எகனைக்கு மொகனை

சம்பவம் 1
சிறு வயதில் என்னுடைய அக்காவின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தில் அவரது தோழிகள் எழுதியிருந்த க்ளீஷே வாசகங்களுக்குக் கீழே 'கமெண்ட்' எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் குறைந்தபட்சம் எனக்கு மட்டுமாவது சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். நிற்க. 

சம்பவம் 2
பல வருடங்கள் கழித்து வெங்கடேஸ்வரா கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, டிபாட்மெண்ட் கம்ப்யூட்டரில் நண்பர் தனசேகர் சேமித்து வைத்திருந்த புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. அப்போது அந்த அறையில் நான் மட்டுந்தான் இருந்தேன். பேயோன் எழுதிய "பேயோன் 1000" புத்தகத்தைப் படித்தபோது தன்னந்தனியனாக வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். 

சிரிப்பு ஓய்ந்து யோசித்துப் பார்த்தபோது, 'இப்படிக் கூட ஒரு புத்தகம் போடலாமா' என்ற வியப்புத் தோன்றியது. "பேயோன் 1000" என்பது வேறொன்றுமில்லை. பேயோன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் (இப்போது X) பதிவிட்ட 1000 ட்வீட்களின் தொகுப்புதான் அது. (ஆமா, ட்விட்டருக்கு X என்று பெயர் மாற்றினார்கள். ட்வீட்டுக்கு இப்போது என்ன பெயர்?)

மேலே சொன்ன 2 சம்பவங்களும் என் மூளையில் ஏதோ ஒரு விதத்தில் கலந்ததால் வந்த விளைவே நீங்கள் படிக்கப் போவது. உங்களுக்குச் சிரிப்பு வந்தால் மகிழ்ச்சி.

பீடிகை போதும். ஈரோடு புத்தகத் திருவிழாவில் கண்ணப்பன் பதிப்பகத்தாரின் "கடி ஜோக்ஸ்" என்ற புத்தகம் வாங்கினேன். எழுதியவர் பெயர் விக்னேஷ். அந்தப் புத்தகத்தில் இருந்த சில ஜோக்குகளும் அவற்றுக்கு நான் எழுதிய கமெண்ட்டுகளுமே இந்தப் பதிவு. அவை பின்வருமாறு. 

1) ஓட்டல்ல காசு கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க. ஆனா, பஸ்ல காசு கொடுக்கலன்னா பஸ் ஓட்டச் சொல்வாங்களா?
ஓட்டல்ல காசு கொடுக்கலன்னா, ஓட்டலவா ஆட்டச் சொல்றாங்க?

2) முக்காலியிலே உட்காரலாம்.
நாற்காலியிலே உட்காரலாம். ஆனா, தக்காளியிலே உக்கார முடியுமா?
உட்காரலாமே!

3) Tea cup-ல Tea இருக்கும். அப்போ World Cup-ல World இருக்குமா?
இப்போ என் முன்னாடி ஒரு tea cup இருக்கு. ஆனா அதுல tea இல்லையே!

4) கேள்வி: நெப்போலியனுக்கு பயம்னா என்னனு தெரியாது. ஏன்?
பதில்: ஏன்னா நெப்போலியனுக்கு தமிழ் தெரியாது.
தப்பு. Watch எட்டுப்பட்டி ராசா.

5) அம்மா அடிச்சா வலிக்கும்.
டீச்சர் அடிச்சா வலிக்கும்.
ஃப்ரண்ட்ஸ் அடிச்சா வலிக்கும்.
போலீஸ் அடிச்சா வலிக்கும்.
ஆனா, சரக்கு அடிச்சா வலிக்குமா?
வலிக்கும். கூடிய சீக்கிரம் வயிறு வலிக்கும்.

6) ஒரு அரசனுக்கு தூது வந்த புறாவுக்கு இரண்டு கால்களும் இல்லை.
"என்ன மந்திரி இது?"
"இதுதான் missed call அரசே.
Missed calls. 2 காலுமே இல்லைல.

7) வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ். கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம். எலிக்கு பூனையக் கண்டா பயம். பூனைக்கு நாயக் கண்டா பயம். நாய்க்கு மனுஷனக் கண்டா பயம். மனுஷனுக்கு மனைவியைக் கண்டா பயம். அவன் மனைவிக்கு கரப்பான் பூச்சியக் கண்டா பயம்.
அப்போ, மனைவி மனுஷங்க லிஸ்ட்-ல இல்லையா?

8) "அம்மா! எதிர் வீட்ல இருக்கற ஆண்ட்டி பேரு என்னம்மா?"
"சரோஜா. ஏன் கேக்குற?"
"அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?"
உங்கம்மா பேரு 'அம்மா'வா டா மடப்பயலே?

9) மதன்: சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?
வேலு: தெரியலடா மாப்ளே. நான் குடிச்சா புகைதான் வருது.
பொறுடா மாப்ளே.

10) முடியாது என்று சொல்பவன் முட்டாள். முடியும் என்று சொல்பவன் தான் புத்திசாலி. இப்போ சொல்லுங்க. என் செல்லுக்கு ரீசார்ஜ் பண்ண முடியுமா முடியாதா?
'முடியும்' என்று பொய் சொல்பவன் யார்?

11) "இரண்டு வருஷத்திற்கு முன்னாடி என்னோட வாட்ச் காவிரியில விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு."
"வாட்சா?"
"இல்ல. காவிரி."
எதுக்குடா அந்த 'ஆனா'?

12) வாழ்க்கை என்பது பனைமரம் போல. ஏறுனா நொங்கு. விழுந்தா சங்கு.
பனைமரம் கடல்லயா இருக்கு?

13) நீ எவ்வளவு பெரிய swimmer-ஆக இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியுமா?
முடியாது. அதுக்கு 'சின்ன' swimmer-தான் வேணும்.

14) அமெரிக்காவில் திருடனைக் கண்டுபிடிக்கிற மெஷினை கண்டுபிடித்து இருக்கிறார்களாம். அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களைக் கண்டுபிடிச்சிருக்கு. பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களைக் கண்டுபிடிச்சிருக்கு. இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம். சும்மாவா பின்ன? நாமெல்லாம் யாரு!!!
திருடர்கள்

15) "கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிகிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
"ஜெயிலை சுத்திப் பாக்கலாம் வாங்கன்னு கூப்பிடறான்."
ஏன்டா, அவனே பாவம் ஜெயில்ல இருக்கான். அவன்கிட்ட கேட்க வேண்டிய கேள்வியா இது?

16) ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்.
பரிசு ஷூவா இருந்தா?

17) "போலீஸ் செலக்சன் முடிஞ்ச அப்புறம் எதுக்கு வந்தே?"
"எல்லாம் முடிஞ்ச அப்புறம் வந்தாதானே சார் போலீஸ்!"
ஆனா, நீ இன்னும் போலீஸ் ஆகலடா பைத்தியம்.

18) ராமு: என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சுது.

சோமு: அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?

ராமு: இல்லை. அவங்க எல்லாம் மொட்டை.
ஏன்டா சோமு லூசுப்பயலே! நீச்சல் தெரிஞ்சா முடி நனையாதா?

19) "English Alphabets எத்தனை?"
"25... அதான் 'E' பறந்து போயிடுச்சே!"
B பறக்காதா?

நன்றி. வணக்கம்.

Comments

  1. Can't say anonymous13 September 2024 at 03:05

    12, 16, 18, 19👌🏼👌🏼😃😃😃

    ReplyDelete
  2. Tweets are simply called 'posts' now. 'Xeets' nu sollalamnu konjam peru idea propose pannirukanga.

    ReplyDelete
  3. Can't say anonymous13 September 2024 at 05:04

    I've tried some.. Just for fun

    1. பஸ் ஓட்டுறவங்கள 'ஓட்டுநர்' னு சொல்லுறோம். அப்போ ஹோட்டல்/மாவு ஆடுறவங்கள 'ஆட்டுநர்' னு சொல்லலாமா?

    2. உக்காரலாமே! தக்காளி விலை வீழ்ச்சியின் போது தாராளமா.

    3. Tea cup ல டீ இருக்கும். ஆனா T-shirt ல டீ இருக்குமா?

    இருக்குமே. டீ கொட்டீருந்தா.

    4. And his other movies like தென்கிழக்கு சீமையிலே and விருமாண்டி too.

    5. அம்மா அடிச்சா வலிக்கும் - what about "தாய் அடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன்"

    காத்து அடிச்சா வலிக்குமா?

    வலிக்கும். சைக்கிள் டயர் க்கு காத்து அடிச்சு பாத்தா தெரியும்.

    6. அப்பொழுது புலிகேசிக்கு தூது வந்த புறா 'food delivery' யா?

    7. அப்போ கல்யாணம் ஆகாத 'மனுஷங்க' ளுக்கு இந்த வட்டம் வேல செய்யாதா?

    8. இவனோட அம்மா தா house owner. So she goes to Saroja and says "சரோஜா! சாமான் நிக்காலோ"

    9. விரைவில் திரைப்படங்களுக்கு முன்பு திரையிடப்படும் விளம்பரத்தில் வேலு இடம் பெறுவார். (கரகரத்த குரலில் ) "நான்தான் வேலு"

    10. 'முடியும்' என்று பொய் சொல்பவன் சாமர்த்தியாசாலி / சந்தர்ப்பவாதி

    11. அவன் வாட்ச் என்ன டைனோசர் காலத்துல வந்து விழுந்த மாதிரி இன்னொரு விண்வெளி கல்லா? 'ஆனா' போடறக்கு.

    12. ஒரு வேளை UAE ல இருக்கற 'Palm Islands' ஆ இருக்குமோ?

    13. டம்ளர்ல நீச்ச தண்ணிதா குடிக்க முடியும். நீச்சல் அடிக்க முடியாது.

    14. அமெரிக்கால கண்டுபிடுச்ச மெஷின் இந்தியாவுல தொலைஞ்சு போகணும்னு விதி இருந்தா இப்படிதா நடக்கும்.

    15. கபாலி கிட்ட மலேஷியாவ சுத்திப் பாக்க கூட்டிப் போகச் சொல்லி கேட்டுப் பாப்போம்.

    16. கால் மட்டும் என்ன தனியாவா ஓடுது?

    17. சாரு சினிமால போலீஸ் வேஷம் போடறக்கு வேணா போலாம்.

    18. அப்போ அந்த நாலு தம்பிகளயும் தள்ளி விட்டது ராமு தா. தம்பிக பேரு லட்சுமணு, பரது, சத்ருகு வா? நாலாவது தம்பி பேரு தெரியல.

    19. 22 தா இருக்கு. ஏன்னா B யும் E யும் பறந்து போகும்போது CD யையும் தூக்கிட்டு போய்டுச்சு படம் பார்க்க / பாட்டு கேக்க.

    ReplyDelete
    Replies
    1. பெரிய புத்திசாலின்னு நெனப்போ 😏

      Delete
  4. ராமு, லட்சுமணு, பரது 🤣🤣🤣🤣 Made my day.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?