ஒரு சொல் கதை
PART 0
பெருவெடிப்பிற்கு முன்பு...
பெருவெடிப்பிற்கு முன்பு...
தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது, திடீரென எங்கிருந்தோ ஒரு பூமாலை வந்து தோளில் விழுந்ததைப் போல உணர்ந்தார் அவர். அவர் என்றால்? அவர் தான். யாருமற்ற ஒரு கம்பார்ட்மெண்டில் அமர்ந்து பின்னோக்கிச் சென்ற உலகத்தைப் பார்த்துக்கொண்டு வந்தவரின் கைகளின் மீது - குறிபார்த்துச் சுடப்பட்ட ஒரு தோட்டாவைப் போல - வந்து விழுந்தது, நூலால் கோக்கப்பட்ட ஒரு காகிதக்கற்றை. அந்த காகிதங்கள் அனைத்தையும் நிரப்பியிருந்தன, உலக வாசகர்களைக் காணும் உத்வேகத்தில் அவசர அவசரமாக வந்ததால் அலங்கோலம் ஆகிப்போன கையெழுத்தில் இருந்த வார்த்தைகள். அவர் அதைப் படிக்க ஆரம்பித்தார். அது ஒரு கதைபோலத் தோன்றியது. தலைப்புக் கூட இருந்தது. படித்தார். ஒரு சொல் கதை. 'PART 1' என்று உபதலைப்பிடப்பட்டிருந்த பகுதியிலிருந்து படிக்கத் தொடங்கினார்.
ஒரு சொல் கதை
PART 1
ஒரு முன்னுரை
The English translation of this title is not A One-word Story. It is rather obvious that in such a case the Tamil title should have been ஓர் ஒரு சொல் கதை in lieu of ஒரு சொல் கதை. What else could its meaning possibly be? Guess. Even if you find it out, keep it with you. It isn't meant for sharing. நிற்க.
எழுத்தாளர் கல்கி ஒருமுறை சொன்னார், ஒரு சிறுகதையில் தேவையில்லாமல் ஒரு சொல் கூட பயன்படுத்தப்படக்கூடாதென்று. சிறுகதை என்ற பெயரே ஒரு வரையறை தானாம். சிறு என்ற பெயரெச்சத்தின்படி அது சிறியதாகவும், கதை என்ற பெயரின்படி ஒரு கதையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டுமாம். இந்தக் கதையில் நிச்சயமாக ஒரு கதை உள்ளது. ஆனால், ஒரு கதை மட்டும்தானா என்றால், விருமாண்டி மாதிரி தான் சொல்ல வேண்டும். 'தெரியாதுங்கய்யா!'.
'விதிகளை மீறியே தீருவேன்' என்று அழிச்சாட்டியமாக எழுதப்பட்ட கதை அல்ல இது. 'இந்தக்கதை என்னைக் கருவியாகக் கொண்டு தன்னைத்தானே எழுதிக்கொண்டது' என்ற கர்வம் கொப்பளிக்கும் வாக்கியத்தை நான் நேர்மையான பணிவோடு சொல்லிக்கொள்கிறேன். சரி, நான் இங்கேயே அதிகம் பேசக்கூடாது. கதையில் இருந்து பிரியும் கிளைகளே எக்கச்சக்கமாக இருக்கப் போகின்றன. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு வட்டார வழக்கு பிரயோகம் உள்ளது.
"புத்தி, கவுட்டி கவுட்டியா பிரியுது உனக்கு" என்று.
Of course, அது முட்டாள்தனமான சிந்தனைகளையும் செய்கைகளையும் பகடி செய்யும் ஒரு sarcastic statement-தான். தமிழ்த்துறை மாந்தர் வஞ்சப் புகழ்ச்சி என்பர். ஆனால், இந்தக் கதையிலிருந்து பிரியும் கிளைகள், literally 'கவுட்டி கவுட்டியாகப்' பிரிந்தவை தான். இந்தக் கதை இன்னுமே கொஞ்சம் சிறு கதையாக இல்லாமல் போனதை வாசகர் பொறுத்தருள வேண்டும். படத்திற்கு முன்னால் போடப்படும் Censor Certification போலத்தான் இந்த நீண்ட நெடிய முன்னுரை, இத்தகைய பீடிகை, இத்தகைய beating around the bush - எல்லாம்.
Well, I'm not sure if this story of mine would be certified with an A or not. But, I'm damn sure it's not a U either.
ஒரு சொல் கதை
PART 2
ஒரு பொருளுரை
(அல்லது)
கிறுக்கன் கேள்வி
Well, I'm not sure if this story of mine would be certified with an A or not. But, I'm damn sure it's not a U either.
ஒரு சொல் கதை
PART 2
ஒரு பொருளுரை
(அல்லது)
கிறுக்கன் கேள்வி
(This title was finalised after rejecting the two titles, Kirukkan Kaetta Kaelvi and Kirukkanin Kaelvi. It was done with a purpose)
"உங்கள மாதிரி ஒரு நல்லவர, இந்த உலகத்துலயே எங்கயும் பாக்க முடியாது பெரிய தம்பி. ரொம்ப சந்தோசம்." என்று ஆதியிடம், அதிகபட்ச மிகைப்படுத்தலுடன் சொல்லப்பட்ட உண்மை என்று கூடச் சொல்ல முடியாத, அங்கிருந்த அனைவருக்குமே 'பொய்' என்று நன்கு தெரிந்த ஒரு பொய்யைச் சொன்னார் - சுந்தரம். பார்வதியின் அப்பா. (No reference to Thiruvilaiyaadal Puraanam). செம்பருத்தி நாடகத்தில்.
பணக்காரியும் அவ்வப்போது நல்லவளுமான அகிலாண்டேஷ்வரியின் செல்வப்புதல்வன் ஆதி. அவர்கள் வீட்டு சமையல்காரப் பெண் பார்வதி; அவளது தந்தை சுந்தரம் தான் அவர்கள் வீட்டு ட்ரைவர் (கார் ட்ரைவர் rather); ஆதியும் பார்வதியும் ரகசியமாய்க் காதலித்து ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு, அலைபாயுதே பாணியில் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதோ, அந்த விஷயம் இப்போது சுந்தரத்துக்குத் தெரிந்துவிட்டது என்பதோ நமக்கு முக்கியமில்லை.
எது முக்கியமென்றால், அந்த வசனத்தைத் தொலைக்காட்சியில் எதேச்சையாகக் கேட்க நேர்ந்த கிறுக்கன் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்டது தான். தனக்குத்தானே தான் கேட்டான் என்றாலும், அந்தக் கேள்வி சுந்தரத்துக்குத்தான்.
"அது எப்புடி சந்தோஷமாகும்? அது வருத்தம் தானே? யோசிச்சுப் பாருங்க. இந்த முடிவில்லாப் பிரபஞ்சத்துல எல்லாருமே ஆதி மாதிரி (அல்லது) ஆதி எப்படிப்பட்டவன் என்று சுந்தரத்தால் நம்பப்படுகிற, (அல்லது) அப்படி தான் நம்புவதாக சுந்தரத்தால் சொல்லப்பட்ட அளவுக்கு நல்லவங்களா இருந்துட்டா எல்லையில்லா சந்தோஷந்தானே! அது தான் The Ideal Universe. (அப்புடி ஒண்ணு இருந்தா நல்லா இருக்குமாங்கற கேள்வி ஒரு பக்கம் கிடக்கட்டும்). நிகழ்தகவுப்படி (அது எவ்வளவுதான் குறைவான சாத்தியக்கூறாக இருந்தாலும்) அது சாத்தியம் தானே! அதற்கு நேர்மாறான பிரபஞ்சம் என்று நம்முடையதைச் சொல்கிறார் சுந்தரம். சொல்லப்போனால், அதைவிட சற்றே சிறந்தது-னு சொல்றீங்க. எப்படினு கேக்கறீங்களா? அதான், ஆதி-னு ஒரே ஒரு நல்லவன் இங்க இருக்கானே! I mean, அப்படினு நீங்க சொல்றீங்களே! உண்மையில் இதுதான் இருப்பதிலேயே மிகவும் அல்பமான சந்தோசம். நான் இதுவரைக்கும் பேசுனதுல ஒரே ஒரு துளி அளவாவது பொய் எங்கயாச்சும் இருக்குனு சொல்ல முடியுமா?"
என்றான் கிறுக்கன்.
ஒரு சொல் கதை
PART 3
ஒரு முடிவுரையாகத்தானே இருக்க முடியும்?
இந்தக் கதையில் இம்மியளவு கூட பொய்யைக் கலக்கவோ, உண்மையை மறைக்கவோ கூடாது என்ற சிரத்தையுடன் தான் எழுதினேன். இது ஒரு கதைதானா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால், என்னுடைய சிரத்தையையும் மீறி ஒரு Planck Unit அளவு பொய் ஒன்று எனது பிரக்ஞையின்றியே இ/அ-ந்தக் கதையில் இடம்பிடித்துவிட்டது என்பதை இதை/அதை எழுதி முடித்ததற்கும் இதை/அதை முதல் முறை படித்துப் பார்ப்பதற்கும் இடையே உள்ள கால இடைவெளியில் உணர்ந்து கொண்டேன். விஷயத்திற்கு வருகிறேன். அந்தப் பொய்யை யாராவது கண்டறிந்து (அல்லது, நான் கண்டுபிடித்த பொய் அல்லாது வேறு ஏதேனும் பொய் இருப்பினும், அதைக்கண்டுபிடித்து) என்னிடம் சொல்பவர்களுக்கு நான் சில வாய்ப்புகள் தரப்போகிறேன். தருவேன். தருகிறேன். ஏதேனும் ஒரு சரியான பதிலை ஒரு 40 ஆண்டுகளிலாவது எதிர்பார்க்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். என்னிடம் சொல்லப்படும் பதில் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்று மட்டும் தான் நான் அந்தக் குறிப்பிட்ட நபரிடம் சொல்வேனே தவிர, அவர் கண்டுபிடித்ததேதான் நான் கண்டுபிடித்த பொய்யுமா இல்லையா என்று சொல்ல மாட்டேன். ஒருவேளை எனது 90 வயது வரை அவருடன் உரையாட நேர்ந்தால், ஒருவேளை சொல்லலாம் - ஓவர் எ பியர். எல்லாம் சரியாக நடந்தாலுமே கூட, அதுவரைக்கும் நான் அந்த விஷயத்தை மறக்காமல் இருக்கவேண்டும்.
நான் தரும் வாய்ப்புகளாவன.
a) They can take me to a place wherever they would like to.
(OR)
b) They can introduce a new experience to me.
(They should be sure that I will profoundly enjoy it).
(OR)
c) They can marry me.
(OR)
d) They can kill me.
Options are not over yet.
ஒரு சொல் கதை
PART ∞
தவம்
அந்தக் கதையைப் படித்தபிறகு, அவரின் ஒவ்வொரு செல்லும் அந்தப் பொய்யைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தன. இரயில் நின்ற பிறகும் கூட, அவரது மனது படபடவென்று அடித்துக்கொண்டது. அது அப்படியே அடித்துக்கொண்டிருந்தது, அடுத்த ஒரு முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு. அவரால் என்னவெல்லாம் முடியுமோ அது அனைத்தையும் செய்து பார்த்தார். தலை நோகும் அளவுக்குச் சிந்தித்துப் பார்த்தார்; எத்தனை மனிதரிடம் கேட்க முடியுமோ, கேட்டுப்பார்த்தார்; மனிதர் அல்லாத மற்றவையிடமும் கூடுமானவரை கேட்டுப்பார்த்தார்; பைத்தியம் உணர்ந்து பார்த்தார்; தெளிந்து பார்த்தார்; ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து பார்த்தார்; உலக இலக்கியம் அனைத்தும் படித்துப் பார்த்தார்; உலகக் கலைகள் அனைத்தும் இரசித்துப் பார்த்தார்; நீரிலேயே கிடந்து ஊறிப் பார்த்தார்; தீயிலே கருகிப் பார்த்தார்; ஸ்கை டைவிங் செய்து பார்த்தார்; வலியச் சென்று ஒரு கடல் புயலில் சிக்கி தப்பிப் பார்த்தார்; ஆடையின்றி அலைந்து பார்த்தார்; மண்ணைத் தின்று பார்த்தார்; தன் சிறுநீர் குடித்துப் பார்த்தார்; உலகில் உள்ள அனைத்து வகையான போதைப்பொருட்களையும், அனைத்து வகையான வழிமுறைகளிலும் கன்ஸ்யூம் செய்து பார்த்தார்; ஏறத்தாழ இறந்து பார்த்தார்; தவமிருந்து பார்த்தார்; வெறுமனே இருந்து பார்த்தார்; காமத்தில் இதற்கு மேல் எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் கலவியில் கரைகண்டு பார்த்தார்; உலகம் முழுதும் அலைந்து பார்த்தார்; செவ்வாய் கிரகத்துக்கூட சென்று பார்த்தார்; இவை அனைத்தையுமே தனித்தனியாகவும், அனைத்து விதமான காம்பினேஷன்-களிலும் பல்லாயிரம் முறை செய்து பார்த்தார். ம்ஹூம்! அது என்ன பொய் என்பதை மட்டுமல்ல. 'ஒரு சொல் கதை' என்ற தலைப்பின் அர்த்தம் என்னவென்றுகூட அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
முப்பத்தியிரண்டு ஆண்டுகள் உருண்டோடின என்பது மனசாட்சியே இல்லாமல் சொல்லும் பொய். முப்பத்தியிரண்டு ஆண்டுகளும் காலத்திற்கே உரிய ஒய்யாரத்துடனும் அழகுடனும் சாவதானமாக நகர்ந்து சென்றன. கடைசியாக, அவர் அந்த இரண்டு விடைகளையும் கண்டேபிடித்துவிட்டார் - ஓர் ஆட்டு இடையனின் புல்லாங்குழல் இசையில் மயங்கி, கண்மூடிக் கிடந்தபோது. விடைகளை அவர் கண்டுபிடித்ததோடல்லாமல், அவைதான் அந்தக் கதாசிரியர் நினைத்த அர்த்தமும் என்று பூரணமாக நம்பினார். உடனே அந்த விடைகளைக் கொண்டுபோய் அவரிடம் சேர்த்துவிட்டு, அவரைக் கட்டித் தழுவி, ஒரு குகையில் அமர்ந்து அவருடன் ஓப்பியம் உட்கொண்டு, அந்தப் பரவசத்துடனேயே அவருடன் கலவிகொண்டு, அவரது வெற்று மார்புமீது தலைவைத்துக்கொண்டு, சாகும்வரை அவருடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று மிக விழைந்தார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. அந்தக் கதையை எழுதியது யாரெனத் தெரியவேண்டுமே முதலில்!
ஒரு சொல் கதை
PART ∞ + 1
வரம்
இரண்டு விடைகளையும் உணர்ந்த நேரத்திலிருந்து சற்றேறக்குறைய எழுபத்தி நான்கு மாதங்கள் கழித்து, பிரபுவின் முன்பாக அமர்ந்திருந்தார் அவர்.
பிரபு சொன்னார்.
"நேத்து நைட் தான் எனக்கு வாட்ஸாப்புல அந்த ஸ்டோரிய அனுப்பி இருந்தாங்க. தனக்கு ப்ரொப்போஸ் பண்ண யாரோ ஒரு பர்சனுக்கு அத அனுப்பி, அதுக்கு சரியான பதில் சொன்னா, அந்த பர்சன கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னதாக சொன்னாங்க."
அவருக்கு எல்லாம் விளங்கியது. 'அந்தக் கதாசிரியருக்குத் தேவை, தான் சொல்லாமலேயே அந்த விடைகளை உணரக்கூடிய மூளைகொண்ட ஒரு நபர். அதனால்தான், இன்னமுமே தன்னைக் காதலிப்பவர்களிடம், அந்தக் கேள்வியைக் கேட்டு வருகிறார் போலும். யார் கண்டார்? அந்த "குகையில் ஓப்பியம்" திட்டம் எழுத்தாளர் மனதிலும் உள்ளதோ என்னவோ?
"இந்தக் கதை எப்போது எழுதப்பட்டது என்று ஏதேனும் அவர் சொன்னாரா?" என்றார் அவர்.
"தெரியல. நேத்துத்தான் எலுதியிருக்கணும். அடிக்கடி இந்த மாதிரி எதாச்சும் வரும். எனக்கு கொஞ்சம் கூடப் புரியாது. நெறயா டைம் படிக்கவே மாட்டேன்."
அவருக்கு ஒரு வித மிரட்சியும் பயமும் தோன்றியது. அதே சமயம் பிரபுவின் மீது அவருக்கு இரண்டு பொறாமைகளும், ஒரு பரிதாபமும் தோன்றியது.
"புரியாது. புரிந்து இருப்பின் நீங்கள் இவ்வாறிருக்கமாட்டீர். நீங்கள் பாக்கியவான்."
பிரபு வெடித்துச் சிரித்தார். 'ஒரு நகைச்சுவையின் அளவுகோல் காலத்துக்குக் காலம், பிரபஞ்சத்துக்குப் பிரபஞ்சம் மாறும் போல' என்று எண்ணிக்கொண்டார்.
"இப்போது அவர் எங்கே இருப்பார்?"
"காலைல இங்கதா இருந்தாங்க. ஒரு பையன் வந்தான். 2 பேரும் ஸ்பாட் போடப் போனாங்க."
"எந்த இடமென்று அறிவீரா?"
"அதெல்லா சொல்லவே முடியாது. எங்க வேணாலும் போவாங்க. அந்தந்த நேரத்து மனநிலையப் பொறுத்தது."
"அலைபேசியில் அழைக்க இயலாதா என்ன?"
"சான்ஸே இல்ல. ஒருத்தர் ஃபோன ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவாங்க. இன்னொண்ணு ஃப்ளைட் மோடுல இருக்கும். முடிஞ்ச அளவுக்கு பேட்டரிய மிச்சம் பண்ணிவெச்சு, ரெண்டு ஃபோனும் ஆஃப் ஆகற வரைக்கும் பாட்டு கேப்பாங்க."
அவருக்கு உடனே எழுத்தாளரை ஆரத்தழுவி உதட்டு முத்தம் பகிர வேண்டும் எனத் தோன்றியது. அதை அவரது முகபாவனை கட்டியம் கூறுவதற்கு முன்னால், பிரபு மீண்டும் பேசி இடைமறித்தார்.
"ஒரு ப்ளேஸ் இருக்கு ஆனா. ஒருவேளை, அங்க இருக்கலாம்."
"அது எங்கே?"
"பக்கத்துல இருக்கற ஹில்ஸ். இதவிட துல்லியமா என்னால சொல்ல முடியாது. நீங்க ஹில்ஸ் முழுக்கத் தேடியே ஆகணும்."
அவர் புன்னகைத்துக் கொண்டார்.
"இரண்டு பேரின் புகைப்படம் ஏதாகிலும் உண்டா?"
"இருக்கு. வாட்ஸாப் பண்றேன். அதே நம்பர் தானே வாட்ஸாப்புக்கும்?"
"ஆமாம்."
எழுத்தாளரைப் பார்த்தாலே அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தாலும், சக வழிப்போக்கர்களிடம் காட்டி விசாரிப்பதற்காக அவர்களது புகைப்படங்களை வாங்கிக்கொண்டார். அவற்றை அவர் பார்க்கவில்லை. அழைத்துச்சென்ற பையனின் பெயரை மட்டும் தெரிந்துகொண்டு, அவனது புகைப்படத்தை மட்டும் பார்த்துக்கொண்டார். பிரபுவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். பையனின் பெயர் பூபதி.
கொண்டை ஊசி வளைவுச் சாலைகளில் ஒரு பேனைப் போல ஊர்ந்து சென்றார் அவர், ஒரு பாதசாரியாகவே. வழிப்போக்கர்களிடம் புகைப்படங்களைக் காட்டி விசாரிக்கும் போது கூட, அவர் வேறு திசையில்தான் பார்த்துக்கொண்டார். 'எழுத்தாளரை நேரில் பார்க்கப்போகிறோம்' என்ற உணர்ச்சிப்பெருக்கு அவரைத் திக்குமுக்காட வைத்தது. ஆனாலும் கூட, எழுத்தாளரைத் தேடிச் செல்லும் பாதை முடிவின்றி போய்க்கொண்டே இருக்கக்கூடாதா என்றும் விரும்பினார். சந்திக்கும் மகிழ்ச்சியைவிட, சந்திக்கப்போகும் மகிழ்ச்சி அவருக்கு கள்வெறி ஊட்டியது. ஏறத்தாழ, நாற்பது வருடப் போராட்டம், ஒரு வாழ்நாள் தியானம் முடிவுக்கு வருவதா? அவருக்கு அழத் தோன்றியது. அழுதார். அந்த மலைப்பாதையில் கேட்ட பறவைகளின் சப்த சிம்பொனியில், எவையெல்லாம் கேட்ட குரல்கள் என்று சிந்தனாவாதம் செய்துகொண்டே தொடர்ந்து நடந்தார்.
ஒரு கொண்டை ஊசி வளைவில் அனியல்பான கூட்டம் கூடியிருப்பதைக் கண்டார். அருகே சென்றார். ஒரு பெண்மணி நடுக்கம் மிகுந்த குரலெடுத்து சொல்லிக்கொண்டிருந்தார். அவரது மார்போடு ஒரு அழகிய பெண் குழந்தையைப் பொத்தியிருந்தார். பாதியிலிருந்து பார்த்த திரைப்படத்தைப் போல அந்தத் தாயின் குரல் அவருக்குக் கேட்டது.
"...... நா கத்தறேன். என் சைடு திரும்பவே இல்ல. கொழந்த வேற அங்கதா பாத்ரூம் போயிட்டு இருக்கா. கைய ரெண்டையும் விரிச்சுட்டு, அவளையே பாத்து சிரிச்சுட்டு..... அத நெனச்சாலே கொலையெல்லாம் நடுங்குது. எனக்கு மூச்சே நின்னுடுச்சு. ஓடிப்போயி, கொழந்தைய தூக்கிட்டு வெலகிட்டேன். நா மட்டும் போகலைனா, பைக் கொழந்தையையும் சேத்து..... கொழந்தையையும் சேத்து தூக்கிட்டு போயிருக்கும். நேரா வந்த பைக், அப்புடியே ஃபென்ஸ்-அ ஒடச்சுட்டு நேரா கீழ விழுந்துடுச்சு."
அத்தகைய நிகழ்ச்சியை விவரித்த பின்னர் என்ன விதமான முகபாவனை தரவேண்டும் என்று குழம்பியவராக அந்தத் தாய் காணப்பட்டார். அவர் பைக் விழுந்ததாகச் சுட்டிக்காட்டிய திசையில் ஒரு ஆழமான பள்ளத்தாக்கு தெரிந்தது. தவறி விழுந்தால், தலைமுடிகூட மிச்சம் ஆகாத அளவுக்கு ஆழம். நம்முடைய அவருக்கு ஒருவாறு ஏதோ புரிந்தது போல இருந்தது. அவரது கைகால்கள் நடுக்கமெடுத்தன. மூச்சு தொண்டைக்குழியில் நின்று இளைப்பாறிவிட்டு வெளிவந்தது. அங்கிருந்து விலகி தொடர்ந்து நடந்தார். சிறிதொரு நேரத்திலேயே ஒரு பாறை முகட்டை அடைந்தார். அந்தப் பாறையையே பார்த்துக்கொண்டு வெகுகாலம் நின்றார். பாறையின் மீது பூபதி படுத்திருந்தான். அவனது குரல்வளை பிளந்து, அதிலிருந்து வெளியேறிய செவ்வண்ணக் குருதி, திண்மத்துக்கும் நீர்மத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தது. உவகையோ, நாணமோ, பரவசமோ, கோபமோ, அழுகையோ அல்லது பெயரே வைக்கப்படாத வேறேதோ உணர்ச்சியோ அவனது கண்களில் தெரிந்தது. கீழ்த்திசையில் மிளிர்ந்தது, செக்கச் சிவந்த வானம்.
முற்றும்
Comments
Post a Comment