கல்லூரி கலைத் திருவிழா

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா

சிறப்பு விருந்தினர்களாக
கட்சிக் கரை வேட்டிகளுடன்
எம்.எல்.ஏ மற்றும் எம்.பி

வேறொரு கட்சிக்காரரின் திருக்குறள் குறித்த புரிதலை விமர்சித்த எம்.எல்.ஏ

அரசின் கல்வி நலத்திட்டங்களை
எடுத்துக்கூறி,
"நல்லோருக்கு" வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்த எம்.பி

கட்சிப் பணத்தைக் கொண்டு
வீதிகளில்
நடத்த வேண்டிய‌
தேர்தல் பிரச்சாரத்தை

அரசுப் பணத்தைக் கொண்டு
கல்லூரியில் மாணவர்களை உட்கார வைத்து நடத்தியபோதே முடிவு செய்தேன்,

எனது ஓட்டு ஆளுங்கட்சிக்கு இல்லையென்று.

Comments

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?