முதலும் முடிவுமாயொரு சினிமா விமர்சனம் about the most underrated classic called வடசென்னை

தினத்தந்தி விளம்பரத்தில் வடசென்னையைப் புகழ்ந்து ஒரு வாசகம் காணப்பட்டது. தமிழிலோர் ஷேக்ஸ்பியரியன் டெக்ஸ்ட் என்று. ஏதோ ஆர்வக் கோளாறில் எழுதிவிட்டார்கள் என்றே நினைத்தேன். படத்தை இரண்டுமுறை பார்த்தபிறகே புரிந்தது, அவர்கள் சொன்னது உண்மையென்று.

கதையில் சில நிகழ்வுகள் நடக்கின்றன. எதையுமே நம்மிடம் மறைப்பதில்லை. ஆனாலுமே கூட நமக்கு அந்நிகழ்வின் காரணகர்த்தா யாரென்று புரிவதில்லை. அது ஓர் மிக நல்ல விஷயம் என்கிறேன். ஒரு நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதனைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லுவார்கள். வடசென்னை ஒரு நிஜவாழ்க்கை.

உதாரணமாக, அன்புவின் முதல் கொலை.

தன் காதலியைக் கிண்டல் செய்த ஜாவா பழனியிடம் வேண்டாமென்று சொல்லப்போய் அடிவாங்கி வருகிறான் அன்பு. எப்போதும் சீனியர் ஒருவரின் வண்டியிலிருக்கும் சாமான்கள் இரண்டை, அன்புவும் அவனது மச்சானும் நண்பனுமான கண்ணனும் எடுத்துக்கொள்கிறார்கள். தங்களிடம் சாமான் இருப்பது தெரிந்தால், ஜாவா பழனி கொஞ்சம் மதிப்பளித்துப் பேசுவான் என்கிறான் அன்பு. போகிறார்கள். சகாக்களுடன் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான் பழனி. 'சகாக்கள் அனைவரும் போகட்டும், அப்போதுதான் தொந்தரவு ஏதுமின்றி பேசமுடியும்' என்பதுபோல, கண்ணனிடம் ஏதோ ஒரு காரணம் சொல்கிறான் அன்பு. அனைவரும் கிளம்புகிறார்கள். அன்புவும் கண்ணனும் மீண்டுமொருமுறை பழனியின் முன்னால் சென்று நின்று அவனது மூடைக் கெடுக்கிறார்கள். அவர்கள் கத்தி கொண்டுவந்திருப்பது பழனிக்குத் தெரியவருகிறது. நண்பனிடம் சொன்ன அதே காரணத்தை பழனியிடமும் சொல்கிறான் அன்பு. ஜாவா பழனி என்ன மடையனா? நம்ப மறுக்கிறான். இனிமேல் ஒரே ஒரு வினாடி தாமதித்தாலும் பழனி தங்களைக் கொன்றுவிடுவான் என்ற நிலை ஏற்படும்வரை, அன்பு கெஞ்சிக்கொண்டே இருக்கிறான்.
ஷேக்ஸ்பியரியன் டெக்ஸ்ட் எதையும் படித்திருக்க வாய்ப்பில்லாத பழனி அன்பு விரிக்கும் வலையில் வீழ்கிறான். கண்ணனைக் கொல்லப்பார்க்கிறான். அதற்காகவே காத்திருக்கும் அன்புவும் அவனுடைய கட்டுப்பாட்டிலிருந்த கடைசி வினாடியில் பழனியைக் குத்திவிட்டு, "நா குத்தலைனா, நீ அவனக் குத்தியிருப்பணா!" என்கிறான். அது உண்மையென்று பழனியாலும், கண்ணனாலும், audience-ஆலும் நம்பப்படுகிறது. முதல் இருவரை விட்டுத்தள்ளுங்கள். Audience இந்த விஷயத்தில் ஏமாறுவதை வெற்றிமாறன் விரும்பமாட்டார்.

அன்பு கொலை செய்தது ஒரு விபத்து என்பர் பெரும்பாலோர்.
அன்பு விலைகொடுத்து வாங்கிய வம்பு என்று சொல்வோரும் உளர்.
உணர்ச்சிவேகத்தில் செய்த கொலையென்பர் சிலர்; அன்பு சொல்வதெல்லாம் உண்மை - அது ஓர் தற்காப்பு நடவடிக்கை என்பர் இன்னும் சிலர்.

என்னைக் கேட்டால் அது அன்புவால் அணு அணுவாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதொரு cold-blooded murder என்பேன்.

படத்தில் சில பளிச்சிடும் அம்சங்கள்...

»» Carrom board - இன் தமிழாக்கம் 'சுண்டாட்டம்' இல்லையாம். 'நாற்குழி சதுரங்கமாம்'. உண்மைக் கவிதை.

»» மழை பெய்து முடித்து, சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு மாலையில், அன்புவையும் நண்பனையும் கெட்டவார்த்தைகளால் பூஜிக்கிறாள் பத்மா. What a composition of a scene!

»»சிறையில் எதிராளிகளுக்கு நடுவே சிக்கிக்கொள்கிறான் அன்பு. கேமராவின் பார்வையில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு direct proportion-ல் orchestration-உம் அதிகமாகிறது. சந்தோஷ் நாராயணனைக் கேட்டால், 'எதோ, தெரியாம வந்துருச்சு' என்பார், ஆச்சர்யக்குறிகள் ஏதும் இல்லாமல்.

»» தனது முத்திரையைக் காட்ட, செந்திலுக்கு அன்பு  தரும் தண்டனை. Master class!

»» Crowd - ல் யாராவது பேசினால் கூட, அந்த வசனத்தையும் சிரத்தையுடன் எழுதியிருக்கிறார்கள்.

»» செந்திலும் சகாக்களும் கறி சாப்பிடும்போது, அதை மெல்லும் சத்ததைக்கூட 'இரத்தமும் சதையுமாக'ப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், catchphrase, பிரச்சாரம் ஆகிய இரண்டையும் தவிர்த்திருந்தால் சொல்லியிருப்பேன், வடசென்னைதான் இயக்குனரின் Magnum Opus என்று.

வடசென்னை இரண்டாம் பாகத்தில் நிச்சயம் ஓர் இயக்குனராகிவிடுவார் வெற்றிமாறன். I'm waiting.

Comments

  1. Me also waiting for this one. Good thiru.

    ReplyDelete
  2. Sema na sema na. Eluthil everest ah padi padiya nerungitirukinga

    ReplyDelete
  3. Yeah i too felt that Chandra has been cleverly persuading the whole time. கறி உண்ணும் சத்தத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்ததை போலவே ராஜனை வெட்டிய கத்தியில் அப்பியிருக்கும் சதை துணுக்கை வழித்து டேபிள் மேல் வீசும் சத்தமும். மெர்சல் ஆயிடுச்சு.

    ReplyDelete
    Replies
    1. கத்தி இல்லை சட்டை

      Delete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?