பொய்மை
உண்மையாயிருந்ததால்,
காயப்பட்டோரே--
ஒதுக்கப்பட்டோரே--
கண்ணீர் உகுத்தோரே--
பொய்யொன்றும்
பாதகமில்லை ஐயா!
உண்மையைப் போலன்றி,
பொய் கொஞ்சம் கருணையுள்ளது;
முகத்திலறையாதது;
இடம் பொருள் ஏவலறிந்தது;
புரைதீர்ந்த நன்மை பயப்பது;
ஆறுதலளிப்பது;
சுவாரஸ்யம் சேர்ப்பது;
இரசிக்கத் தக்கது;
மனிதத் தன்மை மிக்கது;
கவிதைக்கானது;
காதலுக்கானது;
ஹாஸ்யமானது;
அதி முக்கியமாக,
உண்மையைச் சீரணிக்கும் பக்குவம்
உலகார்க்கெலாம் வாய்க்கும் வரையிலும்,
வாழ்க்கையை அழகு செய்வது,
பொய்.
உள்மனதில் உறையட்டும் உண்மை,
உதட்டில் சற்று விளையாடட்டுமே பொய்!
Poimayin unmai!!!
ReplyDeleteReally awesome.
அருமை
Delete