எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை."

"நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்."

மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts).  

அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார்.

(தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.)
 
இன்னும் இரண்டு கூற்றுகள்.

"சென்னை ஓர் அழகான ஊர்."
"நண்டு படம் நன்றாக இருக்காது."

இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions).

தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம். 

அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும். 

...


பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு.

1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது.

2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கருத்துகளையே சொல்வது.

...

எதற்கு இந்தப் பீடிகை?

சமீப காலமாக தமிழ்நாட்டின் சோஷல் மீடியாக்களில் அடிக்கடி புழங்கும் வார்த்தை - தற்குறி. 

நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் திரு. விஜய் அவர்களின் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவரும் தற்குறிகள் என்பது அநேகரின் கருத்து. அது அவர்களின் சொந்தக் கருத்து மட்டுமே. அது உண்மையாகாது‌. ஆனால், அவ்வாறு கருத்து தெரிவிக்கும் எவரும் "இது என்னுடைய கருத்து மட்டுமேயன்றி உண்மையில்லை" என்று சொல்லாததால் பலரும் அதை உண்மை என்றே நினைக்கிறார்கள். 

தம்மை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் pseudo-intellects பலரும் அந்தக் கூற்றை உண்மை என்றே வாதிடுகிறார்கள். அவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்தால் "உண்மை கசக்கும்" என்று கொக்கரிக்கிறார்கள். 

அதனால், அவர்களில் ஒருவர் வெளியிட்டிருக்கும் கருத்தை எடுத்து அதை உங்கள் முன்னால் உடற்கூறாய்வு செய்ய நான் விரும்புகிறேன்.

...

இந்தக் கட்டுரையிலும் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் என்னுடைய சொந்தக் கருத்து என்று நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மிக எளிதாக இந்தக் கட்டுரையை ஏதாவது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலியிடம் கொடுத்துக் கூட நீங்கள் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

...

திரு. விநாயக முருகன் என்றொருவர் தனது முகநூலில் வெளியிட்டிருக்கும் கருத்தை அப்படியே தருகிறேன். 

இந்த மாதிரி கொட்டை எழுத்துகளில் இருப்பவை திரு. விநாயக முருகன் எழுதியது.

அதற்கு கீழே இப்படி இருக்கும் மெலிந்த எழுத்துகள் நான் எழுதுவது.

...
 
தற்குறிகளை தற்குறி என்று சொல்லக்கூடாது என்று சமஸ் சொல்கிறார்.

நேர்கூற்றை அயற்கூற்றாக மாற்றி எழுதி இருக்கிறார் (Direct Speech to indirect Speech).

திரு. சமஸ் அவர்கள் சொல்லும்போது, "த.வெ.க. கட்சியை ஆதரிப்பவர்களை தற்குறிகள் என்று சொல்லக்கூடாது" என்றுதான் சொல்லியிருப்பார். த.வெ.க. ஆதரவாளர்கள் தற்குறிகள் என்பது திரு. விநாயக முருகனின் சொந்தக் கருத்து (opinion). அது உண்மையில்லை (not a fact). 

பூவை பூ என்று சொல்லாமல் புஷ்பம் என்றா சொல்லமுடியும்?

பரிபூரண உண்மைதான்‌.

ஒருவர் ஒரு அரசியல் சிந்தாந்தத்தை கொள்கையை முன்வைக்கிறார். அதில் நமக்கு உடன்பாடு இருக்கலாம். மாறுபாடு இருக்கலாம். உடன்பாடு இருப்பவர்கள் அந்தக்கட்சிக்கு ஒட்டு போடுவார்கள். இல்லையென்றால் ஓட்டு போடமாட்டார்கள். 

உண்மைதான்.

த.வெ.க என்ற கட்சியை எடுத்துக்கொள்ளலாம்.

சரி. எடுத்துக் கொள்ளலாம்.

அது முதலில் ஒரு கட்சியே இல்லை. அது ஒரு ரசிகர் மன்றம். 

இது உண்மையில்லை. இதை அவரது கருத்து என்றுகூடச் சொல்ல முடியாது. ஆரம்பத்தில் பார்த்தோமே, "தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை" என்றொரு கூற்று. அதைப் போன்றதொரு பொய்யான கூற்றுதான் இது. 

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சியை எப்படி இவர் கட்சி இல்லை என்று சொல்ல முடியும்?

அது இன்னும் ஒரு மாநிலக் கட்சி இல்லை, தேசியக் கட்சி இல்லை என்பது உண்மை (fact).

"அது ஒரு நல்ல கட்சி இல்லை" என்று சொன்னால் கூட அதை ஒரு கருத்தாக (opinion) அங்கீகரிக்கலாம். இந்தக் கூற்று பொய்யென்று தெரிந்தும் அதை உண்மை போல் சொல்லும் நேர்மையில்லாத கூற்று.

தமிழ்நாடு முழுக்க விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

உண்மைதான்.

அந்த ரசிகர்களை நம்பி தேர்தலில் இறங்கிவிட்டார்.

இது உண்மையும் இல்லை. கருத்தும் இல்லை. இது ஒரு ஊகம்.

"திரு. விநாயக முருகன் அவர்கள் ஆளுங்கட்சியிடம் பணம் வாங்கிவிட்டு இப்படி எழுதியிருக்கிறார்" என்று நான் சொன்னால் அது எப்படி என்னுடைய ஊகம் ஆகுமோ, அது போலவே இது அவரது ஊகம்.

அவர் பணம் வாங்கினாரா இல்லையா என்பது அவருக்குத்தான் தெரியும். அதுதான் உண்மையென்று நான் சொல்ல முடியாது. அதைப் போலவே, திரு. விஜய் அவர்கள் மனதில் என்ன நினைத்து அரசியலில் இறங்கினார் என்பது திரு‌. விஜய் அவர்களுக்குத்தான் தெரியும். அது திரு‌. விநாயக முருகனுக்குத் தெரியாது.  

விஜயகாந்துக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் விஜயகாந்த் அவர் ரசிகர்களை நம்பவில்லை. 

இந்தக் கூற்றை திரு. விநாயக முருகன் அவர்கள் அமரர் திரு. விஜயகாந்த் அவர்களைப் பாராட்டும் விதமாக எழுதுகிறார். ஆனால், அவர் எழுதிய கூற்றை அப்படியே வாசித்தால் அது ஓர் அவதூறு. திரு. விஜயகாந்த் அவருடைய இரசிகர்களை மட்டும் நம்பவில்லை என்று அவர் சொல்ல வருவதாக எடுத்துக் கொள்கிறேன்‌.

மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டார்.

திரு‌. விஜய் அவர்களும் மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டார் என்பது செய்தி ஊடகங்களில் காட்சிகளாகப் பதிவானதோர் உண்மை.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா சாய் வித் சித்ராவில் இப்படி சொன்னார். நாங்க எல்லாரும் விஜிக்கு நெருங்கின நண்பர்கள். விஜி கட்சி தொடங்கினப்ப அவர்கிட்ட சீட் கேட்டு போனோம். இல்ல சரிப்பட்டு வராது. உங்க வேலையை நீங்க பாருங்க. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம் என்று சொன்னார்.

அந்த நேர்காணலை நான் பார்த்தேன். அதில் சிலவற்றை திரு. விநாயக முருகன் அவர்கள் சொல்லாமல் விட்டிருக்கிறார்.  முதலில் அதை உள்ளது உள்ளபடி முழுதாகப் பார்ப்போம்.


திரு. சித்ரா லட்சுமணன்: விஜயகாந்த்த பொறுத்தவரைக்கும், சினிமாவுல மட்டும் இல்லாம, அரசியல்லயும் மிகப் பெரிய சாதனைகளப் பண்ணவரு. எந்தக் காலகட்டத்திலயாவது, "சிவா அரசியலுக்கு எங்கூட வந்துருங்க" அப்படினு  அழைச்சிருக்காரா அவரு? 

திரு. சிவா: அவரு அழைக்கல. நானு செல்வமணியெல்லாம் போயி கேட்டோம். தனித்தனியா கேட்டோம். 

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: நாங்க... கட்சி ஆரம்... எப்புடி வரணும்னுட்டு.

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: அவரு ஒரே வார்த்த சொன்னாரு. 

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: உங்க வேலைய நீ பாரு. என் வேலைய நான் பாக்கறேன். 

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: இன்னும் கொச்சையா சொன்னாரு‌. இந்த சினிமாக் காரங்கெல்லாம் பின்னாடி வருவாங்க, கட்சிய வளர்ப்பாங்கனு எல்லாம் நா கட்சிய ஆரம்பிக்கல.

திரு. சித்ரா லட்சுமணன்: அடடா!

திரு. சிவா: என்னையும் மக்களையும் நம்பி ஆரம்பிச்சு இருக்கேன், அரசியல.

திரு. சித்ரா லட்சுமணன்: (சப்புக் கொட்டி மெச்சுகிறார்)

திரு. சிவா: நீ எங்கூட இருக்கறனு சொல்லி உனக்கு நாலு வாய்ப்பு கெட்டுப் போகும். அதெல்லாம் நீ செய்யாத.

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: நா வந்து... சினிமா போதும்னு முடிவெடுத்துட்டு அடுத்த வேலைக்கு வந்துருக்கேன். நீ சினிமா போதும்னு முடிவெடுத்துட்டு அப்பறம் இங்க வா. 

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: ரெண்டையும் செய்ய முடியாதுன்னுட்டாரு.

திரு. சித்ரா லட்சுமணன்: ம்ம்.

திரு. சிவா: அப்புடித்தா நெருங்கிய நண்பர்கள் கேட்ட போதெல்லாம் அவுரு வந்து... சினிமால இருந்து யாரு கேட்டபோதும் அவரு என்கரேஜே பண்ணல. எல்லாரையுமே வராதீங்கன்னே சொல்லிட்டாரு. அதனாலதா நீங்க பார்த்தீங்கன்னா, ஒரு... யாருமே சினிமால இருந்து known யாருமே உள்ள வரல. ஆனா, நெறையா பேரு கேட்டாங்க. யாரையும் வேண்டான்னுட்டாரு. ஏன்னா அவரு ஒரு சினிமா கும்பல கூட்டிட்டு உள்ள வர்றாருன்ற இமேஜ் அவரு குடுக்கவே இல்ல. கடைசி வரைக்கும் சோலோவா... விஜயகாந்த்.


இதுதான் அந்த உரையாடல். இதிலே திரு. சிவா அவர்கள் தான் எப்படி கட்சியில் இணைவது என்று கேட்டதாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் "சீட்"  கேட்டதாக திரு. விநாயக முருகன் அவர்கள் எழுதி இருக்கிறார். கட்சியில் இணைந்து வேலை செய்வது என்பது வேறு. "சீட்"  பெறுவது என்பது வேறு. இது திரு. சிவா மீதான திரு. விநாயக முருகனின் அவதூறு. 

மேலும், அமரர் திரு. விஜயகாந்த் அவர்கள் சொன்னதாக திரு. சிவா சொன்ன ஒன்றை திரு. விநாயக முருகன் இலாவகமாகத் தவிர்த்துள்ளார். 

சினிமா போதும் என்று முடிவெடுத்துவிட்டு அரசியலுக்கு வருவது. அதையேதான்  திரு. விஜய் அவர்களும் செய்துள்ளார். அதைப்பற்றி நம் எழுத்தாளர் ஏன் குறிப்பிடவில்லை என்று விளக்கினால் நலம்.

மேலும், திரு. விஜயகாந்த் அவர்கள் சொன்னது என்ன? "நான் சினிமாக்காரர்களை நம்பி வரவில்லை. என்னையும் மக்களையும் நம்பி வந்தேன்." 

திரு. விஜய் அவர்களின் இரசிகர்கள் "மக்கள்" என்ற வரையறைக்குள்தான் அடங்குவார்கள். ஆக, திரு. விஜயகாந்த் சொன்னதையே திரு‌. விஜயும் செய்ததாகத்தான் திரு. விநாயக முருகனும் சொல்கிறார்.

மேலும், திரு. விஜயகாந்த் எப்படி சினிமாவிலிருந்து யாரையும் அழைத்து வராமல் தான் மட்டும் தனியாக வந்தாரோ, அதே போலத்தான் திரு. விஜய் அவர்களும் தனியாக வந்திருக்கிறார். வீதியில் இறங்கி அவருக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் அவரிடம் அனுமதி பெற்று கட்சியில் சேர்ந்தபின் செய்யவில்லை.

கட்சி தொடங்கிய முதல் விஜய் எந்த பிரச்சாரத்திலும் அந்தக்கட்சியின் கொள்கையை தெளிவாக சொல்லவில்லை.

அக்டோபர் 27, 2024. 

விக்கிரவாண்டி சாலையில் நடந்த வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் திரு. விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை சொன்னார். 

ஊழல் மற்றும் பாசிசத்தை அழித்தல், மதச்சார்பற்ற சமூக நீதி, சமத்துவம் ஆகியவையே தமது கொள்கைகளென அறிவித்து கொள்கைத் தலைவர்களையும் அறிவித்தார். அந்த வீடியோ இன்னும் யூட்யூபில் உள்ளது. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிறார்கள். இது எப்படி கொள்கையாகும்?

'பிறப்பால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை'  என்பது கொள்கை இல்லையென்றால், 'கொள்கை' என்றால் என்னவென்று திரு. விநாயக முருகன் அவர்கள் உதாரணத்தோடு விளக்க வேண்டும். 

ஆளும்கட்சி திமுக என்னென்ன தவறுகள் செய்தது? 

அதை நான் எப்படி சரிசெய்வேன். இப்போது என்னென்ன போதாமைகள் உள்ளன. அதை எப்படி தீர்ப்பேன். எனது ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டுவருவேன் என்று சொல்லவேண்டும். அதையும் சொல்லவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு தரவில்லை என்றும், லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளும் த.வெ.க-வால் வைக்கப்பட்டுள்ளன. 

த.வெ.க. ஆட்சிக்கு வந்தால், பெண்கள் பாதுகாப்புக்கென சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் MSME-யில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. (இது நான் சம்பந்தப்பட்ட வாக்குறுதி. MSME-யில் பதிந்து ஒரு சுயதொழில் செய்துவருகிறோம்.)

இந்த விஷயத்தில் நாம் தமிழர் பரவாயில்லை. சாலைகளின் டிவைடர் நடுவே சோலார் பேனல் வைப்பேன். மாற்று எரிசக்தி கொண்டுவருவேன் என்றாவது சொல்லமுடிந்தது.

த.வெ.க. என்ன வாக்குறுதிகள் தந்துள்ளனர் என்று சொல்லிவிட்டதால், இது அர்த்தமற்ற ஒப்பீடாகிறது‌.

கரூரில் பத்திரிகையாளர்கள் கேள்விகேட்க அப்படியே தலைதெறிக்க ஓடினார்.

முதலில் இந்த வழக்கு இன்னும் சி.பி.ஐ விசாரணையில் உள்ளது. மேலும் அங்கே கூச்சல் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே உடனே அங்கிருந்து சென்றதாக திரு. விஜய் சொல்லியிருக்கிறார். அவர் உண்மையில் என்ன காரணத்தினால் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காமல் சென்றார் என்பதை சி.பி.ஐ தான் சொல்ல வேண்டும்‌.

அதற்கு முன்னாலேயே, அந்த இடத்தில் அங்கே இல்லாத திரு. விநாயக முருகன் அவர்கள் எது சொன்னாலும் அது வதந்தியே.

இதுவரை ஒரு பத்திரிக்கை நிருபரும் அவரை சந்திக்கவில்லை. 

உண்மையில்லை. அவர்தான் எந்தப் பத்திரிக்கை நிருபரையும் சந்திக்கவில்லை. அதனால் எந்தப் பாதகமும் இல்லை.

எங்க அண்ணனுக்கு நான் பொண்டாட்டியா இருப்பேன் என்று ஒரு பெண் சொன்னார்.

அதை மகளிர் அணி கண்டிக்கவில்லை.

அந்தப் பெண் கூறியதை நானும் கண்டிக்கிறேன். மகளிர் அணி கண்டிக்காததும் தவறுதான். 

ஆனால், இந்த மாதிரி ஆட்கள் எல்லாக் கட்சி ஆதரவாளர்களிலும் இருப்பார்கள்.

ஆங்கிலம் பேசும் அனைவரும் புத்திசாலிகள் என்று பொதுமைப்படுத்துவது (stereotyping) எப்படியொரு சிந்தனையில்லாத செயலோ, அதைப் போலவே இந்தக் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் தற்குறிகள் என்று பொதுமைப்படுத்துவதும் சிந்தனையற்ற செயலே.

தி.மு.க-வில் ஒரு வேட்பாளரே தற்குறித்தனமாகப் பேசினார். திருச்சி மாவட்டத்தின் மண்ணச்ச நல்லூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, பொதுமக்களில் ஒருவர் எம்.எல்.ஏ திரு. கதிரவன் அவர்களிடம் கடந்த ஐந்து வருடங்களில் ஏதும் செய்து தரவில்லையென்று வாதிடுகிறார். அதற்கு அந்த எம்.எல்.ஏ "நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம். போதுமா?" என்று  சொல்லிவிட்டு நகர்கிறார். 

ஒரு தொகுதியில் வெல்லும் எம்.எல்.ஏ தனக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கும் சேர்த்துதான் சேவை செய்ய வேண்டும். தனக்கு ஓட்டுப் போடவில்லை என்பதால் ஒரு குடிமகன் தன்னைக் கேள்வி கேட்கும் உரிமையை இழக்க மாட்டார். இந்த அடிப்படை ஜனநாயகம் கூடத் தெரியாதவர் தொண்டராக இல்லை, எம்.எல்.ஏ-வாகவே இருந்திருக்கிறார். வேட்பாளராக இருக்கிறார்.

அதற்காக தி.மு.க ஆதரவாளர்கள் எல்லாரையும் தற்குறிகள் என்று சொல்வது சரியாகாது.

ஆங்கிலம் மட்டுமல்ல. எந்தவொரு மொழி பேசுபவர்களிலும் முட்டாள்களும் புத்திசாலிகளும் கலந்தே இருப்பார்கள். 

த.வெ.க-வினர் அனைவருமே தற்குறிகளும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் அதிமேதாவிகளும் இல்லை. 

ஐந்து வயது பசங்களை தூண்டிவிடுறது 

இதுவும் எழுத்தாளரது கருத்தே. அதாவது அவர்களைத் தூண்டிவிடுவது தற்குறித் தனமானது என்ற கூற்று எழுத்தாளரின் சொந்தக் கருத்து. 

இதைக் கேளுங்கள்.

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி. அக்டோபர் 30, 2025.

அரசு நிகழ்ச்சி. கட்சிக் கரை வேட்டிகளுடன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ- க்கள் வருகிறார்கள். 

"திராவிட மாடல்" ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்கிறார்கள். கட்சிப் பணத்தில், வீதியில் நடத்த வேண்டிய பிரச்சாரத்தை  - அரசுப் பணத்தில் அரசுக் கல்லூரியில் நடத்தினார்கள். அது அறமற்ற செயல்.

கோயம்புத்தூர். தேர்தலுக்கு முன்பான சில நாட்கள்.

தனக்கு ஓட்டு வரவேண்டும் என்பதற்காக மாலை நேரத்தில் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு ஒரு ஓட்டுக்கு 5000 தரும் கட்சிகள் புத்திசாலிகள் இல்லை.   

ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதால் வருவதை விடப் பெரிய பாதகம் குழந்தைகளிடம் ஓட்டுக் கேட்பதால் விளைந்திடாது.

இப்படி எல்லா தற்குறித்தனங்களையும் செய்த ஒரு அரசியல் மயப்படுத்தப்படாத வெறும் ரசிகர் மன்றத்தை...

த.வெ.க-வை மீண்டும் மீண்டும் இரசிகர் மன்றம் என்று சொல்வது அறிவீனம் மட்டுமல்ல. அந்தக் கட்சியை ஒரு கட்சியென்று அங்கீகரித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் இழிவுபடுத்துவதாகும். 

தற்குறி கூட்டம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது?

சிந்தித்தால் விடை கிடைக்கும்.

விஜய்க்கு ஏன் ஓட்டு போட்டீங்கன்னு ஒருத்தரை கேட்டு பாருங்க. எனக்கு விஜயை பிடிக்கும். அதனால் ஓட்டு போட்டேன் என்று பதில் வரும். 

"தனக்கு எல்லாமே தெரியும்" என்பதையே இந்தக் கூற்று மூலம் திரு‌. விநாயக முருகன் நிறுவ முயல்கிறார்.

உத்தேசமாக, த.வெ.க-வுக்கு ஆயிரம் ஓட்டுகள் விழுகின்றன என்று வைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டின் எல்லா மூலையிலும் விரவியுள்ள அந்த ஆயிரம் பேரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்திருந்து, அவர்கள் எப்படியெல்லாம் சிந்திப்பார்கள் என்று தெரிந்திருந்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று ஒருவரால் சொல்ல முடியும். அதிலும் அந்த ஆயிரம் பேரின் பதிலும் ஒரே பதிலாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு.

நான் கூடத்தான் த.வெ.க-வுக்கு ஓட்டுப் போட்டேன். நான் என்ன காரணத்துக்காகப் போட்டேன் என்று நானாகச் சொல்லாமல் இவரால் சொல்லவே முடியாது. அப்படியிருக்க, இன்ன காரணத்துக்காகத்தான் ஓட்டு போட்டேன் என்று அவர்கள் சொல்லுவார்கள் என்று உறுதியாகச் சொல்லுவது சிந்தனைப் போதாமை.

தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவது மிக ஆபத்தானது.

எனக்கு கூடத்தான் ஷகீலாவை பிடிக்கும். 

இந்தக் கூற்று மூலம் எழுத்தாளர் என்ன சொல்கிறார்?

"எனக்கு கூடத்தான் ஷகீலாவைப் பிடிக்கும். அதற்காக அவருக்கு ஓட்டுப் போட முடியுமா?" என்று கேட்கிறாரா?

செல்வி. ஷகீலா என்றால் ஒன்றும் கேவலமானவர் இல்லை. 

செல்வி. ஷகீலா குடியுரிமை பெற்ற ஓர் இந்தியப் பிரஜை. அவர் கட்சி ஆரம்பித்தால் அதில் தவறில்லை. அப்படி அவர் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஓட்டுப் போடுவதும் தவறில்லை.

அவரது படங்களைப் பார்த்து அவரைப் பிடித்துப் போகும் திரு. விநாயக முருகன் அவர்கள் நாட்டை யார் ஆளலாம், யார் ஆளக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நம்புகிறார். ஆனால், அதே சமயம் அந்தப் படத்தில் நடிப்பவர் அசுத்தமானவர், அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்றும் நம்புகிறார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது ஒரு கொள்கையாக அவருக்குத் தோன்றாமல் போனதில் ஆச்சர்யமில்லை.

ஒருத்தரை பிடிக்கும் என்பது வேறு. ஆனால் ஆட்சியை அதிகாரத்தை யாரிடம் கொடுப்பது என்பது வேறு.

உண்மைதான். 

நமக்குப் பிடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு அதிகாரத்தைத் தருவது என்பது எவ்வளவு அறிவீனமானதோ, நமக்கு பிடித்த ஒரே காரணத்துக்காக அவருக்கு நிர்வாகத் திறமை இருக்காது என்று நினைப்பதும் அதே அளவு அறிவீனமானது.

சமஸ் ஒரு பத்திரிகையாளர். அவர் ஏன் தொடக்கத்திலிருந்து இந்த ரசிகர் மன்றத்தை தூக்கிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை. 

தெரியவில்லை என்றால் அவரிடம் விளக்கம் கேட்டு அறிந்து, அந்த விளக்கம் சரியா தவறா என்று பகுத்தறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். 

கரூரில் அந்த துயரம் நடந்தபோது அது சமூவத்தின் கூட்டுப்பொறுப்பு என்றார்.

எவ்வளவு கூட்டம் வருமென்று கணிக்கத் தவறிய உளவுத்துறை; போதிய இடமளிக்காத காவல்துறை; முண்டியடித்துக் கொண்டு செல்லக்கூடாது என்று உணராத மக்கள் கூட்டம் இவையெல்லாரோடும் சேர்த்து திரு. விஜய் அவர்களையும் உள்ளடக்கியதே சமூகம். அதைத்தான் அவர் சொல்கிறார்.

இப்போது தவெக என்ற ரசிகர் மன்றத்தை தற்குறிக்கூட்டம் என்று சொல்லக்கூடாது என்கிறார். 

அதில் என்ன தவறு? அவர்கள் தற்குறிகள் என்பது உங்கள் கருத்து (opinion). உண்மை (fact) இல்லை. உங்கள் கருத்தை வெளிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு‌. உங்கள் கருத்து தவறென்று சொல்வது அவரது கருத்து. அதைச் சொல்ல அவருக்கும் உரிமையுண்டு. 

தற்குறிகளை தற்குறின்னுதானே சொல்லமுடியும்? 

நிச்சயமாக. ஆனால், இந்த மாதிரி ஒரு பதில் எழுதி ஒருவர் இந்த எழுத்தாளர் மீது மான நஷ்ட வழக்குப் போடவும்‌ முடியும்.

விஜய் ஆட்சிக்கே வரட்டும். ஐந்து கோடி ஓட்டுகள் கூட பெறட்டும். ஆனால் என்னை பொறுத்தவரை நான் அந்த ஐந்து கோடி மக்களையும் தற்குறின்னுதான் சொல்வேன்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து 2026 தேர்தலுக்கு முன்பு வரை வாக்குரிமை பெற்றவர்கள் 18-லிருந்து 23- வயது வரை இருப்பார்கள். அவர்கள் சற்றேறக்குறைய 22 லட்சம் பேர்.

இந்த 18 - 23 வயதினர் மட்டும்தான் த.வெ.க.-வுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்ல முடியாது. எழுத்தாளரின் வாக்குப் படி ஐந்து கோடி வாக்குகள்,  திரு. விஜய் அவர்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

அப்படியென்றால், இந்தப் புதிய 22 லட்சம் பேரைத் தவிர மீதி 4 கோடியே 78 லட்சம் பேரும் அவரின் கணக்குப்படி 'தற்குறி' வகையறாவில் வருகிறார்கள். 

2021-ல் இந்த 4 கோடியே 78 லட்சம் பேரும் சேர்ந்து ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். தற்குறிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசாங்கமும் 'தற்குறி' அரசாங்கமே - எழுத்தாளரின் வாதத்தின்படி.

இன்னொரு உண்மை. அவருடைய வாதத்தின் படி, திரு. விநாயக முருகன் தற்குறி இல்லையென்பதால், எந்த ஒரு முறையுமே அவர் விரும்பிய அரசாங்கத்தின் கீழ் அவரால் வாழ முடியாது. வாய் மட்டும் பேசும் அதிமேதாவி என்பதைவிட,  நினைப்பதை நடத்திக் காட்டும் தற்குறியாய் இருப்பது சாலச் சிறந்தது.

Comments

  1. 🙏🏼🥹
    I'm waiting...

    ReplyDelete
    Replies
    1. I was trying to remove my reply for the comment about talking to children. But, accidentally yours got deleted I think. I'm sorry about that. (Actually the moment I saw that accusation, I knew you would reply to that.).
      And, I was expecting your review for my essay. I still am. In fact, for all my posts.

      Delete
    2. By the phrase "for all my posts", I don't mean "I am waiting for your responses for all my posts now". I mean, whenever I write something, I am curious to know what you have to say about it.

      Delete
    3. 1.
      கட்டுரைகூறாய்வு மொத்தத்துல dissecting the bisector கணக்கா இருக்கு. 'நறுக்' கேள்விகள் & பதில்கள். Deep insights. Lots of time spent and efforts taken. I know how much efforts would've gone into putting that interview in words. கடைசில அந்த அஞ்சு கோடி பத்தின decoding லாம் பட்டாஸ். கரெக்ட்தானே திரு. விநாயக்?
      ......
      Let me share some more thoughts related to this.

      மொதல்ல என்னனா, பிரச்சனை is with them. They can't take it. இதெல்லாம் வேற ஒண்ணுமில்ல.

      1. பொறுக்காத்தன்மையோட வெளிப்பாடு.
      2. அடுத்தவங்கள கீழால காட்டி தன்ன ஒசத்தின்னு காட்டிக்கறது.
      3. சரியான புரிதலின்மை
      4. மேல வரவங்கள மட்டம் தட்டறது.

      ........

      First தற்குறி னா என்னனு பாப்போம்: Quora ல இருந்து ஒரு பதிவு. என்னால comment ல bold பண்ண முடியாதுங்கிறதால * குறியீட்டுக்குள்ள அத கொடுக்கறேன்..

      **தற்குறி என்றால் என்ன?
      படிப்பறிவில்லாதவர்களை கைநாட்டு என இன்று குறிப்பது போல , அதே பொருள்பட அன்றைக்கு வழங்கப்பட்ட சொல்லே 'தற்குறி' ஆகும்.

      தன் + குறி = தற்குறி. தனக்கான குறி = தற்குறி.

      (தன்னைத் தானே புகழ்தல் - தற்புகழ்ச்சி. தனக்குத்தானே பெருமை கொள்வது = தற்பெருமை. தன்னைத்தானே காத்துக்கொள்வது = தற்காப்பு. தானாகவே நிகழும் செயல் = தற்செயல். தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது = தற்கொலை. தற்கொலை, தற்படம் (SELFIE), தற்குறிப்பு (BIO-DATA) போன்ற பிற சொற்களையும் நோக்குக).

      இன்றைய இருபத்தியொன்றாம் நூற்றாண்டில்... எழுதப்படிக்கத் தெரிந்த நாம் அனைவரும் நமது பெயரை எழுதிக் கையொப்பமிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
      படிப்பறிவற்றவர்களோ கையொப்பத்திற்கு மாறாக
      கைநாட்டு இடுவதும் நாம் அறிந்ததே !

      ஆனால் ...அக்காலங்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்...
      அடையாளம் குறிப்பிட வேண்டிய பொருட்களில் , ஆவணங்களில் ,
      (குறிப்பாக சொத்து தொடர்புடைய செப்புப்பட்டயங்களில்) - ஒப்பமிடுவதற்கு மாற்றாக , கீறலிடும் நடைமுறையைக் கடைப்பிடித்தனர். (காகிதமும் மையும் தோன்றாத காலத்தில் பின்பற்றிய நடைமுறை இது).

      பெயரெழுதிக் கையொப்பமிடுவதற்குப் பதிலாக, கீற்றலை தனது அடையாளமாகக் குறியிடுபவர்களே 'தற்குறி' - எனப்பட்டனர்.

      எப்படி இன்றைக்கு அவரவர் கையெழுத்தின் தனிப்பாணி கொண்டு வேறுபாடு காணப்படுகிறதோ , அதைப் போலவே அவரவர் கீறிய கிறுக்கல்களின் தனிப்பாணியைக் குறியீடாகக் கருதி அடையாளம் காணப்பட்டது. தனக்கென தனிக்குறியிட்டவர்கள் தற்குறி எனப்பட்டனர்.

      எழுதப்படிக்கத் தெரியாதவர்களைக் குறித்த இச்சொல் நீட்சியடைந்து , ஒரு குறிப்பிட்ட துறையில் எதுவும் அறியாதவர்களையும் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.**
      ..........

      ஆக இப்போ நடைமுறைல இருக்கிற சொல் புழக்கத்தை பாக்கும்போது இந்த கடைசி வரியை குறிச்சுதா அப்படி சொல்றாங்கனு வெச்சுப்போம்.

      'ஒரு குறிப்பிட்ட துறையில் எதுவும் அறியாதவர்கள்'. Ok.

      இப்போ திரு. விஜய் கட்சி தொடங்குனா அந்த கட்சிக்கான ஆதாரவாளர்கள வேற்று கிரகத்துல இருந்து Political Science, Public Administration, Law தெரிஞ்சவங்களா பாத்து இறக்குமதி செய்ய முடியுமா?
      மேலே சொன்னது போல போன தேர்தல்ல இப்போ இருக்கற அரசுக்கு வாக்களித்த அதே வாக்காளப்பெருமக்கள் தா இப்போவும் இருக்காங்க. அப்போ அவங்களும் தற்குறிகளா ன்னு கேட்டது மிகச்சரியான கேள்வி.
      திரு. விநாயக முருகன் அவர்களே, இத்தனை ஆண்டு காலங்களா இருபெரும் கட்சிகள் ஆண்ட நாட்டுல வாழ்ந்த, evolve ஆன மக்கள்தா இப்போ இருக்காங்க. உங்க கூற்றுபடி நீங்க அவங்கள தற்குறி ன்னு சொல்றிங்க. அப்போ அவங்கள தற்குறியாவே வெச்சுருந்தது யாரு? இப்போ எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சவுடனே பயம் வந்து அந்த இயலாமையை இப்படி வெளிப்படுத்தறிங்களா?

      திரு. விநாயக முருகன் அவர்கள் மயிலேறி அல்லது டைம் ட்ராவெல் பண்ணி அண்ணா, கலைஞர், எம். ஜி.ஆர். அவர்கள் கட்சி தொடங்கும்போது இருந்த மக்களோட கூட்டு அரசியல் புரிதலையும் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துட்டு அப்பறம் பேசுனா நல்லா இருக்கும்.
      ஒரு சிலர் திரு. விஜய் அவர்களையும் தற்குறி ன்னு சொல்றாங்க. அப்போ மேல சொன்ன தலைவர்களும் ஒரு காலகட்டத்துல அப்படித்தான் இருந்திருப்பாங்கன்னு புருஞ்சுக்கரதா?

      ஒரு துறையில் எதுவும் அறியாதவர்கள் ன்னா இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் இருந்த காலத்துல இருந்த மக்களோட அரசியல் புரிதலையும் இப்போ இருக்கற மக்களோட அரசியல் புரிதலையும் ஒப்பிட்டு பாத்தா அந்த காலத்துல அரசியல் exposure மக்களுக்கு கம்மி. மேடைப்பேச்சுகள், திரைப்படங்கள், ஒரு சில நாளிதழ்கள் மூலமா மட்டும்தான் அரசியல் மக்கள்கிட்ட போய் சேர்ந்துச்சு. இப்போ மக்கள் நிறைய படிக்கறாங்க, பாக்கறாங்க, பேசறாங்க, நிறைய தெரிஞ்சுக்கறாங்க. குறிப்பா திரு. விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்ததுக்கப்றம் இளைஞர்கள் அரசியல தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் காட்டறாங்க.

      Delete
    4. 2.
      இதுக்கு முன்னாடியும் இப்பவும் திமுக அதிமுக கட்சிகளுக்காக ஓட்டு போட வெளிநாட்டுல இருந்து கிளம்பி வந்தவங்க யாராவது இருக்காங்களா? இருந்தா காட்டுங்க. அப்போ இந்த மாற்றம் யாரால எதனால னு யோசிக்கணும்ல?
      முன்ன இருந்ததைவிட அரசியல்ல ஆர்வம் காட்டறாங்க மக்கள். இப்படி இருக்கும்போது நீங்க எப்படி தற்குறி ன்னு சொல்லலாம்?

      சரி துறைரீதியான அறிவை விட்டரலாம். தற்குறியோட உண்மையான அர்த்ததுக்கே வருவோம். 'எழுதப்படிக்க தெரியாதாவங்க'. நல்லா யோசிச்சு பாருங்க, எழுத படிக்கத் தெரியாதவங்க எந்த decades அ சேந்தவங்களா இருப்பாங்கன்னு? இப்போ எல்லாருமே படிக்கறாங்களே. சரி அந்த காலத்துல அவங்களுக்கு எழுதப்படிக்க சரியான வாய்ப்பு கிடைக்கல. கரெக்டா? அப்படியிருக்கும்போது நீங்க எப்படி எழுதப்படிக்க தெரியாதவங்கள இப்படி பேர் சொல்லி அழைக்கலாம்? இதுதான் உங்க கல்வி உங்களுக்கு சொல்லி குடுத்துச்சா?
      அவங்களுக்கு இருக்கற ஏதோ ஒரு திறமை, அறிவு நமக்கு இருக்காது. அதுக்காக நம்மள வேற பேர் சொல்லி அழைக்கலாமா?

      'பூ' வ 'புஷ்பம்' னும் சொல்லலாம். ரெண்டுமே flower தானே? ஒரு பொருளை ஒரு நபரை குறிக்கும் சொல் அவங்க காயப்படாத அளவுக்கு எத்தனை பேரு வெச்சு வேணாலும் சொல்லலாம்.

      'மாற்றுத்திறனாளிகள்', 'differently abled', 'visually challenged', 'hearing impaired' ங்கிற வார்த்தைகளை coin பண்ணவங்க ஏன் அப்படி பண்ணிருக்காங்க? காலா காலமா இவங்கள குறிக்க உபயோகம் பண்ண வார்த்தைகளையே (handicapped, blind, deaf) continue பண்ணிருக்கலாமே.(நீங்க தற்குறி ன்னு கூப்படறது கூட அப்படிதான். ஒருத்தங்க இயலாமையை இழிவு படுத்துறது.மானநஷ்ட வழக்கு தாராளமா போடலாம்). அதுக்குதான் கல்வியும், அறிவும், அதனால் மேம்படும் மனிதத்தன்மையும் வேணுமங்கிறது.

      சொன்னமாதிரி ஒரு கூட்டம்னா, ஆதரவாளர்கள்னா அது ஒரு mixed குரூப்பா தா இருக்கும். ஆனா அதில இருக்கற ஒரு சிலரோட செயல்களை பாத்துட்டு ஒரு கட்சியோட இயற்கையான குணமே இதுதான் அதோட எல்லா ஆதரவாளர்களும் இப்படிதான் இருப்பாங்கன்னு முடிவு பண்றது சரியான அணுகுமுறை இல்ல.
      ..........

      Let alone these barking canines. Monday is going to be a very crucial day. This time it's highly unpredictable. Only when it goes two hours into the counting, we'll start getting to know the real picture. The prophecies made by tv news channels and social media channels - both are poles apart. Let's hope for the best. 118 is the threshold. Fetching seats more than this will be safe.

      ரொம்ப புதுமையான தேர்தல் களம்.

      (And also there's a talk going on 'post-results parasocial relationship trigger point among youngsters'. அப்படியெல்லாம் எதுவும் நடந்துட கூடாது.)
      .........

      'நமக்கு பிடிக்காத ஒரே காரணத்துக்காக அவருக்கு நிர்வாகத் திறமை இருக்காது என்று நினைப்பதும் அதே அளவு அறிவீனமானது.' - தளபதி வெற்றிகொண்டால் சந்திக்கப்போகும் மிகப்பெரிய சவால் இதுதான். எதிர்க்கட்சிகளோட கணைகள் எப்பொழுதும் இத நோக்கியதாதா இருக்கும்.
      பார்ப்போம்.

      'ல்' 'ன்' ஆக மாற வேண்டுவோம்🙏🏼.
      ..............

      ஒரு சிறப்பான விஷயம் இந்த கட்டுரைல இருந்து நா கத்துக்கிட்டேன். Fact and opinion. ஒருத்தங்க நம்மள திட்டும்போது, அவதூறு சொல்லும்போது, பழி சுமத்தும்போது இத மனசுல வெச்சுக்கணும் "Whether they are telling the facts or their own opinion". அப்ப, அந்த எடத்துலயே filter பண்ணி எடுத்துக்கிட்டா எதுவுமே நம்மள அவ்ளோ சீக்கிரம் காயப்படுத்தாதில்ல? ஒருத்தங்க சொல்றது எல்லாமே நம்மளத்தா சொல்றங்கனு எடுத்துகிட்டாலோ, இல்ல அவங்க நம்மள பத்தி சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்புனாலோ நமக்குதா நஷ்டம். Such a valuable takeaway 🙏🏼.

      Delete
    5. 'ல்' 'ன்' ஆக மாறுதல் 👏👏👏👏.

      ஆனா, அது நடக்காதுனு நெனைக்கறேன். 'ர்' ஆகத்தான் மாறும்.

      Delete
    6. அதானே!!😃😃

      (A word about overseas electors turnout. I made a sweeping statement that no overseas elector has come to vote for other parties so far. I'm sorry about that. They have done so in the previous elections. But this time the percentage is more. That's what I exaggerated telling that it hasn't happened before.)

      I was not a Vijay fan. அவர புடிக்கும், அவர் நடிச்ச படங்கள பிடிக்கும். ஆனா ரொம்ப ஆழமா போய் அவர ரசிச்சது இல்ல. எப்பவரைக்கும்? இப்போ ஒரு ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும்.

      When Mr.Annamalai was rising in TN politics, that was when Mr. Vijay started his party. நா அண்ணாமலை அவர்களோட knowledge and intellect அ பாத்து வியந்திருக்கேன். ஆனா தப்பான எடத்துல இருக்காரேன்னு ஒரே ஆதங்கமா இருக்கும். But for Annamalai, BJP would not have set its roots in TN. இப்போ அவர தூக்கி ஓரமா உக்கார வெச்சுட்டாங்க. Ok let it be. நா அண்ணாமலை அவர்கள ஒரு promising candidate ஆ பாத்துட்டு இருந்தப்போ தா விஜய் அவர்கள் கட்சி ஆரம்பிச்சாரு. அப்போ எனக்கு தோணுனது, "அடச்சே இவரு இப்பதான் கட்சி தொடங்கணுமா. இனி இருக்கறவங்க பூரா இவருக்கு தானே ஓட்டு போடுவாங்க" ன்னு.

      காலங்கள் ஓடுச்சு. அவரு இதுக்கு முன்னாடி பண்ண விஷயங்கள் பத்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டேன். People love him a lot.
      அவர் பண்ண சின்ன சின்ன விஷயங்கள் என்ன ரொம்பவே கவர்ந்திருச்சு.
      கட்சி கொள்கைலாம் அடுத்து.

      உதாரணமா, செங்கோட்டையன் அவர்களோட சட்டை பை ல ஜெயலலிதா அம்மையார் படத்தையே வெச்சுக்க சொன்னது.

      குழந்தைக்கு பேர் வெக்க சொன்னா, பெத்தவங்க கிட்டயே மூணு பேர கேட்டு அதுல ஒண்ண வெச்சது. ஜெயக்கடாவின் ஆண் குழந்தைக்கு கருணாநிதி ன்னு பேர் வெக்கறவங்களுக்கு மத்தியிலே பெத்தவங்க விருப்பத்தை கேட்டுட்டு வெக்கறதெல்லாம் சிம்ப்ளி சுபெர்ப்.

      அவரு செஞ்சதுலயே THE BEST வந்து தேர்தல் அறிக்கையோட முதல் பிரதியை விவசாயிகிட்ட குடுத்தது.

      விவசாயிகள் போராட்டம் பண்ணும்போது, தற்*லை பண்ணிக்கிட்டாங்கன்னு செய்தி வரும்போது கோவம் கோவமா வரும். இவங்களயெல்லாம் இப்படி தெருவுல விடலாமா? இவங்க மனசு நோக இப்படியெல்லாம் பண்ணலாமா? பொத்தி பொத்தி வெச்சு அத்தனை பத்திரமா, அக்கறையா பாதுகாக்கப்பட வேண்டியவங்க விவசாயிங்க. அவங்களயெல்லாம் உள்ளங்கைல வெச்சு தாங்கணும் அரசாங்கம். இப்படியெல்லாம் ஆதங்கத்தோட இருக்கற ஆளு நானு, இப்படி ஒரு election manifesto intro வ பாத்தா எப்படி இருக்கும்? அப்புடி இருந்துச்சு.

      இதெல்லாம் மட்டும் இருந்தா போதுமா? நிர்வாகத்திறன் வேணாமா? மக்கள் மேல அன்பு இருந்தா, மக்களுக்கு நல்லது செய்யணும்ங்கிற மனசு இருந்தா அதெல்லாம் தானாவே அமையும்.

      A good human with guts and resilience. ஜெயிச்சுரு ராசா...

      Delete
    7. Yes. Nowadays, making movies with unthinkable twists is very challenging. Cz audience watch many movies and they are exposed to various possibilities. So they start making guessworks. Adhyellam thaandi yoschu eduthu success aagara padangal dha Ratsasan, Maharaja madiri movies lam. Irukatum. Adhellam scripted.

      But ipo nama onnu live aa paathutu irukome. Pure cinema dha. Edge-of-the-seat, nail-biting thriller. Indha madiri surging emotions la sail aagaradhum nalladha iruku.

      Delete
    8. I regret writing my thoughts without much thought. They are so naive. Readers kindly excuse my credulousness.

      Delete
  2. why begging childrens to vote for tvk to her parents

    ReplyDelete
  3. Even without 'begging', children know to whom their parents should vote for. Who are going to live in the future society which is being created in the present? Today's children. So they have every right to tell their parents.

    இப்போ ரொம்ப வயசானவங்க எல்லாம் கட்சி பாரம்பரியம்ன்னு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டுட்டு போயிருவாங்க. இருந்து அதோட தாக்கங்கள் சூழ வாழப்போறது யாரு? இப்போ இருக்கற பிள்ளைகள்தான். பெரியவங்கெல்லாம் தன் விருப்பத்தை தான் இத்தனை வருஷம் நிலைநாட்டிட்டாங்களே? இனி வரப்போற பிள்ளைகளுக்காக நல்ல ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கலாமே.

    ஒரு அஞ்சு வருஷம் தா வாய்ப்பு குடுத்து பாருங்களேன். நல்லா ஆட்சி செய்யலேன்னா இருக்கவே இருக்கு அடுத்த தேர்தல். ஆனா புதுசா ஒருத்தங்களுக்கு வாய்ப்பே குடுக்க கூடாதுன்னு சொல்றதெல்லாம் சரியில்ல.
    ........
    திருத்தம் : present ruling party and ex-ruled party தா தனக்கு ஓட்டு போடணும்ங்கிறக்காக பணத்தையும் பொருளையும் லஞ்சமா குடுத்து ஓட்டுக்காக 'beg' பண்றாங்க. நல்லாட்சி குடுத்திருக்கோம்ங்கிற confidence இருந்திருந்தா நீங்க ஏன் பா இப்படி லஞ்சம் குடுத்து ஓட்டுக்கு 'beg' பண்றீங்க?
    இப்படி குடுத்து குடுத்து மக்களையும் 'beggars' ஆ பாவிச்சு வெச்சிருக்கீங்க. ஒரு hot box, தூக்குச்சட்டி, அண்டா குண்டா க்கு கூட அலையற நிலைமைலதா மக்கள வெச்சிருக்கீங்களா, திராவிட கட்சிகளே? அவங்க வாழ்க்கை தரத்தை உயர்த்திருந்தா அவங்க ஏன் இந்த மாதிரி சொற்ப பொருள்களுக்காக அலைய போறாங்க? ஏன் இன்னும் எங்களுக்கு அந்த பொருட்கள் வரலன்னு கேக்க போறாங்க? எவ்ளோ மோசமான நிலைமைல மக்கள வெச்சிருக்கீங்க?
    ...
    இங்க பாருங்க சும்மா சும்மா இன்னொரு வாய்ப்பெல்லாம் கெடைக்காது. வேற யாரு ஒரு மாற்று சக்தியா இவ்ளோ மக்கள் பலத்தோட வரப்போறாங்க? Maybe அதுக்கு இன்னொரு 30 to 40 வருஷங்கள் ஆகலாம். ஆனா இப்போ கையில இருக்கற வாய்ப்பை தவறவிட்டுட்டா.... I'm sorry. We all should be sorry.

    ReplyDelete
  4. Today velankanni church tvk supporters all shouting tvk tvk inside church. What kind of behavior is this. Atleast their leader should scold them and control them. No talking on media and controlling the supporters. What will happen if he win? Very very wrong.

    ReplyDelete
  5. கதையே இப்பதான் ஆரம்பிக்குது. Wait and watch.

    ReplyDelete
  6. எல்லா முன்னணி தலைவர்களும் மக்கள்கிட்ட பேசியாச்சு (மைக் புடுச்சுட்டு இருந்த நிருபர்கள்கிட்ட). முன்னாள் முதல்வர் அவரு தொகுதிக்கே போய் மக்களை சந்திச்சாச்சு. ஆனா மக்கள் சேர்ந்து ஜெயிக்க வெச்ச ஒருத்தரு இன்னும் எக்ஸ் தளத்துல கூட ஒரு பதிவை போடாம இருக்காரு. நேத்து வாழ்த்து சொன்ன தலைவர்களுக்கே இன்னிக்கி தா நன்றி சொல்லிருக்காரு. மக்களுக்கு நன்றி சொல்ல நல்ல நேரம் பாத்துட்டு இருக்காரு போல.

    ReplyDelete
    Replies
    1. I strongly doubt this is also you especially because of the subtle humour inside the parenthesis.

      Anyways, நான் த.வெ.க கட்சிக்காரன் கிடையாது. நான் என்ன பதிவு போட்டிருக்கிறேனோ, அதில் சொல்லப்பட்டிருக்கும்‌ என்னுடைய‌ கருத்துகளுக்கு எதிர்க் கருத்து சொன்னால், பதிலளிக்க வேண்டியது எனது கடமை. இது என்னுடைய பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்து. இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு என்னுடையதல்ல. (அதற்காகவே, நீங்கள் சொல்வது நியாயம் என்றாகாது)

      தவிர, இது நடிகர் விஜயின் அருமை பெருமைகளை சிலாகிக்கும் ஒரு fanboy பக்கம் கிடையாது. எனவே, அவர் குறித்தான அனைத்து அவதூறுகளையும் நீங்கள் இங்கே கொட்டத் தேவையில்லை.

      அது தொடரும் பட்சத்தில், என்னுடைய blog-ல் வரும் எந்தவொரு பதிலையும் நீக்கும் உரிமை எனக்கு இருக்கிறது.

      Delete
    2. That was me. I was angry and confused and vented that in the wrong place. If I had an option to delete, I'd have done it. I'm sorry for commenting something irrelevant. I respect your space. Please feel free to delete anything that doesn't belong here.

      Delete
    3. I'm into metacognition now. When I had a doubt it was you, it was just a doubt. I used the linker HOWEVER - which meant "I will give a response supposing it wasn't you".

      When I read the accusation about not thanking, it made me angry. When you admitted it was you, I started seeing it completely differently. It didn't infuriate me. Was it just because it was you? I'm metacognizing.

      Delete
  7. தற்குறி வட்டத்திற்குள் உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்ளாதீர்கள். அது வேறொரு zombie கூட்டம். நீங்கள் உண்மையான தற்குறியாய் இருந்திருந்தால் இவ்வளவெல்லாம் சிந்தித்திருக்க முடியாது, சிந்தித்து எழுதியிருக்க முடியாது. சிந்திக்கிறீர்களே! அதுவே நீங்கள் அந்த கூட்டத்தை சார்ந்தவர் அல்ல என்பதைக் குறிக்கிறது. அது முற்றிலும் வேறுமாதிரியான கூட்டம்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான். தற்குறி என்ற விமர்சனத்திற்கு "நன்றாக வருகிறது. வேண்டாமென்று பார்க்கிறேன்" என சொல்லாமல் மெனக்கெட்டு இத்தனையும் எழுதியிருக்கிறார்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?