கேரக்டர் ரெடி ஆயிட்டாரா' அப்படிங்கற மாதிரி எதாச்சும் சேத்துக்கலாம்."
"'லக்ஷ்மணன் ரெடியா?' இந்த மாதிரியா?"
"No no. ரொம்ப familiar figure வேணாம். அழகாவும் இருக்கணும், மைனர் கேரக்டராகவும் இருக்கணும்."
"கீசகன்?"
"Good. Like that? Tell me some names."
"மாரீசன், சுமத்ரா..."
"Tell me the names that end with ன்."
"அங்கதன்...."
"Fix அங்கதன்." என்று சொல்லிவிட்டு 'பிழைத்துப்போனாய் போ' என்று சொல்வதுபோல குறுநகை பூக்கிறார் இயக்கம்.
எழுத்து ஆச்சர்யப்பட்டவராக,
"How many times can I fall in love with the same grey haired man again and again?" என்கிறார்.
அதைக்கேட்டு சிரித்தவாறே இசையை நோக்கி நடக்கிறார் இயக்கம். எழுத்து சொன்னதைக் கேட்ட இசை, தன்னுடைய குளம்பிக் கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டே சொல்கிறார்,
"அது முடியாது... போயிட்டே இருக்கும்..."
என்று சொல்லிக்கொண்டே, விளிம்பில் தளும்பிய குளம்பி சிந்தாமல் சிரிக்கிறார். இசை பேசியதில் இரண்டாவதாகச் சொன்ன வாக்கியம் அவருக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகமே! ஆனால், இயக்கத்துக்கு அது கேட்டிருக்கும்.
"Rehman says what you're telling is a lie. அது முடியாதுனு சொல்றாரு." என்று சொல்லிவிட்டு அழகான வடிவான பெண்கள் கூட்டம் இருக்கும் பகுதியில் வெளியிடக் கூச்சப்படவேண்டிய ஒரு cacophonic சிரிப்பைச் சிந்துகிறார் இயக்கம். இசையும் அதை மறுத்துப் பேசாமல், தானும் அதை இரசித்துச் சிரிக்கிறார். எழுத்தின் முகத்தில் ஊடல் என்ற கவிதையின் முதல் எழுத்துத் தெரிகிறது.
"Look Mr. I know what kind of people use what kind of words."
"Ask yourself, if Rahman didn't say அது முடியாது."
"He should have said it in some other sense. I'm a writer dear! At least for your flop movies..."
இசை எழுகிறார்.
"சண்ட முத்திருச்சு!" என்று சொல்லிச் சிரித்தவாறே.
"I have to leave! ஆயிரத்தில் ஒருவன் mix பண்ணனும்." என்று இயக்கத்திடம் சொல்கிறார்.
"Yeah yeah! You carry on your work. Don't listen to such words" என்று இயக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போது, மாடியறையிலிருந்து இறங்கிய மரத்தாலான படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தார் இசை. அப்போதும் இயக்கம் சத்தமாகச் சொல்கிறார்,
"Bad energy! All bad!! Steer clear from such vibrations!!!" என்று.
இசை திரும்பிப்பார்க்காமலேயே தனது இடதுகையை உயர்த்தி
"Thank you Guru!" என்று புன்னகைக்கிறார். 'ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் புன்னகை செய்வாய், அதுவா அதுவா அதுவா?' என்று வைரமுத்து எழுதியது இவரைப் பார்த்துத்தானா என்ற சந்தேகம் கூடத் தோன்றுகிறது.
இயக்கம் எழுத்திடம் திரும்புகிறார். அங்கே ஓர் எரிமலை பொங்கக் காத்திருக்கிறது.
"Don't you know I fall for you everyday?" என்கிறார் எழுத்து.
மெதுவாக அருகே வந்து, பேனா பிடித்திருக்கும் அவரது கையைப் பற்றி, அவரது காதோரக் கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட்டு, காதுமடலில் சுவாசம் படுமளவு நின்று அவரது படக் கதாபாத்திரங்கள் போலவே கிசுகிசுப்பான குரலில் சொல்கிறார்,
"How do I know that?"
இரண்டு கைகளையும் கடாரம் கொண்டான் first look போஸ்டரில் விக்ரம் வைத்திருப்பது போல வைத்து, பொய்க்கோபத்தைக் காட்டுகிறார் எழுத்து - அச்சு மொழியால் வெளிப்படுத்த முடியாத கோப முனகல் ஒன்றை வெளியிட்டவாறே. ஏதோ சொல்ல இயக்கம் வாயெடுக்கும்போது, கீழேயிருந்து பேச்சுக்குரல் கேட்கிறது.
"இயக்குனரும், எழுத்தாளரும் உள்ளனரா?"
'உள்ளனரா' வுக்கு வரும்போது, குரல் அதிகச் சத்தமாகக் கேட்டது. அவர் கேள்வி கேட்டுக்கொண்டே, பதிலுக்கெல்லாம் காத்திராமல், ஏணியேறி வந்துகொண்டிருப்பது புலனானது. அந்தப்படத்தின் பாடலாசிரியர்தான் அவர். நமது மொழியில் பாட்டு.
Beautiful narration na. Story padikumpodhu andhandha character pesara voice mind la ketuchu. Superb..lovely
ReplyDeleteEtthana interview paathu irukom!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete