6G to 12C

எண்ட்ரன்ஸ் எக்ஸாம்

அதுவரைக்கும் கண்பார்வை இல்லாம இருந்த ஒரு ஆளு, திடீர்னு பார்வை வந்து, எடுத்த எடுப்புல நயாகரா பாத்தா எப்புடி இருக்குமோ, அப்புடித்தா இருந்துச்சு எனக்கும் - மொதல் தடவ Diamond Jubilee ஸ்கூல நேருல பாத்தப்போ!

அதுவரைக்கும் ஸ்கூல்-னு சொன்னா 20 x 40 ஸ்கொயர் ஃபீட்-ல, மங்கிப்போன கலரோட இருந்த அயலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மட்டுந்தா எனக்குத் தெரியும். மொதல் டைம், சிக்ஸ்த்-ல சேத்தறதுக்கு எங்கப்பா கூட்டிட்டு போனாரு. ஹைஸ்கூல்-ல சேந்ததுக்கு அப்பறமா "பூடீஸ்" வாங்கித் தர்றதா எங்கப்பா சொல்லியிருந்ததால, சந்தோசத்தோடதான் நா போயிருந்தேன். ஸ்கூலோட மெய்ன் கேட் முன்னாடி நின்னு பாத்தாவே, ஸ்கூல் க்ரெளண்ட் தெரியும். எனக்குத் தெரிஞ்சு வேற எங்கயும் அவ்ளோ பெரிய க்ரெளண்ட நா இதுவரைக்குமே பாத்தது இல்ல. அதப் பாத்த உடனே எனக்கு வந்த மலைப்பு இன்னும் போகல எனக்கு. உள்ள போகும் போது, ரோஸ் கலர்-ல ஒரு விஸ்தாரமான கட்டடம் தெருஞ்சுது. மொத்தம் மூணு மாடி. நம்மளோட க்ளாஸ் அங்க எங்காச்சும் இருக்கோணுமுனு சாமிய கும்புட்டுக்கிட்டேன். ப்ரேயருக்கு அன்னநடை போட்டு வந்த பசங்கள மெரட்டி, வேகமாத் தொரத்தியுட்டு இருந்தாங்க,  வாயில விசில் வெச்சு ஊதீட்டு இருந்த ரண்டு மூணு பேரு. அவங்கள எல்லா P.E.T னு கூப்புட்டாரு, மேடை மேல நின்ன ஒரு சார் (ஹெட் மாஸ்டராத்தான் இருக்கணும்-னு நெனச்சுக்கிட்டேன்).
என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் எங்க இருக்குதுனு கேட்டு அங்க போனோம். வைரவிழாவுல சேரணுமுனா ஒரு நுழைவுத் தேர்வு எழுத வேண்டி இருந்துச்சு. அதுல பாஸ் பண்ணாத்தான் சிக்ஸ்த்-ல சேர முடியும். மே மாசத்துல, மெட்ரிக் ஸ்கூல் க்ளாஸ் ரூம்ல, அந்த நுழைவுத் தேர்வுக்காக கோச்சிங் க்ளாஸ் எல்லா நடந்துச்சு. ரிசல்ட் போயி பாத்தோம். நானும் பாஸ் பண்ணீருந்தேன். ப்ரேயர்ல நீராரும் கடலுடுத்த பாட ஆரம்பிச்சுருந்தாங்க.

6G
ஸ்கூலோட தெக்குப் பகுதியில லாஸ்ட் க்ளாஸ், 6G. அத ஒட்டியே சத்துணவு சமையல்கூடம் இருக்கும். எங்க க்ளாஸ ஒட்டியே 6A வரைக்கும் லைனா இருக்கும். 6A மட்டும் English Medium. மத்த எல்லா க்ளாசும் தமிழ் மீடியம். வருசா வருசம் அடுத்த ஸ்டேண்டர்ட் போகும்போதும் B க்ளாஸ்ல இருந்து G க்ளாஸ் வரைக்கும் இருக்கற பசங்க எல்லாரையும் shuffle பண்ணி, புதுசா க்ளாஸ் பிரிப்பாங்க. வருசம் தவறாம நா சாமி கும்புடுவேன், நம்ம க்ளாஸ் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும், ஒரே க்ளாஸுக்குப் போகணும்-னு. ஆனா ஒருவாட்டி கூட சாமிக்கு காது கேக்குலனு நெனைக்கறேன். ஒவ்வொரு வருசமும் புதுப்புது ஃப்ரண்ட்ஸ் கெடச்சாங்க. A க்ளாஸ் பசங்க மட்டும் அப்புடியே 6A, 7A, 8A- னு போயிட்டு இருப்பாங்க. அவனுகள பாத்தா எங்களுக்கெல்லாம் வயித்தெரிச்சலா இருக்கும். ஆனா, நாங்க டென்த் வரும்போது, B to G-னு ஆறு க்ளாஸ் பசங்களுமே தெரிஞ்ச பசங்களாத்தான் இருந்தோம். 

சிக்ஸ்த் படிக்கும் போது, மத்த பசங்க முன்னால சீன் போடறதுக்கு சில பல தகுதிகள் தேவப்பட்டுச்சு.

1) க்ளாஸ் லீடரா இருக்கணும்.

2) மொதல் 3 ரேங்க்-கு உள்ள வாங்கறவனா இருக்கணும்.

3) ஸ்கெட்ச் செட், வாட்டர் கலர் செட் - ரெண்டும் வெச்சுருக்கணும்.

4) NCC ல இருக்கணும்.

5) 'மத்த க்ளாஸ் பசங்க எத்தன பேர தெரியும்' அப்படிங்கறது முக்கியமான காரணி. அதுலயும் சீனியர் பசங்கள தெரியும்-னு சொன்னா, செம கெத்து தான்.

6) NRS சாருக்கு பேரு தெருஞ்ச பையனா இருக்கணும்.

7) எதாச்சும் ஒரு டீச்சருக்கு (ஆணோ, பெண்ணோ) வலது கையா இருக்கணும்.

8) 2 பசங்களயாச்சும் அடிச்சிருக்கணும்.

9) தயக்கமே இல்லாம கெட்ட வார்த்த பேசத் தெரிஞ்சு இருக்கணும்.

10) 'எய்த் வரைக்கும் ஹாஃப் ட்ரெளசர்தா போடணும்' அப்படிங்கற ரூல் இருந்தாலும், பேண்ட் போட்டு வரணும்.

11) ப்ரேயர்ல முன்னால நிக்கறவனா இருக்கணும்.

12) சயின்ஸ் வாத்தியார் கிட்ட டியூஷன் போறவனா இருக்கணும். 

இன்னும் நெறயா இருக்கு.

அப்போ ஹெட் மாஸ்டரா இருந்த A. கோவிந்தராஜூ சாருக்கு சிக்ஸ்த் பசங்க மேல எப்பவும் ஒரு தனி கவனம் இருக்கும். அவர கோவிந்தராஜூ சார்-னு சொன்னா நல்லா இருக்காது. கவிதை எல்லாம் எழுதுவாரு. இனியன் அப்படிங்கற புனைப்பேருல. அது ஒரு அதிகாரப் பூர்வ பேராவே ஆயிடுச்சு. So, அவர் பேரு இனியன் கோவிந்தராஜூ. இருந்திருந்தாப்புடி, க்ளாசுக்குள்ள வந்துடுவாரு. அவரு வந்தாவே எனக்கு ஜாலியாயிடும். எல்லாப் பசங்களுக்கும் அப்படித்தா இருக்கணும். அவருக்கு குறள் ரொம்பப் புடிக்கும். அதனால, random ஆ, எதாச்சும் ஒரு குறள் பத்தி நடத்துவாரு. புக் எல்லா தொடவே மாட்டாரு. இல்லைனா, எதாச்சும் பொது அறிவு கேள்வி கேப்பாரு. 'பதில் தெரியல'-னு யாராச்சும் சொன்னா, 'அப்படி,தைரியமா சொல்லு'-னு சொல்லுவாரு. ஆனா வேணுமுன்னே சில பேரு கெத்தா சொல்லும்போது கண்டுபுடிச்சுருவாரு. தன்கிட்ட இருக்கற நோட்ட எடுத்து அந்தக் குறிப்பிட்ட பையன் பேரக் குறிச்சுக்குவாரு. "நீ பதில் கண்டுபுடிச்சுட்டு வந்து சொல்லு"-னு சொல்லிடுவாரு. அடுத்த டைம் க்ளாசுக்கு வரும்போது கரெக்டா அந்தப் பையனக் கேப்பாரு. அதுக்கு முன்னாடியே அவன் பதில கண்டுபுடுச்சுட்டா, எப்போ வேணாலும் அவரோட கேபினுக்குப் போலாம். ஒரு பேஸ்கட் பால் கோர்ட்ல முக்காவாசி இருக்கும் அந்தக் கேபின். உள்ள ஒரு எடத்துல ஸ்கூல் மெய்ன் பில்டிங்கோட தெர்மாகோல் மினியேச்சர் இருக்கும். அதப் பாக்கவே நெறயாப் பசங்க போவோம் அங்க. ஒரு சமயத்துல ஒருத்தர்தான் உள்ள இருக்க முடியும் அவர்கூட. வாத்தியாரு, பசங்க அப்படிங்கற பேதமெல்லா இருக்காது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை. ஒரு தடவ, என்ன ஒரு பையன் அடிச்சுட்டான்னு க்ளாஸ் லீடர் அவரு கேபினுக்கு என்னக் கூட்டீட்டுப் போனான். அடிச்சவன் மேல லீடருக்கு முன்பகை. அதுதா காரணம். எங்க ரெண்டு பேரையும் பாத்து ஒரு விசயம் சொன்னாரு இனியன் சார். திருக்குறள அவரு ஒரு வாழ்க்கை நெறியாவே எடுத்துக்கிட்டார்னு எனக்கு அப்போ புரிஞ்சுது. எனக்குத் திருக்குறள் மேல காதல் வர்றதுக்கு மிக முக்கியமான காரணம் இனியன் சார்தான்.

Comments

  1. Wow pa 😍 I'm really jealous on you because I don't have this much memory power. Your writing possesses something in it.

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதுங்க திரு படிக்க நல்லா இருக்கு நினைவுகளை உன் வாக்கிய வார்த்தைகளில் நினைவுகூர...

    ReplyDelete
  3. Good story sir 😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?