ஒரு பணக்கார வீட்ல
நாம இருக்கோம்னு வையிங்க.
வீட்டு வேலைக்கு
ஆள் எடுக்கறோம்
ஒருநாள்.
அங்க ஒருத்தன்
நம்மகிட்டயே
பத்து ரூவா குடுத்துட்டு
கண்ணடிக்கிறான்.
கையில
வாங்குன காச
எச்சில் ஒழுகப் பாத்துட்டே
வீட்டுச் சாவிய
அவன்கிட்ட தர்றோம்.
அதே நாமதான்
வாய்கிழிய பேசறோம் -
அரசியல்வாதிக எல்லாம் அயோக்கியர்கள்னு.
அடிமுட்டாள்கள்
அயோக்கியர்களால்தான்
ஆளப்படுவார்கள்.
Exactly. வெறும் 1000, 2000, 5000 க்காக 5 வருஷத்த அடகு வெக்கறவங்கள என்னனு சொல்றது? இந்த சொற்ப தொகையை வெச்சு செழிப்படைய போறாங்களா? இல்ல அந்த காசு பல்கி பெறுகப்போகுதா? அதுவும் இல்ல.
ReplyDeleteநல்ல வேலை வாய்ப்புகள உருவாக்கி குடுத்தா மாசம் minimum 10,000 ஆவது கிடைக்குதுன்னு வெச்சுக்கலாம். One time 5000 ஆ? இல்ல மாசமாசம் சம்பளமா? கொஞ்சமாவது ஜனங்க யோசிக்க வேணாமா? இவங்களுக்கு புரியுதா இல்லையா?
நல்ல ரோடுகள, நல்ல infrastrucutures அ (இதுநாள் வரைக்கும் நெல் மூட்டைகள மழைல நனையவிட்டுட்டு தானே இருக்கு அரசாங்கம்? such a shame!), நல்ல system அ , நல்ல ஒரு rich governance அ - இதெல்லாம் இந்த காசுக்கு அடகு வெச்சுட்டுதானே இருக்காங்க?
நா அடிக்கடி சொல்லுவேன், இந்த கூறுகெட்ட ஜனங்களுக்கு இந்த அரசியல்வாதிக போதும் ன்னு. They don't deserve better. But atleast for the sake of future generation they should vote wisely this time.