இன்புற்றிருத்தல்
Mihaly Csikszentmihalyi எழுதிய Flow என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.
மகிழ்ச்சியாயிருக்க மனதைப் பழக்குதல் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.
ஆன்மிக ரீதியான தத்துவங்களாக இல்லாமல் -- உளவியல், மூளை நரம்பியல் போன்ற அறிவியல் துறைகளின் கோணத்தில் மகிழ்ச்சி குறித்து ஆராய்வதே இப்புத்தகத்தின் சிறப்பு.
அதிலே நான் ஒரு குறிப்பிட்ட செய்தியைப் படித்தபோது, "அட, இதைத்தான் நாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே!" என்று யாருக்கும் பாதகமில்லாத ஓர் அகந்தை தோன்றியது. அது குறித்துப் பகிர விரும்புகிறேன்.
(Pleasure எனும் இன்பம், enjoyment எனும் களிப்பு, happiness எனும் மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது புத்தகம். அதுகுறித்து விரிவாக நான் சொல்லப் போவதில்லை.)
சரி, புத்தகம் சொன்ன செய்தி என்ன?
நாம் அன்றாடம் செய்யும் ஒரு சாதாரண செயல் கூட நமக்கு பெருங்களிப்பைத் தரக்கூடியதாக மாற்ற முடியும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
அந்த அன்றாடச் செயலிலே இலக்குகளையும் விதிகளையும் நாம் நிர்ணயிக்க வேண்டும்.
சரி. இப்போது என்னுடைய அனுபவத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
அன்றாடச் செயல்: பைக் ஓட்டுவது
பைக் ஓட்டுவது என்ற அன்றாட நடவடிக்கையில் நான் ஒரு விளையாட்டைப் புகுத்தியுள்ளேன். அதற்கு நான் வைத்துள்ள பெயர் "பைக் க்ரிக்கெட்".
என்னுடைய பைக் டிவிஎஸ் அப்பாச்சி 160. அதிலே இருப்பது டிஜிட்டல் டிஸ்ப்ளே. அதில் Trip A மற்றும் Trip B என்று இரண்டு mode உள்ளன. பைக்கின் மொத்த பயண தூரம் ஓடோமீட்டரில் தனியாக இருக்கும். அதுபாட்டுக்கு அதனுடைய கணக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
நீங்கள் வீட்டிலிருந்து சினிமா தியேட்டருக்குப் போகும்போது, அது எத்தனை கிலோ மீட்டர் என்று தெரிந்து கொள்ள நினைக்கிறீர்கள். அப்போது, ஓடோமீட்டரில் உள்ள தூரத்தைப் பார்த்துக் குறித்துக் கொண்டு... தியேட்டருக்குப் போனபிறகு காட்டும் தூரத்தைப் பார்த்து... அதை ஆரம்ப அளவிலிருந்து கழித்து... என்று பெரும்பாடு படத் தேவையிவ்லை. எளிதாக Trip A மோடில் 0 என்று செட் செய்துவிட்டு ஜாலியாகக் கிளம்பலாம். தியேட்டருக்குப் போய்ச் சேர்ந்த பிறகு Trip A-வைப் பார்த்தால், வீட்டிற்கும் தியேட்டருக்கும் இடையே உள்ள தூரம் தெரியும்.
உங்களுக்கு என்னைப்போலவே ஞாபக மறதி ஜாஸ்தி என்று வைத்துக் கொள்ளுங்கள். தியேட்டருக்குப் போய்ச் சேர்ந்த பிறகு Trip A-வைப் பார்க்க மறந்து விடுகிறீர்கள். அப்படியானால், நீங்கள் படம் பார்த்து முடித்துவிட்டு வந்து வண்டியை எடுப்பதற்கு முன்னாடியாவது Trip A மீட்டரைப் பார்த்துவிட வேண்டும். படம் பார்த்தபின் வேறு எந்த இடத்திற்கும் போகாமல், திரும்பவும் வீட்டிற்கேதான் (வந்த வழியிலேயே) போகப் போகிறீர்கள் என்றால் கூட, போகும் வழியில் எங்காவது உங்களுக்கு ஞாபகம் வந்தால் கூடப் போதும். வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தவுடன் Trip A-வைப் பார்த்து, அது காட்டும் தூரத்தை இரண்டால் வகுத்தால் வருவதே வீட்டிற்கும் தியேட்டருக்குமான தூரம்.
உங்களுக்கு ஞாபக மறதியும் இருந்து -- படம் பார்த்துவிட்டு வந்து வண்டியை எடுப்பதற்கும் மறந்து -- வந்த வழியிலேயே வீட்டிற்கும் போகாமல் வேறு எங்காவது போய் விட்டீர்கள் என்றால், அடுத்தமுறை Trip A மீட்டரைப் பார்க்கும் போது 945 கி.மீ என்று ஏதாவது காட்டும். அந்த 945 கி.மீ பயணம் எங்கே தொடங்கியது என்று மறந்தே போயிருக்கும்.
நிற்க. வண்டியின் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஒரு டிஜிட்டல் கடிகாரமும் இருக்கும்.
விதிகள்
பைக்கின் டிஜிட்டல் டிஸ்ப்ளேதான் ஸ்கோர்போர்ட்.
எப்போதுமே நான் நடத்துவது, இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா போட்டிகள்தான்.
இந்தியா பேட்டர்கள்:
விரேந்தர் ஷேவாக்
ராகுல் ட்ராவிட்
சச்சின் டெண்டுல்கர்
ஆஸ்திரேலியா பேட்டர்கள்:
ஆடம் கில்கிறிஸ்ட்
ஸ்டீவ் ஸ்மித்
மைக்கேல் பெவன்
எப்போதுமே முதலில் இந்தியாதான் பேட்டிங். டிஜிட்டல் கடிகாரத்தில் ஒரு நிமிடம் என்றால், அதுதான் ஒரு ஓவர்.
நான் பைக் ஓட்டிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த விளையாட்டை ஆட முடியும் என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
எப்போது விளையாட நினைத்தாலும் டிஸ்ப்ளேவை Trip A மோடுக்கு மாற்றி வைப்பேன். அது ஏதாவதொரு அளவைக் காட்டும். பிறகு டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்ப்பேன். 11:26 என்று காட்டுகிறது என்று வைத்துக் கொண்டால், 11:27 ஆகும் வரை, Trip A-வில் SET பட்டன் மீது கை வைத்துக்கொண்டு தயாராக இருப்பேன். 11:27 என்று மாறிய அதே வினாடியில் SET பட்டனை அழுத்தினால் Trip A வில் காட்டும் தூரம் 0.0 என்று மாறிவிடும். அப்படியென்றால் ஷேவாக் களமிறங்கிவிட்டார் என்று அர்த்தம்.
ஓர் அணிக்கு மொத்தம் 15 ஓவர்கள். (அதாவது 15 நிமிடங்கள்) 11:27-க்கு ஆரம்பிக்கும் இந்தியா இன்னிங்ஸ் 11:42 ஆகும் போது முடிவுக்கு வரும். (இதனை மனதில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்).
Trip A-வில் காட்டும் தூரமே ரன்கள். அந்த டிஸ்ப்ளே தூரத்தை வெறும் கிலோமீட்டரில் மட்டும் காட்டாமல், ஹெக்டோமீட்டரிலும் காட்டும். (1 கிலோ மீட்டர் = 10 ஹெக்டோ மீட்டர்)
அதாவது, நான்கறை கி.மீ என்றால் 4.5 என்று காட்டும். அடுத்த ஹெக்டோ மீட்டரில் அது 4.6 என்று மாறும்.
இதிலே, அந்த தசமப் புள்ளியை நாம் தூக்கிவிட்டால் அதுவே நம்முடைய ரன். இங்கே 46 ரன்.
(ஓவருக்கு 10 ரன் என்னும் ரேட்டில் ஆட வேண்டும் என்றால், 60 kmph-ல் போக வேண்டும். 1 கி.மீ = 10 ரன்)
விக்கெட் விழுவது எப்படி? ரொம்ப சிம்பிள். வண்டியில் ப்ரேக் போட்டால் விக்கெட். ஆனால், க்ளட்ச் பிடித்துக் கொள்ளலாம்.
மிகவும் அதிரடியாக ஆட வேண்டும் என்று வேகமாகப் போனால், விக்கெட் விழும் அபாயம் உள்ளது. விக்கெட் விழக் கூடாது என்பதற்காக மெதுவாகப் போனால், குறைவான ஸ்கோர் கிடைக்கும் அபாயம் உள்ளது.
இதிலே இன்னொரு அம்சமும் உள்ளது. பிட்சில் ஏற்படும் மாற்றம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவதற்கு சாதகமாக இருக்கும் பிட்ச், இரண்டாவது இன்னிங்ஸில் பௌலிங் பிட்சாக மாறிவிடும். சில சமயம், அதற்கு நேர்மாறாகவும் நடக்கும். அது எப்படி? சாலையின் தரம், ட்ராஃபிக்கின் நெரிசல், மாறும் வெளிச்சம் இவையெல்லாம்தான் அதனைத் தீர்மானிக்கும். பதினைந்து ஓவர் முடிந்து (அதாவது பதினைந்து நிமிடத்தில்) நகர்ப் பகுதி வரப் போகிறதென்றால், ஆஸ்திரேலியாவால் அதிவேகமாக ஆடமுடியாது. எனவே, இந்தியா அதிக ஸ்கோரை மனதில் வைத்து ஆடாமல், பதினைந்து ஓவர்களை ஆடி முடிக்கப் பார்க்க வேண்டும்.
இதிலே, ஒவ்வொரு ப்ளேயருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. ஷேவாக் அதிரடியாக ஆடுவார். முடிந்த அளவு விக்கெட் விழாமல் வேகமாக ஆடப்பார்ப்பார். ஆனால், அவருக்கு வேகமே முக்கியம். மூன்று பேட்டர்களுக்கு பதினைந்து ஓவர் என்றால், சராசரியாக ஒருவருக்கு ஐந்து ஓவர். ஷேவாக் தன்னுடைய ஐந்து ஓவர்களைக் கடந்துவிட்டால், அதற்குப் பிறகு விக்கெட் இழப்பதைப் பற்றிக் கவலையே பட மாட்டார்.
ஒருவேளை, முதல் ஓவரிலேயே (அதாவது, முதல் நிமிடத்திலேயே) ஷேவாக் விக்கெட் விழுந்துவிட்டால்...? அதற்குத் தானே, ட்ராவிட் இருக்கிறார்! ட்ராவிடின் பணி என்னவென்றால், தான் இறங்கியதிலிருந்து பத்தாவது ஓவர் முடியும் வரைக்கும் விக்கெட் விழாமல் ஆடுவது. அதற்குப் பிறகு அவரும் அதிரடிதான். கடைசி 5 ஓவர்களில், சச்சின் டெண்டுல்கர் ஆடுவார். என்ன சூழ்நிலையோ, அதை மனதில் வைத்து ஆடி முடிப்பார்.
ஆஸ்திரேலியாவுக்கும் கிட்டத்தட்ட இதே அணுகுமுறைதான்.
சில சமயம், பதினைந்து ஓவர் முப்பது ஓவராகக் கூட இருக்கும். மூன்று விக்கெட் ஐந்து விக்கெட்டாகும்.
லிமிடெட் ஓவர் க்ரிக்கெட் என்றில்லாமல், டெஸ்ட் மேட்சும் நடத்துவேன். அப்போது மொத்தமாக 150 ஓவர்கள். ஒரு நாளைக்கு 30 ஓவர்கள். அப்போது வேகமாகப் போவது முக்கியமில்லை. விக்கெட் இழக்காமல் ஆடுவதே முக்கியம்.
இன்னும் பவர் ப்ளே, ஃப்ரீ ஹிட் இதற்கெல்லாம் என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறேன்.
Wow... First of all thanks for writing. Oru vaati padichuten. Excitement la neraya velangala. Porumaya ukkandhu padikanum.
ReplyDeleteThank you for the kind words. Means a lot.
DeleteThat was an interesting read... Intersting game too. Enaku maths konjam weak.
Delete(ஓவருக்கு 10 ரன் என்னும் ரேட்டில் ஆட வேண்டும் என்றால், 60 kmph-ல் போக வேண்டும். 1 கி.மீ = 10 ரன்)
Indha edathula rombave confuse ayduchu. 1 min = 1 over..
Apo over ku 10 runs venumna, 60 kmph la poganum...
Means 1 min la 10jrujrjdeje
Type panrapo kooda onnum puriyala enaku😩
Na tuition vechu padichutu marubadiyum vandhu padikaren.
ஹலோ பாஸ்... இது ரொம்ப ஈசி. நான் சொல்றேன் பாருங்க.
Delete1 km = 10 hectometre
இவரு வெச்சுருக்கறது டிஜிட்டல் டிஸ்பிளே. So ஸ்பீட் காட்டறது
0.1 km
0.2 km
.
.
.
0.8 km
0.9 km
1.0 km
1.1 km
.
.
.
இப்படி போயிட்டே இருக்கும்.
0.1 km = 1 hm = 1 run
புருஞ்சுதுங்களா? அப்போ
1 km = 10 hm = 10 runs
அப்போ 1 km = 10 runs
ஓகே வா?
ஒரு eg. :
இவரு 3.2 km தூரம் கவர் பண்ணா என்ன அர்த்தம் னா 32 hm தூரம் போயிருக்காருனு அர்த்தம். So அதுதான் runs. 32 runs.
இப்போ,
1 km க்கு கண்டிப்பா 10 runs எடுத்தே ஆகணும்னா 1 minute ல 1 km தூரம் கவர் பண்ணிடனும். அப்போ என்ன ஸ்பீட்ல போனா 1 நிமிஷத்துல 1 km கவர் பண்ண முடியும்?
1 min = 1 km
∴ 60 mins = 60 km
அப்போ 60 kmph ஸ்பீட்ல போனாதா 1 km-அ 1 minute ல கவர் பண்ண முடியும்.
அவ்ளோதா. சிம்பிள். கொஞ்சம் ட்ரை பண்ணுங்க புரியும்.
Woaw!! Got it. Thank you bro for taking time to explain👍🏽
Deleteஅது என்னமோ தெரியல இத படிச்சு முடுச்சதுல இருந்து 'ராசாளி' பாட்டுதா mind ல ஓடிகிட்டே இருக்கு.
ReplyDeleteஉலகத்துல, நாட்டுல எத்தனையோ மக்கள் எத்தனையோ கசப்புகளோட வன்மங்களோட சுத்திட்டு இருக்கும்போது ------ ஒரு பைக், அதுல ஒரு கேம். What kind of harmless thing is this!!!!
மகா ஜனங்களே! வாழ்க்கைல ரசிக்க எத்தனையோ இருக்கு... அதெயெல்லாம் பாருங்க பா. அத விட்டுட்டு வாழற கொஞ்ச காலத்துல எதுக்காக எல்லாத்தையும் தூக்கி தலைல போட்டுக்கணும்? அடுத்தவங்களுக்கு கெட்டது நினைக்கணும்?
பைக் கிரிக்கெட் எவ்ளோ ஒரு ஜாலியான விஷயம் ல? Very creative and enjoyable techniques😃😃. Enjoying the moment and living life to the fullest during those moments. I could sense the inner child in you emerging during this.
இத படிச்சதில இருந்து mind ஓரத்தில "இதே மாதிரி சின்ன வயசுல நானும் ஏதோ பண்ணிருக்கனே" னு தோணிட்டே இருந்துச்சு. அப்பறோந்தா strike ஆச்சு அது என்னனு.
பத்தாப்பு படிக்கும்போது தமிழ் மிஸ் ஒருத்தங்க இருந்தாங்க. ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட். அடி பிச்சு எடுத்துருவாங்க. Imposition லாம் தாராளமா தருவாங்க. Oral test தா தினமும். பதில் சொல்லலைனா அடி அப்பறோம் இம்போசிஷன். 100 times லாம் எழுத சொல்லுவாங்க. இது மிகைப்படுத்துதல் இல்ல. நிஜமாவே நூறு தடவ எழுதணும்.
நானெல்லாம் stuck ஆகாம பதில் சொல்லிட்டாதா அதிசயமே. பயத்துல அதுவும் நடந்துருக்கு. ஆனா கிளாஸ் ல எல்லாருமே தமிழ் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்துருவோம். ஏன்னா அடி அப்படி.
சரி விஷயத்துக்கு வருவோம். இம்போசிஷன் அதுவும் நூறு தடவ...one word answer இல்ல short answers. பத்து தடவ எழுதுனாலே மனப்பாடம் ஆயிடும். மீதி தொண்ணூறு தடவ எப்படி எழுதறது/ எதுக்காக எழுதணும்? பயங்கர போர் அடிக்கும் கை வலிக்கும். அப்பொழுது உதயமானதுதா கீழ சொல்ற ஐடியா.
FM ரேடியோ establish ஆகி rising ல இருந்த காலம். டேப் ரெக்கார்டர் பக்கத்துல உக்காந்துக்க வேண்டியது. ஒரு நல்ல பாட்டு போடறாங்கன்னா, அந்த பாட்டு முடியறக்குள்ள இவ்ளோ தடவ எழுதி முடுச்சுறணும்னு ஒரு கோல் செட் பண்ணிட்டு எழுத ஆரம்பிப்பேன். பாட்ட கேட்டுட்டே எழுதியும் முடுச்சுருவேன். அடுத்த பாட்டுக்கு வெயிட்டிங். ரொம்ப சீக்கிரமா எழுதி முடிக்கணும்னா FM செட் ஆகாது ஏன்னா இடைல இடைல பேசிகிட்டு இருப்பாங்க.
அப்போ என்ன பண்றதுனா cassette போட்டுற வேண்டியது. கடைல குடுத்தா ரெகார்ட் பண்ணி தருவாங்கல்ல? அது. நெறய cassettes இருக்கும் வீட்ல. ஆனா எனக்கு ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கறது ஒரு கேஸ்ஸட் மட்டும்தா. ஒரு சைடு ல சங்கமம் இன்னொரு சைடு ல காதலர் தினம்.
ஒரிஜினல் கேஸ்ஸட் னா full பாட்டு இருக்கும். இது குடுத்து ரெகார்ட் பண்ணதால என்ன ஆச்சுன்னா ரெண்டு சைடும் ஒவ்வொரு பாட்டு பாதிலையே கட் ஆயிடும்.
"சூடித் தந்த சுடர் கொடியே..." கட்
ரோஜா ரோஜா ல செகண்ட் interlude ல female chorus "ஆ ஆ ஆ...."னு ஹை பிட்ச் போகும்போது... கட்.
இதனாலயே இந்த பாட்டுகள டிவி ல பாக்கும்போது அது கட் ஆகற எடத்துல mind ஒரு பிரேக் அடிச்சு அடுத்து வர continuation அ கேக்கும்.
கதைல ரொம்ப முன்னாடி போய்ட்டேன். So இந்த மாதிரி இம்போசிஷன் எழுதும்போது கேம் மாதிரி பாட்டு கேட்டுட்டு, number of answers fix பண்ணி எழுதி முடுச்சுருவேன். சும்மா mindless writing தானே? அதனால this method suits.
After reading your writing, I'm thinking of implementing the above said technique from the book in day to day life. It'll make mundane things interesting.
Super bro. Nanum idhe madiri try panni paakaren. Yaro Rasali paatu sonanga.
ReplyDeleteNa usual a pogumbodhu
"Nama nama nama nay nana nay nana hoai hoai
Nama nama nama nay nana nay nana hoai hoai
Nama nama nama thandhiramana killadi naa hoai hoai"
dha odum.
Loved it :)
Delete