இரசனை போதைக்கு அடிமையானவன்
திருஷ்டி பொம்மையும்
அழகாயிருந்தால்
என்ன செய்வது?
அவன் இரசிகன்.
...
கவிதை ஏன்
படிக்கட்டுகளாய்
எழுதப்படுகிறது
என்பது புரியும் போது,
கவிதையை நோக்கி
ஓரடி எடுத்து வைக்கிறீர்கள்.
ஆம், அவன் இரசிகன்.
கவிதைக்கும்.
...
நிலவைப் படைத்து
முடித்த கையில்
அந்த ப்ரம்மன் உன்னைப்
படைத்து விட்டான்.
ஆம்,
அவன்
இரசனையின்
இரசிகனுங்கூட.
நன்றி
வைரம்.
வைரம்
ஆல்ஸோ நோன் ஏஸ்
வைரமுத்து.
...
இதைக்
கேளுங்களேன்.
இச்சையை
வெளிப்படுத்த மட்டுமே
எழுதப்பட்ட வரிகள்.
அவள்:
...
இச்சையை
வெளிப்படுத்த மட்டுமே
எழுதப்பட்ட வரிகள்.
அவள்: பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டுப்பாடி ஆவதென்ன?
அவன்: ஸாரி. அவர். ஏனென்றால், அது அவர்தான்.
அவர்: பல்லவி சரணம் முடிந்தவுடன் நாம் பங்குபெறும் காட்சி என்ன?
அடடா.
இரசிகன். இரசிகன்.
இந்த முறை
இது ஒரு
புது இரசிகன்.
இரசிகர்.
...
இச்சையை
வெளிப்படுத்த மட்டுமே
எழுதப்பட்ட வரிகள்.
அவள்:
என்று
டைப் செய்துவிட்டு,
அவ்வரிகளைக் கேட்க
ஒலிக்க விட்டான்.
செவ்வானம்
சின்னப்பெண்
சூடும் பாட்டை.
அந்த வரிகளை மட்டுமா கேட்பான்?
இல்லை.
முழுப்பாட்டையும்
கேட்பான்.
இதைக் கேளுங்கள்.
அப்படிக்
கேட்கும்போது
மெய்ம்மறந்து,
தான் ஒரு பாட்டு வரியைக் கவனிக்க வேண்டும் என்ற மெய்யையும் மறந்த இரசிகன்.
விதிமீறல்களின் இரசிகன்.
...
அவள்: பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டுப்பாடி ஆவதென்ன?
மேற்காணும்
வரிகளைப்
படிக்கும்போது --
படிக்கட்டுகளாக
எழுதப்பட்டிருந்தால்
இன்னுமே
நன்றாகப்
படித்திருப்பேன்
என்று நீவிர் சொன்னால்,
Congratulations. Let's move to the second point.
அதைப்
பற்றியே
யோசிக்கவில்லையென்றால்,
எழுதுங்கள்
ஆளுக்கொரு
ஹைக்கூ.
ஐ யேம் வெய்டிங்!
ஆம்.
அவன் ஒரு
JD இரசிகனும் கூட.
...
'மெய்ம்மறந்து', 'மெய்யையும் மறந்த'👌🏼👌🏼👌🏼
ReplyDelete..........
ஹைக்கூவெல்லாம் எழுத வராது. ரசனை உள்ளோருக்கு பகிர்ந்து கொள்ள சில....
மிகவும் ரசித்த கவிஞர் வாலி அவர்களின் சில வரிகள் :
அல்லிவிழியோரம்
அஞ்சனத்தை தீட்டி
அந்தி வண்ண பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம்
ஆபரணம் பூட்டி
அன்னம் இவள்
மேடை வந்தாள்
மின்னல் முகம் காட்டி.
ஒரு மணப்பெண்ணின் வருகையை எத்தனை அழகாக வருணித்திருக்கிறார்!!!!
..................
வார்த்தை விளையாட்டு வித்தகரின்
சில வரிகள் :
இந்த வளைக்கையில்
வளையல்கள்
நான் அல்லவா ?
இன்று வளைக்கையை வளைக்கின்ற
நாள் அல்லவா?
.
.
இது கன்னங்களா
இல்லைத் தென்னங்கள்ளா?
............
முன்பு நான் இந்த வரிகளை புரிந்து வைத்திருந்த விதம் -
'இது கன்னங்களா?
இல்லை தென்னங்களா?'
'தென்னங்கள்' (plural of தென்னம்) என ஏதோ ஒன்று இருக்கும் போல என நினைத்திருந்தேன்.
அப்புறம் (after 20+ years) தான் தெரிந்தது அது 'தென்னங் கள்' என்று. எஸ்.பி.பி. அவர்கள் சரியான இடத்தில் stress கொடுத்து அதை வேறுபடுத்தி காட்டியிருப்பார்.
.......
இந்த வரிகளை இப்படி நினைத்திருந்தேன் -
உந்தன் வலக்கையில் வளையல்கள் நான் அல்லவோ?
இன்று வளைக்கையில் வளைகின்ற நாண் அல்லவோ?
(இதற்கு முன்பு ஸ்திரமாக இருந்தவன் இப்பொழுது நாண் போல வளைகிறான் என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டேன். 'நாணல்' ஆக இருக்க வாய்ப்புள்ளதோ என்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்பொழுதான் தெரிந்தது நாண் வளையாது, அது வளைக்கும் என்று.)
இப்பொழுதும் கூட அதை 'வலக்கை' என்றுதான் நினைத்தேன், இருந்தபோதும் ஏன் எஸ்.பி.பி. அவர்கள் அதை வ'ல'க்கை என உச்சரிக்காமல் 'ள' கரத்தில் உச்சரிக்கிறார் என்று நினைத்தேன்.
பிறகுதான் அதனுடைய உண்மையான அர்த்தம் புரிந்தது!!
................
பத்தாம் வகுப்பு விடுமுறையில் வாலி அவர்கள் எழுதிய 'அவதார புருஷன்' வாசித்தேன். தமிழை காதலிப்போர் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இன்னும் இத்தனை அழகானதா தமிழ் என ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்திவிடுவார் வாலி.
அப்போது இருந்த விகடன் பிரசுரம் பிரதி கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்பொழுது இருப்பது எப்படி எனத் தெரியவில்லை. ஆனால் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.