ஒப்பிலக்கியம்

a) நட்சத்திரப் பின்னணியற்ற

முடிவிலாக் கருமை


ai) அவளது கண்ணின் கருவிழி

ii) ஒன்றுமே விளங்கவியலா அவளின் மௌனம்

iii) அவளும் நானும் பேசாதபோதும் பேசிக்கொள்ளும் வார்த்தை


b) வேகவைத்து மசிக்கும்

உருளைக் கிழங்கின் மென்மை


bi) அவள் உதட்டின் வெதுவெதுப்பான இஸ்திரி

ii) அவளது காது மடலில் எழுதப்பட்ட மெல்லின வார்த்தைகள்

iii) இளநுங்கை விட மென்மையான அவளது தேன்குரல்


c) ஏ.ஆர்.ரஹ்மானின் புல்லாங்குழலிசை


ci) அவளது உன்மத்தக் காதோர முனகல்

ii) தொட்டிலைத் தாலாட்டும் தென்றலைப் போல, மழலையைக் கொஞ்சும் அவளது மழலை. 

iii) இளங் கன்றுக்குட்டியின் "...ம்மா!"விற்கு ஒப்பான, அவளது "...ப்பா!"


d) வியர்த்த உடல் தடவும் இளந்தென்றல்


di) கோர்த்துக் கொள்ளும் அவளது விரல் மென்மை

ii) நெஞ்சில் பாயும் அவள் கன்னச்  சூடு

iii) கோடி முறை சொல்லப்பட்ட அவளது "லவ் யூ!"


e) பொட்டல் வெளியில் பௌர்ணமி நிலவு


ei) பொய்க்கோபத்தில் சற்றே கோணும் அவளுதடு

ii) என்னைப் பார்த்தால் விரியும் அவளது ரெட்டினா

iii) கிஞ்சித்து கடமை தவறும் அவளது சேலை


f) பரண் பூசையில் ஆட்டின் மார்பிளந்து பச்சைக்கறி தின்னும் பூசாரியின் உக்கிரப் பேரின்பம்


fi) அவளுக்கேயான பிரத்தியேக வாசம்

ii) உடல் கிளை படரும் கொடி விரல்கள்

iii) கள்வெறியூட்டுமெம்மெய்ச்சங்கமம்

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?